எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஜனவரி, 2020

கம்பன் கண்ட மனிதன்.

காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் (4.1.2020) இன்று " கம்பன் கண்ட மனிதன் " ( கம்பன் கண்ட மனிதன்/தெய்வம்/தொண்டன் ஆகிய தலைப்புகளில் மாணாக்கர்களே தேர்ந்தெடுத்தது ), என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நிகழ்ந்தது.

இந்நிகழ்வில் திருமிகு கண்ணன், திருமிகு. மா. சிதம்பரம் இவர்களோடு நானும் நீதிபதியாய்ப் பங்கேற்றேன். மிக நிறைவான நிகழ்வு.


பேராவூரணி, பூவந்தி, பூண்டி, சிங்கம்புணரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து கல்லூரி மாணவமணிகள் பங்கேற்றார்கள்.

சொல்வளத்திலும் மொழிவளத்திலும் இறும்பூது எய்த வைத்துவிட்டார்கள். பேசிய பத்துப் பேரும் செறிவோடு பேசியதால் தேர்ந்தெடுக்க சிறிது சிரமமாய்த்தான் இருந்தது.

முடிவில் நால்வரைத் தேர்ந்தெடுத்தோம். உச்சரிப்பு மட்டும் சிலருக்கு மதிப்பெண்ணைக் குறைத்தது.

சௌம்யா, மணிகண்டன், விஷ்ணுப் ப்ரியா, மீனா, சீதாலெக்ஷ்மி, கிருஷ்ணன், கோகிலா,அகிலாண்டேஸ்வரி, மணிவாசகம். ( இன்னும் ஒருவர் பேரை நான் குறித்துக் கொள்ளவில்லை - இன்னொருவர் பேசும்போது புகைப்படமும் எடுக்க மறந்துவிட்டேன் )

இவர்களில் விஷ்ணுப் பிரியாவும் சீதாலெக்ஷ்மியும் மூன்றாம் பரிசையும், அகிலாண்டேஸ்வரி இரண்டாம் பரிசையும், கோகிலா முதல் பரிசையும் வென்றனர்.  ( கருத்து, உரை, நடை, மெய்ப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பெண் அளித்தோம் )


பரிசு பெற்ற நால்வரும் பெண்கள். அதிலும் இருவர் ஃபாத்திமாவில் பயின்றவர்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்வளித்தது. மாணவர்களும் சோடையில்லை. கம்பீரமாகப் பேசி மிரட்டி விட்டார்கள்.


மொத்தத்தில் இன்றைய இளையர்களின் இலக்கிய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது

2 கருத்துகள்:

  1. ஆஹா மகிழ்ச்சி. பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...