ஆண்டவனைக்
கூட அபவாதத்தில் ஆழ்த்திய பொருள் என்றால் அது ஸ்யமந்தகமணி என்றொரு ரத்னஹாரம்தான். அதற்கு
என்ன சிறப்பு அது என்ன அபவாதத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம் குழந்தைகளே.
துவாரகையில் சத்ராஜித் என்பவர் வசித்துவந்தார். அவருடைய பக்தியைப்
பாராட்டி சூரியபகவான் கொடுத்ததுதான் ஸ்யமந்தகமணி என்றொரு ஹாரம். அது சாதாரண ஹாரம் மட்டுமல்ல.
அது இருக்கும் இடம் மங்கலம் பொங்கும். ஆரோக்கியம் அளிக்கும் அது மட்டுமல்ல தினமும்
எட்டு தோலா தங்கமும் கொடுக்கும்.
இப்பிடியாகப்பட்ட பொருள் ஒரு சாதாரண மனிதனிடம் இருப்பதை விட
துவாரகையின் ராஜாவான உக்ரசேனரிடம் இருந்தால் தேச நலனுக்கும் நாட்டு மக்களின் செழிப்புக்கும்
உதவுமே என்று கிருஷ்ணர் நினைத்தார். அதனால் அதை ராஜா உக்ரசேனருக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் சத்ராஜித்துக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லை. அந்த
ஸ்யமந்தகமணியை அணிந்துகொண்டு அவனது தம்பி ப்ரசேனன் என்பவன் வேட்டைக்குச் சென்றான்.
அங்கு அவன் மிருகங்களைத் துன்புறுத்தியதால் ஸ்யமந்தகமணியின் புனிதம் குறைந்தது. ஒரு
சிங்கம் அவனை வேட்டையாடி அந்த மணியை வாயில் கவ்விச் சென்றது.