எனது நூல்கள்.

செவ்வாய், 21 மே, 2019

செய்.. செய்யாதே - ஒரு பார்வை.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்ட 34 கேள்விகளும் அவற்றுக்கான சத்குருவின் பதில்களும் அடங்கியது இந்நூல். சுபாவின் எழுத்தாற்றல் மேலும் மெருகூட்டுகிறது இந்நூலை. ஓரிரு கேள்விகளுக்கு சத்குரு அளித்துள்ள பதில்கள் எனக்கு தெளிவான பதிலாகத் தோன்றவில்லை எனினும் மொத்தத்தில் சிறந்த புத்தகம்தான்.


வெவ்வேறு காலகட்டங்களில் மனிதர் மனதில் எழும் குழப்பங்களுக்கு ஒவ்வொரு விஷயத்துக்குமான தர்க்கரீதியான விளக்கமாகச் சொல்லிச் செல்கிறார் சத்குரு.

பணம் பதவி அதிகாரம் எல்லாம் எல்லாருக்கும் ஒரேமாதிரி கிடைப்பதில்லை. ஆனால் உள்முகமாக  உள்ளுணர்வின் மூலம் பெறும் ஆனந்தத்துக்கும் இவற்றுக்கும் சம்பந்தமில்லை. மேலும் அப்படிப் பெறும் ஆனந்தத்தை இவை எவ்விதத்திலும் தடுக்க முடியாது என்பது அவரது ஆணித்தரமான வாதம்.

எந்த விஷயத்திலும் உள்நிலை உறுதியை அவர் வலியுறுத்துகிறார். நாம் செய்யும் எச்செயலும் என்றைக்கோ  அவமானம் தரப்போகிறது என்றால் அச்செயலைச் செய்யாதிருக்கும்படியும் கூறுகிறார்.

பெற்றோரைக் கவனிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, குடும்பத்தைப் பரிபாலிப்பது போன்றவற்றில் எழும் பிரச்சனைகளைச் சமாளிக்க சாமான்யன் படும் வேதனைகளை மனித நேயத்தோடு அணுகி தீர்வுகள் கொடுத்துள்ளார்.

வக்கிரமான மதத் தலைவர்கள் பற்றியும் சாடியுள்ளார். போதனை, பயணம், மரணம் ஆகியவை பற்றியும் வித்யாசமான பார்வை. கலாச்சாரத்தின் மகத்துவம், வெற்றிக்குத்தேவை 100 சதம் திறமை, முழுமையான அர்ப்பணம், நிகழ்காலத்தில் வாழ்தல், மூட நம்பிக்கைகளைச் சாடல், மனதால் எண்ணங்களால் ஏற்படும் கர்மவினை, ஆனந்தத்தின் சிறப்பு என அத்யாவசியமான பிரச்சனைகளை அலசுகிறார்.

உருவ அழகு என்பதை விட திறமைதான் அழகு, மேலும் நாம் கைக்கொள்ளும் ஆனந்தமும் ஆரோக்கியமும், மனம் நிறைந்த புன்னகையும்தான் அழகு என்று கூறியிருப்பது சிறப்பு.

சங்கரன் பிள்ளை என்றொரு கேரக்டரை மிஸ்டர் பொதுஜனம்போல் வைத்து சில குட்டிக்கதைகளுடன் சுவாரசியமாகவே செல்கின்றன கட்டுரைகள்.  ஸ்வேத கேதுவின் வாழ்க்கயையும் தன் வாழ்க்கை அனுபவத்தையும் ( ப்ல உலகங்கள் ) சொல்லிச் செல்லும்போது நாமும் உணர்வுபூர்வமாக அதனுள் பயணிக்கிறோம்.

வாழ்க்கையை குற்ற உணர்வோடு வாழாமல் கொண்டாட்டமாக உற்சாகமாகக் குதூகலமாக வாழுங்கள் என்கிறார்.

மனம் சொல்வதைக் கேளுங்கள். உண்மையான திறமையோடு உழையுங்கள் விழிப்புணர்வோடு செயல்படுங்கள். இதற்கு யோகா ஒரு கருவியாக வழிகாட்டியாகத் திகழ்கிறது எனக்கூறுகிறது இந்நூல்.

நூல் :- செய் .. செய்யாதே
ஆசிரியர் :- சத்குரு ஜக்கி வாசுதேவ்
எழுத்தாக்கம் :- சுபா
பதிப்பகம் :- விகடன் பிரசுரம்.
விலை :- ரூ 130/-

2 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இந்நூலை இதுவரை படித்ததில்லை. படிக்கும் ஆவலை உண்டாக்கியது இப்பதிவு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...