எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தியாகராஜா பொறியியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியாகராஜா பொறியியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஏப்ரல், 2013

தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.

போலி.

தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் 11. 9. 84 அன்று நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான ( ON THE SPOT --  கவிதை எழுதும் போட்டியில் .) கவிதைப் போட்டியில் இரண்டாம் தகுதி பெற்ற கவிதை. 

இந்தியாவின்
அசோகச் சக்கரங்கள்
வெள்ளியால் அஸ்திவாரமிடப்பட்டுத்
தங்கத்தால் அமைக்கப்படுகின்றன.

இந்தியனே..! நீ பணக்காரன் !.
ஏன் இன்னும்
இதழின் மடிப்புக்களில்,
சலனமற்ற கண்களில்,
அழுக்கடைந்த உடைகளில்
சோகத்தைப் பொதித்துக் கொண்டிருக்கிறாய்.?
Related Posts Plugin for WordPress, Blogger...