எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 ஜூலை, 2019

டைட்டானிக்கும் ஒபிலிக்ஸும்.

இதெல்லாம் ஒண்ணு சேர எங்க பார்த்தீங்கன்னு கேக்குறீங்களா. தியேட்டர்லயோ ஷாப்பிங் மால்லயோ  எல்லாம் இல்லை. கோவைப் பொருட்காட்சியிலதான்.

குழந்தைகளைக் கவர கோடை விடுமுறையில் பல்வேறு விதமான விளையாட்டுகள் கோவை மத்திய சிறையை ஒட்டிய திடல்ல பொருட்காட்சி, கண்காட்சியா நடந்துக்கிட்டு இருந்தது. அதில் நம்ம வீட்டு வாண்டுகளுடன் போனோம்.

இந்த டோரா டோரா மாதிரி சுத்துறதுல எல்லாம் பிள்ளைகளை தயதுசெய்து ஏத்த வேண்டாம். ஏத்திட்டு அது தாறு மாறா சுத்துறதப் பார்த்து டென்ஷனா ப்ரேயர் பண்ணியபடி இருந்தோம் எல்லாரும். உள்ளபடியே பிள்ளைகள் பயந்திருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டிக்கலை.


கோவை பொருட்காட்சியில் என்னைக் கவர்ந்த அம்சம் இந்த டைட்டானிக் கப்பல். யம்மா யம்மாம் பெரிசு !!! இது ஏதோ கட்டிடம் மாதிரியும் இருந்தது. சிலர் மேல்தளத்துல ஏறி நின்னுக்கிட்டு இருந்தாங்க வேற. !



அப்புறம் வழக்கம் போல வண்ணப் பந்துகள், பலூன்கள், வயலின், திருஷ்டி பொம்மைகள் கூட !.

ஜயண்ட் வீல் என்னும் ரங்கராட்டினம். இதெல்லாம் நான் ஏறினதே இல்லை. சின்ன சின்ன வீல்களில் ஏறியே வீல்னு கத்தவும் முடியாம இறக்கிவிட்டுருங்கன்னு வாயைத் திறக்கக்கூட முடியாம  மூச்சடைச்சு, நெஞ்சு அடைச்ச மாதிரி உட்கார்ந்திருந்த அனுபவம்  மும்பை எஸ்ஸெல் வேர்ல்டிலும், மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டரிலும் ஏற்பட்டதால் இதில் எல்லாம் ஏறும் ரிஸ்கே வைச்சுக்கிறதில்லை.


இது ஓகே. கொஞ்சம் சாத்வீகம். குழந்தைகளுக்கு :)
யானை, குதிரை, ஒட்டக சவாரி .


இதுதான் அந்த காஃபி கப் மாதிரி உள்ள டோரா டோரா. :( . ஒரு சுத்தா ரவுண்டா சுத்தாமா உள்ளயும் காம்பஸ் மாதிரி பல தினுசா சுத்துது.


அய்யோ இந்தக் கொடுமைக்கும் பேரு டைட்டானிக். இதுலதான் ப்ளாக் தண்டர்ல ஏறி நான் ப்ளாக்கானது.எல்லாருக்கும் இப்படி பண்ணாது என்றாலும் எச்சரிக்கை தேவை நடுவுல எல்லாம் கை காலை அசைக்க முடியாம பீதியில்  உட்கார்ந்திருக்கணும். எனவே ஏறுமுன் யோசிங்க.



இது ஏதோ ரைட் . ஆனா ஓடல.


இது குழந்தைகள் சறுக்குமரம்தான். காற்று நிரப்பினது. ஆபத்து ஒண்ணுமில்ல. இருந்தாலும் எச்சரிக்கையா இருக்குறது நல்லதுதானே


கம்பீரமா நிற்கும் இவர்தான் நம்ம ஒபிலிக்ஸ். ஆஸ்ட்ரிக் கார்ட்டூனில் இவர் ஆஸ்ட்ரிக்ஸின் தோழர். அந்த காமிக்ஸிலேயே இவர்தான் நல்ல தாட்டியான ஆள். குண்டான ஆள்னு சொன்னோம்னா கோச்சுக்குவாரு. காட்டுப் பன்றிகளை வேட்டையாடி சுட்டு உண்பதில் ப்ரியம் அதிகம் .



ரோம் தேசத்து மக்களைப் பத்தி “these romans are crazy " அப்பிடின்னு அபிப்ராயம் வைச்சிருப்பாரு. அவங்க கிராமத்து ஆளுங்க மாதிரி , அயல்தேச அன்னிய ஆளுங்களுக்கு அவ்ளோ பத்தாதுங்கிறது இவர் நினைப்பு. இவர் அந்தக் கார்ட்டூனில் பாறையில் வடிக்கப்பட்ட கடிதத்தை டெலிவரி செய்யிற ஆளா பணி செய்வாரு.


முகமூடிகள். மனிதர்களின் மனோபாவங்களைத்தான் முகமூடிகளும் விளக்குகின்றன.

வி ஃபார் வெண்டேட்டா, பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், மைக்கேல் ஜாக்ஸன் த்ரில்லர் , மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரியான முகமூடிகள்.


இதுதான் என்னன்னு தெரில. அப்போ அப்போ எக்ஸிபிஷன்ல பார்த்திருக்கேன்.

இந்த மனிதர்கள் ப்ளாஸ்டிக்/ரப்பரால் செய்யப்பட்டவர்கள் . இதை எப்பிடி எதன்மூலம் இயக்குறாங்கன்னு தெரில. பல்டி அடிச்சு தரையிலும் சுவற்றிலும் ஏறுகிறார்கள்.

ரிமோட்டா இருக்குமோ இல்லாட்டி ஏதும் த்ரெட் இணைப்பு ?


ஜாண் ஏறினா முழம் சறுக்குது, என்ன வாழ்க்கைடா இது அப்பிடிங்கிறாங்களோ  :)



எக்ஸிபிஷன்னா பலூன் ஷூட்டிங் இல்லாமலா :)


ஆக்டோபஸ் இல்ல. கிறிஸ்டுமஸ் ஸ்டார்ஸ்.


இவையும் முகமூடிகள்தான் . வெவ்வேறு ஆதிவாசிகளின் உருவம் கொண்டது.

இவை அலங்கார முகமூடிகள். வால் ஹேங்கர்ஸ்.


வெளியிலும் குட்டி ராட்டினம். இதில். யானை, மீன், வாத்து. குட்டிக் குழந்தைகள் உட்கார்ந்தே சுற்றலாம். முன்புறம் பிடித்துக் கொள்ளக் கைப்பிடி உண்டு. வெய்யிலடித்தால் காயாமல், மழை பெய்தால் நனையாமல் சுற்ற குடையும் உண்டு :)

குஸ்தி சண்டை. ஒருவர் மீது ஒருவர் பல்டி.


பின் என்ன காரணத்தாலோ பிரிந்து போய் பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக :)


அவரவர் பல்டி அவரவருக்கு என்ற ஞானத் தெளிவு வந்திருக்குமோ :)


ஒரு வழியா கோவை கண்காட்சியைப் பார்த்துட்டு வந்தோம். சின்ன சின்ன விஷயங்களில் கவனம் வைச்சிக்கிட்டு போனீங்கன்னா குழந்தைகளோட நல்லா என்ஜாய் பண்ணலாம். கோடை விடுமுறை முடிஞ்சிருக்கும். அடுத்த கோடைக்கு கோவை போய் வாங்க. ) 

2 கருத்துகள்:

  1. பேச்சு வழக்கில் தமிழ் கட்டுரைகள் எழுதுவது ஒட்டிக்கொண்டு விட்டது !?

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் ஆரூர் பாஸ்கர் சகோ :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...