எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 ஏப்ரல், 2010

வலியில் இன்பம்

மழை விட்டும் தூவானம்
மரம் வெட்டிய பின் இலைத்துளி....

வெட்டுப்பட்ட தண்டில் கண்ணீர்ச்
சொட்டுக்களாய் சிதறிய இலைகள்

தண்டு துடிதுடித்துப் பதுக்கி வைத்திருக்கிறது
உயிரை... மீண்டும் துளிர்க்க...

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பச்சை வண்ண புடவைக்காரி

பழைய பேருந்துகள்
சுற்றிச் செல்லும்
தடம் அற்ற சாலையில்....
வாதுமை மரத்தின் கொட்டைகள்
அங்கங்கே சிதறிக் கிடக்க....
ஒரு பச்சை வண்ணப் புடவையில்
அவள் வந்தாள்...
அழகென்று சொல்ல முடியாது..
பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு..

திங்கள், 5 ஏப்ரல், 2010

கைவசம்

உன் கைப்பிடித்து வர
கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...

உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...

சனி, 3 ஏப்ரல், 2010

வருடம் முழுதும் வசந்தம்

வீடெங்கும் வாசனைப் பூந்தொட்டிகள்..
வண்ண வண்ண ரோஜாக்கள் ..
நீயே நிலவு என்பதால்
கொஞ்சம் நட்சத்திரங்களும்
பதிப்பேன் உன்னைச் சுற்றி...
இனிப்பான பேச்சுக்களும்
இன்பமான நினைவுகளும்
ருசிக்கத் தருவேன்..
சபரி ராமனுக்கு ஈந்தது போல்..
மனதையும் பொதித்துக் கைகளுக்குள்..

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் ..பரிசுகளும்

படத்திறப்பு:-
அமரர் திரு ஜி.கே. சுந்தரத்தின் படத்தை புதுச்சேரிக் கம்பன் கழகத்தலைவர் திரு ந. கோவிந்தசாமி திறந்து வைத்தார் ..கம்பன் திருநாளுக்காகவும் கம்பனடிப்பொடிக்காகவும் தமது 93 ஆம் வயதிலும் உற்சாகம் குன்றாமல் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் சந்தனப்பொட்டும் அணிந்து (எங்கள் ஐயாவை நினைவு படுத்துவது போல ) சந்தோஷமாகப் பேசினார்.. பேச்சின் இடையே அண்ணாவின் ‘”தீ பரவட்டும்” என்ற வாசகத்தையும் பாரதிதாசனின் ‘”கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்” என்ற வாசகத்தையும் நினைவு கூர்ந்தார். இவர் கலந்து கொண்டு அனைவரின் பேச்சையும் ரசித்துக்கேட்டதே மிகச் சிறப்பு...
Related Posts Plugin for WordPress, Blogger...