எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 நவம்பர், 2010

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றல்., ருக்மணி அம்மா., கார்த்திக்., மரா., ராமலெக்ஷ்மி., தினேஷ்குமார்., தமிழ் உதயம்., கோபி ராமமூர்த்தி..

ஐப்பசியில் தீபாவளி ...அடைமழை.. பட்டாசு., பட்சணம்., புது உடை எல்லாம்.. இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய ப்லாக்கர்களின் படைப்புக்கள் .. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரிலும்., நவம்பர் மாத இதழிலும்.. அவசரத்தில் தீபாவளி மலரில் என்னுடையது விட்டுப் போய்விட்டது .. அதற்கென்ன மக்காஸ்.. பொங்கல் இதழில் எழுதுவோம்.. நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும்., திண்ணையிலும் தேவதையிலும் வந்திருக்கிறது..
இது நம்ம புதுகைத்தென்றல் ஸ்பெஷல்.. திரும்பி வந்த அம்பு ..நல்ல நச் சிறுகதை.. வாழ்த்துக்கள் கலா ஸ்ரீராம்..:))


இது நம்ம ருக்மணி அம்மாவின் கட்டுரை.. மத்வரின் கதை.. திரும்பி நின்ற நாயகனாய்.. மிக அருமை அம்மா..:)) வாழ்த்துக்கள்..

நம்ம கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன் கவிதை இது.. திண்ணையிலும் மனிதர் வெளுத்துக் கட்டுறார்.. கார்த்திகை என்ற கவிதை.. வாழ்த்துக்கள் கார்த்திக்..

மராவின் கவிதை இது.. மகாப் பெரியவாள் பற்றியது.. கருணையின் வடிவே..
வாழ்த்துக்கள் மரா..
நம்ம ராமலெக்ஷ்மி ராஜன் சும்மாவே கலக்குவாங்க.. மிக அருமையான கதை மற்றும் படங்களுக்குச் சொந்தக்காரர்.. அவங்களோட பொட்டலம் கதை அருமை.. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..

தினேஷ்குமார் மோகன்தாஸோட கவிதை.. மாதங்களில் காதலி.. வித்யாசமான தலைப்பில் அருமையான கவிதை .. வாழ்த்துக்கள் தினேஷ்..

முக்கியமான விஷயம் போன பகிர்வுல விட்டுப் போச்சு.. நம்ம தமிழ் உதயம் அவர்களோட கதை வெளியான விபரம் எனக்கு இப்போ புத்தகம் கைக்குக் கிடைத்த பின்தான் தெரிந்தது.. தமிழ் உதயத்தின் மிகச் சிறப்பான கதை இது .. யோகி என்ற பெயரில் விட்டு விடுதலையாகி என்ற கதை எழுதி இருக்கார்.. வாழ்த்துக்கள் தமிழ் உதயம்..

கோபி ராமமூர்த்தியின் பிடிவாதம் கதையும் வெளியாகி இருக்கு.. மிக அருமையான கதை.. லண்டன் ஆர். கோபி என்ற பெயரில்..
வாழ்த்துக்கள் கோபி..
அப்புறம் முக்கியமான விஷயம் மக்காஸ்.. விட்டுப் போன பகிர்வுகள் எல்லாம் இந்த இதழில்தான் விட்டுப் போய் இருக்கு.. இனி அடுத்த இதழ்களிலும் வெளிவரலாம்.. எனவே உங்க பகிர்வுகளை அனுப்பிக்கிட்டே இருங்க.. ஒருமுறை வராட்டா என்னன்னா.. அந்த படைப்பு முழுமையா இல்லைனு அர்த்தம்.. அடுத்தமுறை அது நம்மை செப்பனிட உதவும்.. எனவே முயற்சி செய்துக்கிட்டே இருங்க.. வெல்வீங்க.. அனைவருக்குமான வாழ்த்துக்களும் அன்பும்..

22 கருத்துகள்:

  1. லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படைப்புகளை வெளிட்டதற்கு உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்..

    வெளியான அனைத்து படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    என் மனைவியும் அவரது படைப்புகளை அனுப்ப விரும்புகிறார். எங்கே அனுப்பணும் தேனக்கா.. உங்க மெயிலுக்கு அனுப்பினால் போதுமா..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அக்கா
    நான் கனவிலும் நினைத்திராத பாக்கியம் பெற்றேன் தங்கள் தமிழ் உணர்வினால்....... தாழ்பணிந்த வணக்கம் அக்கா........

    எனக்கு கவிதை எழுத அவ்வளவாக அறியாது ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என் அக்கா எனக்கும் என் அண்ணனுக்கும் ஒரு சிறு போட்டி வைத்தாங்க யார் நல்ல கவிதை எழுதராங்கனு பார்ப்போம் என்று அன்று கவி எழுத தெரியாது எழுதிய முதற்கவிதை இது .....

    இன்று என் எழுத்துக்களை ஊக்குவித்து எனை எழத தூண்டிய பதிவுலகிற்கும் உங்களுக்கும் பதிவுலக கலையரசி கரங்கோர்க்கும் தமிழ் அன்பு சகோதரிகள் சித்ரா சாலமன்,ஹேமா,பிரியா , நிலாமதி, அவர்களுக்கும் உடன்பிறவா உடன்பிறந்த சகோதரர்கள் சி.பி.செந்தில் குமார் மற்றும் பன்னிகுட்டி ராமசாமி, ஹரீஷ் நாராயணன்,மோகன்ஜீ,வினோத்,எஸ்.கே, அவர்களுக்கும் மற்றும் பதிவுகிர்க்கும் என் மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.....

    தமிழ் வாழ
    தடை தகர்ப்போம்
    தரணியில்
    அன்றும்
    இன்றும்
    என்றும் ..........

    பதிலளிநீக்கு
  3. அக்கா இங்கு என் வணக்கத்தை சமர்பித்துள்ளேன் தாங்களும் எனை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
    அனைவரும் வருக தமிழ் ஆதரவு தருக
    http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  4. தங்கள் படைப்பை பத்திரிகை ஊடகத்தில் படைத்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.////

    நன்றி கிரிஜா ராகவன், தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  5. தீபாவளி ஸ்பெஷல் மலரில் ப்ளாக்கர்களின் படைப்புக்கள் சூப்பர் தேனக்கா.அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி தேனம்மை.

    படைப்பு இடம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கு மிக்க நன்றி.

    மற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மகிழ்ச்சியாக உள்ளது. நான் வளர்கிறேனே மம்மி!

    பதிலளிநீக்கு
  8. படைப்புக்களை வெளியிட்ட லேடீஸ் ஸ்பெஷலுக்கும் நம் நட்பின் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
    நாங்களும் படைப்புக்களை அனுப்பலாமா? அனுப்பலாம் என்றால் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  9. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அனைத்து படைப்பளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. படைப்பாளிகள் அனை்்ுக்கு்் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள் அனைவருக்கும். ஊக்குவிக்கும் தேனுக்கும் நன்றி. பத்திரிகையில் பெயர் வருவது என்பது ஒரு அளவில்லாத உற்சாகத்தைக் கொடுக்கும் அருமருந்து. அதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. அக்கா, பாராட்டுகள் உங்களுக்குத்தான் சேர வேண்டும். எனது நன்றிகள் அக்கா

    பதிலளிநீக்கு
  15. நன்றி புவனா., ஸ்டார்ஜன்.. ( thenulakshman@gmail.com ) க்கு அனுப்ப சொல்லுங்க ஸ்டார்ஜன்..., நன்றி தினேஷ்., ரமேஷ்., யாதவன்., ஆசியா., ராமலெக்ஷ்மி., கோபி., குமார்., சரவணா., வெறும்ப., ஸாதிகா., ஜலீலா., வல்லி சிம்ஹன்., மாதேவி., கார்த்திக்., கோமதி அரசு..

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  17. ஆண்களுக்கும் வாய்ப்பு உண்டு குரு..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...