எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 நவம்பர், 2019

விஞ்ஞானி ரகுபதி விருது.

காரைக்குடியில் இருக்கும் சிக்ரியுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஆண்டும் ( 2 வது ஆண்டு ) காரைக்குடி பெரியார் சிலையின் அருகில் இருக்கும் ஹோட்டல் சுபலெக்ஷ்மியில் புத்தகக் கண்காட்சி நடத்தியது.

அந்தக் கண்காட்சியின் கடைசி நாளன்று சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களைச் சிறப்பித்து விஞ்ஞானி விருது கொடுத்துக் கௌரவப்படுத்தினார்கள். சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களில் ஒருவராக நானும் கௌரவிக்கப்பட்டேன்.

ஞாயிறு, 10 நவம்பர், 2019

தூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்

தூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்
உணவு உடை உறையுள் ஒரு மனிதனுக்கு அத்யாவசியம் என்பார்கள். அத்தோடு சுகாதாரமான கழிப்பறையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குமான அடிப்படைத் தேவை என்று சொல்வேன். 2019 நவம்பர் 12 இல் என் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் செம்மொழி நூலகம் ஒன்று திறக்கப்படக் காத்திருக்க அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனிதர்கள் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதைப் பற்றியும் நூலகத்தோடு கழிப்பிடத் தேவையின் அத்யாவசியம் பற்றியும் எழுதி இருந்தேன். அனைவருக்குமான கழிப்பறையின் தேவைகள் இப்போது நனவாகி வருவது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
வீட்டிற்குள் கழிவறை இல்லாத காரணத்தால் நகரமோ, கிராமமோ, முள்ளும் கல்லும் நிறைந்த காட்டுப்பகுதிகளில், திறந்த வெளிகளில், வயல்வெளிகளில், ரயில்வே தண்டவாளங்களுக்கருகில் , கண்மாய்க் கரைகளில் காலைக் கடன் கழிக்கும் மக்களை முன்பு பெருவாரியாகப் பார்க்க முடியும்.
இந்தியன் ரயில்வே தண்டவாளங்கள்தான் உலகத்திலேயே நீண்ட திறந்தவெளிக் கழிவறைகள். இந்தத் திறந்தவெளிக் கழிவறைகளில் இருந்து மக்களை விடுவித்து கிராமப்புறங்களை மேம்படுத்தக் கொண்டு வந்த திட்டம்தான் ஸ்வச்சபாரத் மிஷன் கிராமின் திட்டம். சில கிராமங்களில் இன்றும் சுகாதாரமான கழிப்பறைகள் கொண்ட வீடுகள் இல்லை. நிர்மல் பாரத் அப்யான் திட்டம் கழிவறை கட்ட நிதி உதவி செய்கிறது.

செவ்வாய், 5 நவம்பர், 2019

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.


மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.


சரித்திரம் பூகோளம் இதிகாசம் புராணம் விஞ்ஞானம் கணிதம் வானவியல் பொதுத் தகவல்கள் தொன்மம் அனைத்தும் நிரம்பித்ததும்பும் கவிதைகள்தான் மிராஸ்லாவ் ஹோலுப் கவிதைகள். ஒருவர் இக்கவிதைகளைப் படிக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயம் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மேஷன் நடைபெறும். புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், காட்சிக்குட்படும் கவிதைகள் இவை.

ஷார்ஜா (2019 ) புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

என் மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்.


38-வது சார்ஜா உலகப் புத்தகக் காட்சியில் 7வது கூடம். டிஸ்கவரி அரங்கம் ZD 16 இல் எனது மூன்று நூல்கள் விற்பனைக்கு உள்ளன.

சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு,
விடுதலை வேந்தர்கள் - கட்டுரைத் தொகுப்பு,
காதல் வனம் - நாவல் .

Writter Kavimathy, Panneerselvam Sumathi , ஃபக்ருதீன் இப்னுஹம்துன், ஷேக் முகம்மது, கலியமூர்த்தி ஆகிய சகோதரர்களும், அபுல்கலாம் ஆஸாத்ஜி, ஐயனார் ஆகிய அமீரக நண்பர்களும் டிஸ்கவரி அரங்குக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இக்கண்காட்சி நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே அமீரக நண்பர்கள் பயன்பெற வேண்டுகிறேன். 

திங்கள், 4 நவம்பர், 2019

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி. தினமலர் சிறுவர்மலர் - 38.

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி
இனம் மதம் சாதி பார்த்து ஒருவரை உயர்ந்தவர் என்றும் இன்னொருவரைத் தாழ்ந்தவர் என்றும் கற்பித்துக் கொள்கின்றோம். ஆனால் அதுதவறு என நிரூபிக்கிறது உறங்காவில்லி என்பவரின் கதை. இயல்பிலேயே நல்ல உள்ளம் கொண்ட அவரையும் அவரைப் போலவே நல்லுள்ளம் படைத்த அவரது மனைவி பொன்னாச்சி பற்றியும் அறிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.
சாலையில் வெய்யில் தகிக்கிறது. மக்கள் எல்லாம் வீடுகளில் ஒண்டிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் திண்ணையில் அமர்ந்து விசிறியால் வீசி ஆசுவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு காட்சியைப் பார்த்து அனைவரும் பரிகாசப் புன்னகை செய்கிறார்கள். சிலர் நமட்டுத்தனமாய்க் கிண்டலடிக்கிறார்கள்.
அச்சாலையில் அப்போது ஒரு மனிதன் தன் மனைவிமேல் வெய்யில் படாமல் குடைபிடித்தபடி செல்கிறான். அவன்தான் உறங்காவில்லி. அவனது மனைவி பெயர் பொன்னாச்சி. பொதுமக்கள் பார்க்கிறார்களே. தன்னை ஏளனம் செய்வார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இன்றி அவன் தன் மனைவிக்குக் குடைபிடித்தபடி செல்கிறான்.
Related Posts Plugin for WordPress, Blogger...