கட்டுப்பாடு பற்றியும் கணக்குப் பார்த்து செலவழிப்பது பற்றியும் இயம்புகிறது தலையங்கம்.
இது ஒரு உடலியல் உளவியல் மாத இதழ். ஏமாறாதே ஏமாற்றாதே நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.
நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது, மற்றவர்களை அளவோடு பாராட்டுவது ஆகிய கட்டுரைகளோடு தாழ்வு மனப்பான்மை இருப்பவரிடம் ஈகோவும் இருக்கும் என்பதைத் தெளிவு படுத்திய கட்டுரை என்னை ஆச்சர்யப்பட வைத்தது.
ஒரு ரியல் கேஸ் ஹிஸ்டரியை எடுத்துக் கொண்டு சிறுவயதில் பாதித்த அனுபவங்கள் காரணமாக திருமண வயதில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட டிப்ரஷன், ஃபோபியா, ஸ்ட்ரெஸ், கான்ஃப்ளிக்ட்ஸ், அனரெக்ஸியா, கெமிக்கல் இம்பாலன்ஸ், சைக்கியாட்ரிக் இல்னெஸ்
ஆகியவற்றை கௌன்சிலிங் கொடுத்து எப்படிச் சரிசெய்தோம் எனக் கூறியிருக்கிறார் டாக்டர் சிவசைலம்.
சூழ்நிலையின் தவறுகளால் மனதுள் தன்னைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்கள் பெருகப் பெருக எதிர்காலமே எதிர்மறையாய் உருப்பெறும் வரைபடம் போட்டு விளக்கியிருக்கிறார்.
காரிய வெற்றி பெற வேண்டுமானால்
தீர்மானத்தில் தெளிவு வேண்டும் என்ற அம்சத்தை வலியுறுத்துகிறது ஒரு கட்டுரை. கோபம் பயம் ஏற்படுத்தும் விளைவுகள், சைக்கோ டெஸ்ட் , ஆழ்மனமும் நம்பிக்கைகளும்,
விடியலை நோக்கி, பொறுமையால் கிடைக்கும் வெற்றி என
வரிசைப்படுத்துகிறார்கள்.
துன்பங்களும் வாழ்வின் அம்சமே என ஆற்றுப்படுத்துகிறது ஒரு கட்டுரை. ஆழ்மனத்துக்கு என்ன கட்டளை இடுகிறோமோ அதை அது செயல்படுத்தும் என்று ஆல்ஃபா மைண்ட் பவர் பற்றிக் கூறுகிறார்
டாக்டர் விஜயலெக்ஷ்மி பந்தையன்.
புதிய சிந்தனைகள், செயலாற்றும் வலிமை, விடாமுயற்சி
ஆகியன வெற்றிக்கான பண்புகள் என்கிறார்கள். தெளிந்த சிந்தனை இருந்தால் சிறந்த முடிவு கிட்டும் என நம்பிக்கை ஊட்டுகிறது ஒரு கட்டுரை. நோக்கம் சிறந்ததாய் இருந்தால் ஜெயிப்போம் என்றும் நம்பிக்கையும் அளிக்கிறார்கள்.
வார்த்தைகள் செய்யும் அற்புதத்தையும் இவர்கள் விவரித்து இருப்பதால் நாமும் நம் நயமான வார்த்தைப் ப்ரயோகங்களால்
வெற்றி பெற முயல்வோம். அத்தோடு மனித உறவுகளும் குடும்ப உறவுகளும் சீராக இருந்தாலே நாம் வெற்றியின் படிக்கட்டுக்களில் ஏறிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.
நூல் :- மனோசக்தி
( மாதாந்திரி)
ஆசிரியர்:- விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன்.
விலை :- ரூ.
15.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 7 ஜனவரி, 2020
மனோசக்தி - ஒரு பார்வை.
மனோசக்தி - ஒரு பார்வை.
மனோசக்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

ஆசிரியர் ஆவி அனுபவ எழுத்துகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே...
பதிலளிநீக்குகுறள்களில் இல்லாத மனோசக்தியா...?
பதிலளிநீக்குநல்ல அறிமுகம். தலைநகரில் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பில்லை!
பதிலளிநீக்குஅட அப்படியா ஸ்ரீராம் ?!
பதிலளிநீக்குஅதானே டிடி சகோ. கரக்டா சொன்னீங்க
ஆமாம் வெங்கட் சகோ.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!