கார் வாஷ் & டனல்ஸ்
.
கார் வாஷ் & டனல்ஸ்
கிட்டத்தட்டப் பத்து
வருடங்களுக்கு முன்
துபாய்
சென்றிருந்த போது
காரை
இப்படி
ஒரு
ஷெட்
போன்ற
இடத்தில் நிறுத்தி நாலாபக்கமும் நுரை
பொங்க
வாஷ்
செய்தார்கள். காருக்குள் நாங்கள் அமர்ந்திருக்க பார்க்கவே பிரமிப்பூட்டிய காட்சி
அது.
அதே
போல்
துபாய்,
ஷார்ஜா
போன்ற
நாடுகளில் இந்த
டனல்களிலும் ரவுண்டானாக்களிலும் மேப்
பார்த்துத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த
மாகாணத்துக்கே போய்விடுவோம். தவறான
பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம். நாம்
போக
வேண்டிய ஊருக்குத் திரும்ப வேண்டும் என்றால் 200 கிமீட்டராவது சுற்ற
வேண்டும். எனவே
கவனம்
தேவை.
காரை
உள்ளே
நிறுத்தியதும் முதலில் சுற்றுப்பட்ட கண்ணாடி முழுவதும் நுரை
மழை.
அதன்
பின்
தண்ணீர் அருவி.
அதுவே
உலரவைத்தும் அனுப்பி விடுகிறது.
இப்போது இங்கே
இந்தியாவிலேயும் கூட
இப்படி
கார்
வாஷ்
இருக்கலாம். அங்கே
உள்ள
ஒரு
கடையில் காஃபி
குடித்தோம். காஃபியை விட
நுரையும் கசப்பும் அதிகம்.
மெக்டோனால்ட்ஸின் முன்னால் என்
மூத்த
மகன்
:)
அட்லாண்டிஸ் செல்வதற்கு ஒரு
முறையும் அபுதாபி செல்ல
ஒரு
முறையும் இந்த
நீண்ட
டனல்களில் பயணம்
செய்தோம். இவை
மட்டுமல்ல சும்மாவே ஷார்ஜாவிலிருந்து ஷேக்
ஸாயத்
ரோடுபோவதற்கும் சிறிய
டனல்களைக் கடக்க
வேண்டும்.
நம்மூரில் மேம்பாலங்கள் மாதிரி
இந்த
டனல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடிகிறது. துபாயில் அநேகம்
கார்தான். இரு
சக்கர
வாகனங்களைப் பார்ப்பது அரிது.
தூரத்தே அபுதாபி செல்லும் பஸ். இந்த டனல்களில் ஆங்கிலப் படங்களில் வருவது போல் சீரான ஒளிவெள்ளம் இருக்கிறது. அதோ தெரியும் வெளிச்சம் நாம் டனலில் இருந்து வெளியேறப் போவதைக் காட்டுகிறது. பளப் பளாவெனச் சூரிய ஒளி.
அபுதாபியில் இருக்கும் ஏதோ ஒரு கட்டிடம். அடுத்து நாம் அட்லாண்டிஸ் போவோம். இதோ டனலின் ஆரம்பம். உள்ளே தங்க நிற வெளிச்சம் இங்கு.
ஸ்பீட் லிமிட்டைக் கண்காணிக்க அங்கங்கே சர்வயலன்ஸ் காமிரா உண்டு டனல்ஸ் எல்லாம் சீராக இருந்தாலும் நேராக இருக்காது. ஒரே வளைவுகள்தான்.
இதோ
மேலேறப் போகிறோம். .இது
இரவு
நெருங்கும் நேரம்.
அதோ
தெரிவதுதான் அட்லாண்டிஸ். பாம்
ஜுமைரா
.
பாம் ஜுமைரா மிக அழகான இடம். கடற்கரையை ஒட்டிய ஜுமைரா பீச்சையும் இன்னும் அட்லாண்டிஸ் பற்றிய அழகிய படங்களையும் பின்னர் பகிர்கிறேன்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!