எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 ஜூலை, 2021

SCHOKOLADEN MUSEUM, சாக்லேட் மியூசியமும் சாக்லேட் செடியும்.

 சாக்லேட் கப்பல் பார்த்திருக்கின்றீர்களா.

இல்லாவிட்டால் அதைப் பார்க்க நீங்கள் ஜெர்மனி கோலோன் நகரின் ரைன் நதிக்கரைக்குத்தான் ( RHEINAUHAFEN) வரவேண்டும் . ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோம். இதைப் பார்க்கச் செல்ல பல்வேறு வாகனங்களுக்கு வழி கொடுத்துள்ளார்கள். போட் என வித்யாசப் பயணமும் உண்டு. ஆனால் அங்கே மினி ரிக்‌ஷாவில் சிலர் வந்திறங்கியது கவர்ச்சிகரமாய் இருந்தது :) நாங்கள் (எங்கள் மகன் வீடு இருக்கும் ) டூயிஸ்பர்க்கிலிருந்து  ட்ராம், மெட்ரோ ட்ரெயின் & பஸ்ஸில் போனோம்.  

உலோகத் தரை, கண்ணாடிச் சுவரால் அமைக்கப்பட்ட மிக அழகான இந்த சாக்லேட் கப்பலில் சாக்லேட் மியூசியம்,சாக்லேட் ஷாப், சாக்லேட் தயாரிக்கும் முறை, 5000 வருடப் புராதன சாக்லேட்டின் வரலாறு, சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தும் அச்சுகள், பிரபல ப்ராண்டுகளின் சாக்லேட், சாக்லேட் தயாரிப்பின் பூர்வீகம், சாக்லேட் தயாரிப்பவரின் குடும்ப விவரம்,கோகோ பீன்ஸில் இருந்து தயாரிப்பது முதல்  இன்றைய ப்ளாக் சாக்லேட் வரை விதம் விதமான சாக்லேட் வகைகளைக் காணலாம். கேட்கும்போதே நாவூறுகிறதல்லவா !

நெஸ்லே,லிண்ட் சாக்லேட்டுகள் என உலகத் தரம் மிகுந்த சாக்லேட்டுகள் தயாராகின்றன. 


இதோ ஒரு மினி மோட்டார்  ரிக்‌ஷா. 

கொலோன் நகரில் ரைன் நதியில் பல்வேறு படகுகளும் சிறு கப்பல்களும் உலா வருகின்றன. அவற்றில் இது ஒரு அசையாக் கட்டிடக் கப்பல். ஒரு பாலத்தைக் கடந்துதான் இந்தக் கப்பலுக்குச் செல்ல வேண்டும். 

இவர்தான் இந்த சாக்லேட் மியூசியத்தின் ஃபவுண்டர். 

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிகளிலேயே ஜெர்மனியில் ஸ்டோல்வெர்க் ( STOLLWERCK ) என்னும் சாக்லேட் கம்பெனியை நடத்தி வந்தவர் பேக்கர் ஃப்ரான்ஸ் ஸ்டால்வெர்க். இவருக்குப் பின் இவரது மைந்தர்கள் இருவர் இந்த சாக்லேட் கம்பெனியை வேறு இடங்களில் நிறுவினாலும் பின்னால் இவை அனைத்தும் ஒன்றாகவே இணைந்தன. 

அங்கே கிடைத்த ஃப்ரீ சாக்லேட். எண்ட்ரன்ஸ் டிக்கெட் 12.50யூரோ. 

சிகரெட் , சூயிங்கம், மற்ற மிட்டாய் வகைகள், சோப்புகள் தயாரித்த இந்த நிறுவனம் இரண்டாம் உலகப் போரின் போது வியாபாரம் சரிந்ததால் பலத்த அடியைச் சந்தித்தது. அதன் பின் ஒருவாறாக மீண்டு பல்வேறு நாடுகளிலும் கிளைபரப்பி இருக்காங்க. 


மெஷின்கள் மூலம் தயாராகும் சாக்லேட்டுகள்.  இதுக்கு STOLLWERCK - FUNFWALZENWERK  என்று பெயர். ஐந்து ரோல் மில். ஐந்து உருளைகள் கொண்ட யந்திரம். 

Stollwerck-Fünfwalzenwerk von
இவை ஆதிகாலத்தில் சாக்லேட் பீன்களைப் பொடிக்கப் பயன்படுத்திய ரோலர்கள். 


 இவையும் அவை போன்ற மிஷின்களே. 

சாக்லேட்டின் படகுப் பயணம்  ( கடல் பயணம் ?!) 

கைபடாமல் சாக்லெட் கலவையை ரோல் செய்யும் சாக்லேட் ப்ளெண்டர், மிக்ஸர். 
சாக்லேட் தயாரிக்க கண்டென்ஸ்ட் மில்க் , பட்டர், கோகோ, க்ரீம், இவை கலக்கப்பட்டு இந்த உருளைகளின் வழியாக வந்து கீழ் இறங்கிச் சேகரமாகின்றன. 
அதன் பின் வெவ்வேறு உருவங்களில் சமைக்கப் பட்டு ஏர் ட்ரையர் போன்ற ஒன்றின் மூலம் உலர வைக்கப் பட்டு வெளி வருகின்றன. 
இதோ இதில் சேகரமாயிருக்கும் சாக்லேட்டுகளைப் பாருங்கள். கண்ணாடி மூடியுடன் இருக்கிறது. 

பணியாளர்களே கண்ணில் படவில்லை. எல்லாம் மெஷின் மேட். இவை அனைத்துமே சாக்லேட் கலவையால் நிரம்பித் ததும்புகின்றன. இது ரைன் நதிக்கரையோரம் உள்ள மெஷினரீஸ். 


இவை உள் கட்டமைப்பில் உள்ளவை. மூன்று தளங்களிலும் இவை இயங்குகின்றன. 
எல்லாருக்கும் பட்டனைத் தட்டினால் ஒவ்வொரு ஃப்ரீ சாக்லேட் உண்டு என்பதால் அனைவரும் வரிசையில் காத்து எடுத்துக் கொள்கின்றனர். 

இந்த சாக்லேட் மியூசியத்துக்குக் குழுவாகப் போனால் , பள்ளிக்குழந்தைகள் போனால் டிக்கெட் ரேட்டில் கன்ஸஷன் உண்டு. குடும்பமாகப் போனாலும் பெரியவர்களுக்கு அதே டிக்கெட் ரேட், சின்னவர்களுக்குக் கொஞ்சம் குறைவு. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திறந்திருக்கும். 5 மணி வரைதான் பார்வையாளர்களை உள்ளே விடுவார்கள். எனவே சீக்கிரம் செல்லவும். நாங்கள் கொலோன் சர்ச்சுக்குச் சென்று இங்கே போய் விட்டு அதன் பின் ரைண்டெர்ம் எனப்படும் ரைன்டவருக்குச் சென்றோம். 

வாங்கும் டிக்கெட் ஒவ்வொன்றுக்கும் நான்கு சாக்லேட்டுகள் ஃப்ரீ. மேலும் உள்ளே போய் சாக்லேட் தயாராகும் மிஷினின் பட்டனைத் தட்டினால் ஒரு சாக்லேட் உண்டு. அது போக இந்த அம்மணியிடம் ( அழகான இந்த சாக்லேட் செடியிடம் நிற்பவர் ) சென்றால் அவர் ஒரு வேஃபரை எடுத்து சாக்லேட்டில் தோய்த்துத் தருவார். அதுவும் ஸ்பெஷல். எனவே ஒரு டிக்கெட்டுக்கு ஒன்றிரண்டு யூரோ சாக்லேட் ஃப்ரீ கிடைக்கும் :)


பெல்ஜியம், ஹங்கேரின்னு பல்வேறு நிறுவனங்களின் கைகளில் மாறிய இந்த சாக்லேட் தயாரிப்பு இப்போது ஐந்து இடங்களில் ( பெல்ஜியம், ஸ்விட்ஜர்லாந்து, ஜெர்மனி ) நடைபெற்று வருது. 1700 ஊழியர்கள் இங்கே வேலை பார்க்கிறாங்க. வருடத்துக்கு 100,000 டன் சாக்லேட் தயாரிக்கிறாங்கங்கிறது வியப்பான விஷயம். 

இதை சுற்றிப் பார்க்க கைடட் டூர் உண்டு. மேலும் பால் கொள்முதல் செய்யும் நாடுகள், சாக்லேட் வகைகள், சாக்லெட் செய்முறைகள், சாக்லெட்டின் வரலாறு, சாக்லேட் அச்சு, ஈஸ்டர் ஸ்பெஷல் சாக்லேட்டுகளை இன்னும் சில இடுகைகளில் பார்ப்போம். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...