எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நாஞ்சில் மனோவின் மனம் விரும்புதே உன்னை..


நாஞ்சில் மனோ. ப்லாக் உலகில் ப்ரபலமான பெயர். என் வலை உலக சகோதரர். இவர்கிட்ட நம்ம ப்லாகுக்காக ஒரு கேள்வி கேட்டேன் மனுஷன் ஆடிப் போயிட்டார். எங்கே வீட்டுல திருப்பாச்சி அருவாளைத் தீட்டிடுவாங்களோன்னு. கொழுமோர் காய்ச்சிக் கொடுக்காத குறையா சமாதானப்படுத்தி பதில் வாங்குறதுக்குள்ள உஸ்ஸ்ஸ் அப்பாடா. ( ஆமா மிஸஸ் மனோ நீங்கன்னா அவருக்கு அவ்ளோ டெரர் ஆ :)

வெள்ளி, 4 அக்டோபர், 2013

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

1. எந்த ஜூஸ் கலந்தாலும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் சுவை அதிகம்.

2. காரக்குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு வைக்கும்போது வறுக்கும் சமயம் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து வறுத்து குழம்பு வைத்தால் ருசியும் கூட. குறைந்த அளவு எண்ணெய் போதும். எண்ணெயும் சீக்கிரம் பிரிந்து விடும்.

3. ஊறுகாய்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் மிகக்குறைந்த அளவு  உப்பு போட்டாலே போதும். ( காய்கறிப் பொரியல்களுக்குப் போடுவது போல)

4. உப்பு அதிகமானால் ரத்தக் கொதிப்பு வரும்.  குறைவாக போட்டால் தசை இயக்கத்துக்கும் காரணம் அதுவே என்பதால் சோர்வை உண்டாக்கும். அளவான உப்பு வளம் சேர்க்கும்.

5. இனிப்பு வகைககளை விட காஃபி டீயினால்தான் அதிகமாக சீனி உடம்பில் சேருகிறது. குறைந்த அளவு சீனி சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

6. குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஒரு டம்ளர் காய்ச்சி ஆற்றிய தண்ணீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு சிட்டிகை உப்பும் கலந்து கொடுக்கவேண்டும். இது டாக்டரிடம் செல்லும் வரை  உடம்பில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கும். வாந்தியையும் வயிற்றோட்டத்தையும் நிறுத்தும்.

7. ப்யூட்டி பார்லர் செல்ல இயலாத சமயம் பார்ட்டி, விருந்து விசேஷங்களுக்குச்  செல்லும் சமயம் ஒரு ஸ்பூன் சீனியை முகத்திலும் கழுத்து கைகளிலும்  லேசாக ஸ்க்ரப் செய்து  தேய்த்துக் கழுவினால் மென்மையாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

8. அரிவாள்மனை. பித்தளை விளக்கு ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது புளியுடன் உப்பையும் சேர்த்துத் தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்.

                      
    ************************************************************

1. அகத்திக் கீரை அல்லது சுக்குடிக் கீரை ( மணத்தக்காளிக் கீரை) யை ஒரு ஸ்பூன் எண்ணெயில் சின்ன சீரகம் ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் 10 உரித்துப் போட்டு வதக்கி அரிசி களைந்த திக்கான தண்ணீர் விட்டு வேகவைத்து கால் கப் தேங்காய்ப் பால் ஊற்றி  சாப்பிட வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆறும்.

2. கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவை வெங்காயத்தை வதக்கி உப்பு, புளி ,மிளகாயோடு அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டால் இரும்புச் சத்து. முடியும் செழித்து வளரும்.

3. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்துப் பொருட்களையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். மாவு., தயிர் போன்றவற்றை அவ்வப்போது சிறிய பாத்திரங்களில் போட்டு டைட்டாக மூடினால் ஃப்ரிட்ஜில் புளித்த வாசம் வராது. ஒரு கப்பில் கடுகும் தண்ணீரும் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் கெட்ட வாடை இருக்காது.

டிஸ்கி :-

 முதல் டிப்ஸ் இங்கே.

இரண்டாம் டிப்ஸ் இங்கே

மூன்றாம் டிப்ஸ் இங்கே.

வியாழன், 3 அக்டோபர், 2013

நன்றி வாழ்த்துக்களுக்கும் புகைப்படங்களுக்கும்..


Nesamithran Mithra

தாழ் பயிரின் நிறைகனம் எப்போதுமிருக்கும் செல்வத்து பாரம் ,
நாள் சுடர்த்தும் கதிர் போல் ஒளி கூடிய நல்லாயுள் பல்கிப் 
பெருகட்டும் . எந்த கோளும் இணங்கிச் சுழல்க !

வருஞ்சிறப்பும் செல்லும் துயரும் சலனிக்காதிருக்கட்டும் திண்மனதை

துணிந்தே எண்ணுவதும் எண்ணித்துணிவதும் நல்விளைவே
 தந்துவக்கட்டும்

வாழிய பல்லாண்டு ! பிறந்த நாள் நல் வாழ்த்துகள் !
Kumaresan Asak 

புதன், 2 அக்டோபர், 2013

கல்யாணத்திலே இத்தனை சடங்கா.. ?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

 நகரத்தார் திருமணம்.

செட்டிநாட்டுத் திருமணங்களில் சில சிறப்புகள் உண்டு. சீர்வரிசை சாமான்கள், செட்டிநாட்டு சமையல் போன்றவை ஸ்பெஷல் . இதில் மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் பரப்பும் சாமான், மாமியார் சாமான், பெண்ணுக்குத் தாய்வீட்டில் செய்யும் சீர்வரிசை சாமான் என நிறைய உண்டு. அதேபோல்  காலை, மதியம், மாலை, இரவு என வகைவகையான வண்ணமயமான ருசியான உணவுகள் உண்டு. பொதுவாக பெண்ணுக்குத் தாய் வீடு கொடுக்கும் சீர் வரிசையில் ( வசதிக்கேற்றபடி ) குண்டூசியில் இருந்து கப்பல் வரை வைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

எந்தன் முதல் கவிதை.. காவிரி மைந்தனுக்காக..

காவிரி மைந்தன் கண்ணதாசனின் தாசர்.. அவர் என் சகோதரனுக்கும் நண்பர். கண்ணதாசனைப் பற்றிப் பக்கம் பக்கமாக சொற்சுவையோடும் பொருட்சுவையோடும் பொருத்தி சிலாகித்து எழுதவும் பேசவும் ஆர்வமுள்ளவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் முதல் கவிதையை அனுப்பினேன்.

என் முதல் கவிதை கிட்டத்தட்ட 12 வயதில் எழுதி இருப்பேன். அது என் அப்பாவின் பிறந்த நாளுக்கான ஒரு வாழ்த்துப்பா.. அது எங்கள் பெரிய வீட்டின் சாமி அறையில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருக்கு. அதன் வார்த்தைகள் சரிவர ஞாபகமில்லாததால் இதை அனுப்பினேன்..
Related Posts Plugin for WordPress, Blogger...