எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அகநாழிகை பொன் வாசுதேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகநாழிகை பொன் வாசுதேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஜூலை, 2017

குட்டி ரேவதி அவர்களுக்கு நன்றிகள்.

சில விஷயங்கள் காலம் தப்பிக் கண்ணில் படும். அப்படிப்பட்ட ஒன்று நேற்று முகநூலில் படித்துச் சந்தோஷமடைந்த குட்டி ரேவதி அவர்களின் இந்த போஸ்ட்.

பெண் எழுத்துக்களுக்கான ஊக்கம் மட்டுமல்ல. கவிதை நூல்களுக்கான ஊக்கமும் குறைந்துவரும் காலகட்டத்தில் இம்மாதிரி ஊக்கங்கள் எழுத்தில் நிலைத்திருக்க வைக்கின்றன.

பெண்களுக்குப் பெண்களிடம் இருந்து கிடைக்கும் ஆக்கபூர்வமான வரவேற்புகள் சிறப்பானவை. காலம் கடந்தும் ஜெயிப்பவை. அன்பும் நன்றியும் குட்டி ரேவதி :) 


Kutti Revathi
17 January 2014 ·

2014 புத்தகக்காட்சியில்
பெண்களின் நவீன இலக்கியப்படைப்புகள் அதிகம்!

நண்பர்களே, இந்தப்புத்தகக்காட்சிக்கு வெளியாகியுள்ள பெண்களின் படைப்புகள் இவை. தற்கால இலக்கியப்படைப்பாக்கத்தில் பெண்களின் பங்கு அதிகமாவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான படைப்புகள் பெண்களின் முதல் நூலாகவும் அவை கவிதையாகவும் இருப்பது வியப்பைத் தருகிறது. 'போராட்ட வாழ்வியலாக' வந்துள்ள இரு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதே சமயம், நாவல், சிறுகதை, கவிதை, பயணநூல், கட்டுரைத்தொகுப்பு, மொழியாக்கம் என வடிவங்களும் விரிந்துள்ளன.

இங்கே, ஏதேனும் படைப்புகள் விடுபட்டிருந்தால் அது தற்செயலானதே. மன்னித்து, அந்தப்படைப்பையும் இங்கு பதிவு செய்ய நண்பர்கள் உதவினால் சிறப்பாக இருக்கும். நன்றிகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...