எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 செப்டம்பர், 2021

சாக்லேட்களின் மகாத்மியம் - லிண்ட் - LINDT - ஜெர்மனி

ஜெர்மனியின் சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட்களின் வகைகள், தயாரிப்பு, தயாரிக்கும் மெஷின்கள், பாக்கிங், மோல்டுகள், விற்பனையகம், சாக்லேட்டின் பூர்வீகம், நூற்றாண்டுகளாக அதன் பயணம் பற்றி அறிய முடிந்தது. இவற்றை செக்‌ஷன் செக்‌ஷனாகப் பிரித்து விவரித்து எழுதியே வைத்திருக்கிறார்கள். எல்லாம் நமக்குத் தெரியாத ஜெர்மனில் இருக்கு ஹ்ம்ம்!. 

சாக்லேட், சொக்கலைட், சிக்லேட் என்று எல்லாம் என் பெரியம்மா 1950 களின் சாக்லேட்களை ஒரு முறை வகைப்படுத்தினார். டார்க் சாக்லேட், சாஃப்ட் சாக்லேட் என்றெல்லாமும் இருக்கிறது. வெள்ளை நிறம், அரக்கு நிறம், கருப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம் இன்னும் பல நிறக் கலவைகளில் சாக்லேட்டுகள் கிடைக்கின்றன. 

வாயில் போட்டால் கரையும் ஸ்விஸ் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. சில சாக்லேட்டுகள் நம்மூரு உஷ்ணத்தில் சாக்லேட் ட்ரிங்க் ஆகிவிடும் அபாயம் உள்ளவை. எனவே ரெஃப்ரிஜிரேஷன் செய்துதான் சாப்பிடணும். 

நம்மூரு டெய்ரி மில்க்கும், ஃபைவ் ஸ்டாரும், காட்பரீஸும், காஃபி பைட்டும்தான் பல்லாண்டுகளாக என் விருப்பமாக இருந்திருக்கிறது.  வான் ஹௌடன் என்று சிங்கப்பூரில் இருந்து என் மாமா கொண்டு வரும் சின்ன சிவப்பு கவர் போட்ட டார்க் சாக்லேட் எங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் பேரதிசயம். 

பெர்னாட்ஷாவின் போரும் காதலும் என்ற நாடகத்தில் வரும் வீரனுக்கு அதன் நாயகி சாக்லேட் சாப்பிடக் கொடுப்பாள். சர்காஸ்டிக்காக அவனை க்ரீம் வீரன் என்றும் அழைப்பாள். 

அவசர காலங்களில் மிலிட்டரி வீரர்களுக்கு பசி தீர்க்கும்  உணவுப் பொருளாகவும் சாக்லேட் பயன்பட்டிருக்கு. 

முன்பெல்லாம் ஃப்ளைட்டுகளில் சாக்லேட் கொடுத்து வரவேற்பது பழக்கமாயிருந்தது. போன நூற்றாண்டுகளில் விருந்து வைபவங்களிலும் சாக்லெட் மற்றும் சாக்லேட் ட்ரிங்க் ( ட்ரிங்கிங் சாக்லேட் ) கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். 

இந்த இடத்தின் முக்கியத்துவம் என்னன்னா பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் சாக்லேட்  தயாரிக்கப் பயன்படுத்திய சில்வர் & போர்ஸிலின் பாத்திரங்களைச் சேமித்து வைத்திருப்பதாகும். ஜக், மக், கப், கரண்டிகள், பௌல்கள், ஹாட் சாக்லேட் கொடுக்கப் பயன்படுத்திய கப் அண்ட் சாஸர்கள், கொதிக்க வைக்கப் பயன்படுத்திய குடுவைகள், கெட்டில்கள் உள்ளன. 



சில நூற்றாண்டு வரலாறை டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். 

விதம் விதமான ருசியில் சாக்லேட்டுகளும் அவற்றின் ப்ராண்டுகளும் அவை அடைக்கப்பட்ட டப்பாக்களும்  விளம்பரங்களும் கூட இந்த செக்‌ஷனில்  பாதுகாக்கப் படுகின்றன.   

ஒரு பெண் குழந்தை ஓடுவது போல் வடிவமைக்கப்பட்ட விளம்பரம் சரோட்டி என்ற ஒரு சாக்லேட் ப்ராண்டுக்காக.

ஜெர்மனி, கோலோனில் ஸ்டால்வெர்க் என்ற நிறுவனம் சாக்லேட் தயாரிப்பில் நூற்றாண்டுகளும் மேலாய்ப் புகழ்பெற்றது. நாய்க்குட்டி படம் போட்ட சுச்செர்ட் என்றொரு ப்ராண்ட் உள்ளது. க்ராஃப்ட் ஜேக்கப் சுச்செர்ட் என்பவரின் நிறுவனம் தயாரித்த சாக்லேட் அது.

ஹாட் சாக்லேட் என்பது சாக்லேட் ட்ரிங்கின்  ஒரு வகையே. 


ஆல்டர் செக்கோ என்னும் ப்ராண்ட். ஒருமாதிரி ரஸ்டிக் கலரில் டார்க் சாக்லேட் தயாரிக்கக் கோக்கோ கூழ் தயாரிப்பது. இது விலை உயர்ந்ததாகத் தரமானதாகப் பிரபலமாக இருந்திருக்கிறது. 


புகழ்பெற்ற கார்ட்மேன் சாக்லேட், கோல்ட் ஸ்டால்வெர்க் சாக்லேட், சாக்மெல் போன்ற ப்ராண்டுகளும் இன்னும் சிலவும் அவற்றின் எம்ப்ளம்களும். 
ஒவ்வொரு ப்ராண்டுக்கும் விதம் விதமான விளம்பர வடிவங்கள்.  இவை அனைத்தும் சாக்லேட் வெண்டிங் மெஷின்ஸ். கடைகளில் நிறுவப்பட்டிருந்தவை. 

இதில் காசு போட்டு சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம். சென்ற நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தவை. இப்போது வரலாற்றுச் சின்னமாகி விட்டன. 


ஸ்டால்வெர்க்கின் எல்லாவிதமான சாக்லேட் உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கொகோ வகைகள், பால்பவுடர்கள், இனிப்புக்காகச் சேர்க்கப்படுபவை, எஸென்ஸுகள், ஃப்ளேவர்கள். 

சிலவற்றுக்கு ஒயின் கூடப் பயன்படுத்துவார்களாம். அதனால்தான் ஒயின் தயாரிக்கும் ட்ரம்மும் ஷாம்பெயின் பாட்டிலும் பிரம்மாண்டமாகக் காட்சி அளிக்குதோ ?!


மாரபௌ, ரிச்சர்ட், பெர்ஜர், வெல்மா சுச்செர்ட் (எள்வோ பெரிய முக்கோண சாக்லேட்!)  ஆகிய சாக்லேட் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. 


மெல்டர் சிக்கொலேடோ, இது ராஜனா, ட்ரோஜனா தெரில.. :) இதெல்லாம் போன நூற்றாண்டோட சரி. 

இப்பவெல்லாம் சாக்லேட் உலகில் லிண்ட்தான் கோலோச்சுகிறது. ! லிண்ட் மில்க் சாக்லேட், எக்ஸ்ட்ராஃபைன் மில்ச் சாக்லேட்.

நட் கேரமல் எனப்படும் வால்நட் கேரமல் சாக்லேட். பாதம் , வாதுமை, முந்திரி ஆகிய கொட்டைகள் வைத்த சாக்லேட்டுகள் அடுத்தடுத்து வருகின்றன. 

சிலவற்றில் வேர்க்கடலை, கொட்டைப் பருப்புகள், அரிசிப்பொரி ஆகியன கலந்துள்ளன. இந்தியாவில் சிலவற்றுள்  பிஸ்கட்டுக்குள்ளேயே இப்போது சாக்லேட்டை வைத்து விடுகிறார்கள். பிராண்ட் & பேர் மறந்து விட்டது. காட்பரீஸ் சாக்கோ பேக்கா ? 


இந்த ஃபெர்ராரோ ரோச்சரும் குறைந்ததல்ல. சுமார் 3. 50 யூரோவில் இருந்து ஆரம்பிக்கிறது. இதன் விலை ஆறு யூரோ. கிட்டத்தட்டப் பதினைந்து டப்பாக்கள் மிட்டாயும் நான்கு டப்பாக்கள் பிஸ்கட்டும் ஜெர்மனியில் இருக்கும் மகனார் வாங்கிக் கொடுத்தார். ஒவ்வொரு சாக்லேட் டப்பாவிலும் 16 சாக்லேட்டுகள் இருந்தன. இந்தியா வந்ததும் உறவினர் அனைவருக்கும்  ஒவ்வொரு டப்பா சாக்லேட்  கொடுத்து மகிழ்ந்தேன். 

இது இருந்த டப்பாவில் குலுக்கல் பரிசுச்சீட்டெல்லாம் இருந்தது. பி எம் டபிள்யூ ஐ8 கார், எலக்ட்ரோ ரோலர் என்னும் ஸ்கூட்டர் , அமேஸான் எக்கோ டாட் என்னும் பரிசுப்பொருள். இந்தியாவில் இந்தப் பரிசுச் சீட்டை வைச்சு என்ன செய்ய. :) 

யாருக்குப் போச்சோ அந்த பி எம் டபிள்யூ.. ஹ்ம்ம் :) நாம ரிலாக்ஸ்டா சாக்லேட் மகாத்மியத்தைச் படிச்சு சாக்லேட்டை சுவைச்சு நிம்மதி காண்போம். 

3 கருத்துகள்:

  1. பதிவைப்பார்த்ததும் சாக்லேட் பேக்டரி திரைப்படம் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  2. சரியாத்தான் கணிச்சிருக்கீங்க ஜம்பு சார் :)

    நன்றி பெயரில்லா.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...