எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.

இரவு :- முன்னுரை.


எனது முன்னுரையுடன் இன்னொரு இன்னூல்.

நூல் வெற்றி பெறவும் திக்கெட்டும் உங்கள் புகழ் பெருகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக் !



கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் சிறுகதைத் தொகுப்பான இது மென்மையான உணர்வுகளால் பின்னப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள சராசரி மனிதர்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிப்பது. மேலும் இவரது கதைகள் குண்டு வைத்தல், குழந்தைப்பேறின்மை, இணையத்திற்கு அடிமையாதல் போன்றவற்றை இன்றைய சூழலில் மனிதன் எப்படி எதிர்கொள்வது என்ற இன்றையப் ப்ரச்சனையைப் பேசுகின்றன.
ஆச்சர்யமாக இத்தொகுப்பின் நடுவில் ஒரு க்ரைம் & த்ரில் தொடரும் இடம்பெற்றுள்ளது. மிக சுவாரசியமாக தனக்கு க்ரைம்தொடர் எழுத வரும் என்பதையும் நிரூபித்துள்ளார் கார்த்திக்.
தவறு செய்தவன் தண்டனை கொள்வான் என்பது முதல் கதையான இரவு மெய்ப்பிக்கிறது. மணிக்கணக்குப் பிசகாமல் நகரும் கதை. சட்டென்று தீர்ப்புக் கூறிவிட்ட முடிவு மிகவும் பொருத்தம். வாழ்வில் நன்மையில் நம்பிக்கையும் தீமையை விட்டு விலகியும் இருக்கக் கற்பிக்க இம்மாதிரிக் கதைகள் இன்றைய தேவை.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கார் ஆசுபத்திரியும் குலைநடுங்க வைத்த வெள்ளமும்.

1861. ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்துமென்ன. வேரென இருந்தவரைக் காணலியே..

1862. உற்றம் சுற்றம் சூழச் செல்வதற்கும் கொடுத்துவைத்தவர்கள் மிகச் சிலரே.

1863. பருவம் முகிழ்த்த சூதகம்
பச்சிளம் பிறப்பின் சீராம்.
நரைத்த திரைத்த கேதம்
ஞமனின் நடுவன் சீராம்

மூங்கில் நுணலாய்
உருவம் சாய்த்த
இரும்பது துரும்பாய்
உள்ளம் ஒய்த்த
உவப்பை ஒழித்த
பெருங்கழி ஓதம்
நுதலின் நிபந்தம்.

1864. காற்றின் இசைவுக்கேற்ப
நடனமாடிக்கொண்டிருக்கிறது
அசைவறியாப் பூ.

1865. தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசுதம்மா சாரல் இன்பத் தூறல்.. :) <3 p="">

1866. ரம்புட்டான் கிலோ 200 ரூ. ஆனா குரங்கு மாதிரி கீறி பிச்சு தின்ன வேண்டி இரிக்கி.. ஹிஹி...

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

ஸ்யமந்தகமணி படுத்திய பாடு. தினமலர். சிறுவர்மலர் - 32.


ஸ்யமந்தகமணி படுத்திய பாடு.

ஆண்டவனைக் கூட அபவாதத்தில் ஆழ்த்திய பொருள் என்றால் அது ஸ்யமந்தகமணி என்றொரு ரத்னஹாரம்தான். அதற்கு என்ன சிறப்பு அது என்ன அபவாதத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம் குழந்தைகளே.

துவாரகையில் சத்ராஜித் என்பவர் வசித்துவந்தார். அவருடைய பக்தியைப் பாராட்டி சூரியபகவான் கொடுத்ததுதான் ஸ்யமந்தகமணி என்றொரு ஹாரம். அது சாதாரண ஹாரம் மட்டுமல்ல. அது இருக்கும் இடம் மங்கலம் பொங்கும். ஆரோக்கியம் அளிக்கும் அது மட்டுமல்ல தினமும் எட்டு தோலா தங்கமும் கொடுக்கும்.

இப்பிடியாகப்பட்ட பொருள் ஒரு சாதாரண மனிதனிடம் இருப்பதை விட துவாரகையின் ராஜாவான உக்ரசேனரிடம் இருந்தால் தேச நலனுக்கும் நாட்டு மக்களின் செழிப்புக்கும் உதவுமே என்று கிருஷ்ணர் நினைத்தார். அதனால் அதை ராஜா உக்ரசேனருக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் சத்ராஜித்துக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லை. அந்த ஸ்யமந்தகமணியை அணிந்துகொண்டு அவனது தம்பி ப்ரசேனன் என்பவன் வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் மிருகங்களைத் துன்புறுத்தியதால் ஸ்யமந்தகமணியின் புனிதம் குறைந்தது. ஒரு சிங்கம் அவனை வேட்டையாடி அந்த மணியை வாயில் கவ்விச் சென்றது.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

விளையாட்டு வினையாகும். தினமலர். சிறுவர்மலர் - 31.


விளையாட்டு வினையாகும். :-

மன்னனானால் என்ன மகரிஷி ஆனால் என்ன ? எதில்தான் விளையாடுவது என்ற வரைமுறை இருக்கிறது. அப்படி இல்லாமல் ஒரு ராஜா  தவமியற்றிக் கொண்டிருக்கும் முனிவரின் கழுத்தில் விளையாட்டாக ஒரு செத்த பாம்பை மாலையாகப் போட்டுவிட்டான். அந்த முனிவரின் மகன் உக்கிரத்துடன் விழித்து கமண்டல நீரை அவன்மேல் தெளித்து ஒரு வாரத்துக்குள் அவன் நாகத்தால் இறப்பான் என பிடி சாபம் கொடுத்துவிட்டார். அதனால் என்னென்ன குளறுபடிகள் ஏற்பட்டன. அவை எப்படி நீங்கின என்று பார்ப்போம் குழந்தைகளே.

குருஷேத்திரப்போர் முடிந்த சமயம். ஹஸ்தினாபுர அரண்மனையில் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இறப்பிற்குப் பிறகு அவரது பேரன் பரீட்சித்து மன்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது தாய் உத்தரை. உலகிற்கே மன்னர், தான் ஒரு சக்கரவர்த்தி என்ற மமதை அவரிடம் இருந்தது.