எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 30 செப்டம்பர், 2019
ஞாயிறு, 29 செப்டம்பர், 2019
காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.
1321. இன்னம்புட்டு - இன்னும் கொஞ்சம். இன்னம் இம்புட்டு. இன்னம் இவ்வளவு.
1322. கிண்டிக்
கிழங்கெடுத்துப்புடுவாக - ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றித் துருவித் துருவிக் கேள்வி கேட்டால் அதை கிண்டிக் கிழங்கெடுத்துப்புடுவாக என்று சொல்வது வழக்கம். கிழங்கை அகழ்ந்தெடுப்பதுபோல் விஷயத்தைத் (தோண்டி வெளியே எடுத்து விடுவார்கள் ) வாங்கி விடுவார்கள்.
1323. பொறமாட்டாதவள் - பெண்கள் தான் ஆசைப்பட்ட ஒரு விஷயம் நடக்காவிட்டால் நான் என்ன பொறமாட்டாதவளா என்று ஆதங்கத்திலோ ஆத்திரத்திலோ கேட்பதுண்டு. அல்லது ஒரு விஷயத்துக்கு அல்லது தகுதிக்கு ஒருவர் லாயக்கில்லாவிட்டாலும் அவ பொறமாட்டாதவ என்று சொல்வதுண்டு. எதற்கும் அவசரப் படுபவர்களையும், பொறுக்காதவர்களையும் கூட சமயத்தில் பொறமாட்டாதவள் என்று குறிப்பிடுவதுண்டு.
1324. அரிச்செடுத்துப்புடுவா - தான் விரும்பிய விஷயம் நடக்க வேண்டி தொணதொணத்தோ, தொடர்ந்து சொல்லியோ, அனத்தியோ அதை செயல்படுத்திக்கொள்பவர்களை அரிச்செடுத்துப்புடுவா என்று சொல்வதுண்டு. தான் நினைத்தது நடக்க வேண்டி ஆசிட் ஊற்றினால் அரித்தெடுப்பது போல் தொடர்ந்து கோபித்தோ கொந்தளித்தோ பேசுதல்.
சனி, 28 செப்டம்பர், 2019
சூலாட்டுக்குட்டி.
சூலாட்டுக்குட்டி.
மல்லிகைப்பூ வாசம் மூக்கைத் துளைத்தது. அதையும் மீறி அடித்துக்கொண்டிருந்தது
மூத்திர நாற்றம். மப்ளரைச் சுற்றியபடி கதவைத் திறந்து பார்த்தவர் வாக்கிங் போகும் எண்ணத்தைக்
கைவிட்டு கைப்பிடியில் மாட்டியிருந்த மல்லிகைப்பூப் பையை எடுத்து அவசரமாகத் தாழ் போட்டார்.
’திரும்பவும்
ஒண்ணுக்குப் போயிட்டாளா’. யோசனையாய் படுக்கை அறைக்கு வந்தவர் போர்த்திப் படுத்திருந்த
மனைவியின் முகத்தில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றினார். மப்ளரைக் கழட்டி வீசினார்.
வெள்ளி, 27 செப்டம்பர், 2019
ஜெர்மனியின் செந்தேன் மலர்கள். மை க்ளிக்ஸ், FLOWERS AT GERMANY. MY CLICKS.
ஜெர்மனி மக்களுக்குப் பூக்களின் மேல் வெகு காதல். வீட்டின் முன்புறம் இருக்கும் சிறு பகுதிகளிலும் சரி, ஃப்ளாட் வீடுகளின் பால்கனிகளிலும் சரி கொத்துக் கொத்தாக அடர் நிறத்தில் பூக்கள் வளர்த்து மகிழ்வார்கள்.
வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே இங்கு வேனிலும் பூக்கும் காலமும். மற்ற எட்டு மாதங்களில் குளிரும் பனியும் மூடிக்கிடக்கும். இருந்தும் ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் தங்கள் தோட்டத்தை வெகு சிரத்தையாக பூச்செடிகள் வைத்துப் பராமரிக்கிறார்கள். ஜன்னல்களில் பூந்தொட்டிகள் வைத்து அலங்கரித்து மகிழ்கிறார்கள். இந்தச் செடிகள் மரங்களிலும் ஒரு விநோதம். கொடும் பனியில் இலைகள் உதிர்ந்து குச்சியாக (ஹைபர்நேட்) ஆனாலும் மிகுந்த வீர்யத்துடன் அடுத்த வேனிலில் உயிர் பெறுகின்றன !.
சிறு சிறு ப்ரைவேட் தோட்ட ஏரியாக்களில் பகுதி பகுதியாக சிலர் வாங்கி தேவையான காய் கனி பூக்களை விளைவித்துக் கொள்கிறார்கள். மெட்ரோ அல்லது ட்ராமில் டூயிஸ்பர்க்கில் இருந்து டுசில்டார்ஃப் செல்லும்போது காணக் கிடைக்கும் கண்கொள்ளாக் காட்சிகள் நிறைய.
எங்கள் மகன் வசிக்கும் ஃபிஷர் ஸ்ட்ராஸேயில் கீழே பூராவும் கடைகள் என்பதால் அங்கே நோ பார்க்கிங். சைக்கிளிலில் செல்லலாம் அல்லது நடந்து செல்லலாம். ஒவ்வொரு கடையின் முன்பும் சதுரம் அல்லது வட்ட அளவிலான பகுதிகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் பல்வேறு வகையான பூச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. அது காணவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பூக்களை வளர்ப்பதில் மட்டுமல்ல . அவற்றைப் பரிசளிக்கவும் விரும்புவார்கள். ஜெர்மானியர்களின் கலாச்சாரத்தில் பூக்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. தென்மேற்கு ஜெர்மனியின் மைனாவ் ஐலாண்ட் என்ற தீவு பூக்களின் தீவுன்னு அழைக்கப்படுது. ஈஸ்டருக்கு முன்னான வாரங்களில் ஸ்ப்ரிங் ஃப்ளவர்ஸ் எனப்படும் பூக்கள் ஈஸ்டர் மரத்தின் பக்கவாட்டுகளில் வைக்கப்படுகிறது.
சூரியகாந்திப் பூவுக்கும் ரோஸுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. கலர் செவ்வந்திகள், துலிப்ஸ், லில்லிப்பூக்கள், ஆகியவற்றோடு கார்னேஷன் எனப்படும் வெள்ளை, சிகப்பு, பிங்க் நிறப் பூக்களிலாலான பூங்கொத்து ரொம்பவே விசேஷம்.
பூங்கொத்தாகவும் பூந்தொட்டியாகவும் இங்கே ரெவே, ஐடில் ( REWE , IDIL ) ஆகிய கடைகளில் கிடைக்கும். எவ்வளவு பூக்கள் இருந்தாலும் கார்ன்ஃப்ளவர் எனப்படும் வயலட்/பர்ப்பிள் நிறப் பூதான் இங்கே தேசிய மலர் !.
நண்பரின் இல்லத் தோட்டத்து மலர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)