வளையாபதி
& குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை.
ஐம்பெரும் காப்பியங்களுள் முழுமையாகக் கிட்டாதவை வளையாபதியும் குண்டலகேசியும். வளையாபதியில் மொத்தமே 72 பாடல்களும், குண்டலகேசியில் மொத்தமே 19 பாடல்களும் கிடைத்துள்ளன.
இவை இரண்டும் காணாமல் போன காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன. கிடைத்த பாடல்களிலும் வளையாபதி, குண்டலகேசிக்குச் சொல்லப்படும் கதையின் குறிப்பாக ஒரு பாடல் கூட இல்லை.
