எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 மே, 2019

1987 காதல் கடிதம் !


அன்புள்ள, ஆசையுள்ள, இதயங்கவர்ந்த, ஈதல் குணம் நிறைந்த, உள்ளங்கவர்ந்த ( என்), ஊருக்கெல்லாம் உழைப்பவளான, என்னுடைய, ஏங்கவைக்கும் ( என்னை ), ஐம்புலன்களிலும் நிறைந்திருக்கும் ( என்னுடைய ), ஒருவனை ( என்னை)யே நினைத்திருக்கும், ஓட்டைவாய் தேனு பொம்மிக்கு,

நான் இங்கே என் நினைவுகள் அங்கே.

எனக்கும் உன் ஞாபகமாகவே இருக்கிறது. வீட்டில் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் உன் ஞாபகம்.

இன்று ஊர் வந்து சேர்ந்ததும் நமது ரூமுக்குச் சென்று படுக்க எத்தனித்தபோது தனிமை என்னை மிகக் கடுமையாகத் தாக்கியது. நீயில்லாமல் நமது ரூமே வெறிச்சோடிக் கிடந்தது போல் ஒரு தோற்றம்.

இன்று பாடங்கள் படிப்பதற்கே தோன்றவில்லை. பேசாமல் உன்னை நினைத்துக் கொண்டு படுக்கையில் விழுந்து விடலாமா அல்லது உன் நினைவுகளில் இருந்து சிறிது பிரிந்திருக்க அலுவலகத்துக்கே சென்றுவிடலாமா என்ற ஒரு நினைப்பு வருகிறது. 

ஆனால் ராபர்ட் ஃப்ராஸ்டின் வரிகளின்படி

“WOODS ARE DARK & DEEP
BUT I HAVE MILES TO GO BEFORE I SLEEP “ என்று நினைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக படிக்க உட்காரப் போகிறேன்.

நீ இங்கு இருக்கும்போது நான் படிப்பில் கான்சண்ட்ரேட் செய்த அளவு இப்போது கான்சண்ட்ரேட் செய்ய முடியவில்லை. HOWEVER I WILL TRY MY BEST FOR THE EXAMS.
நீ என்னோடு இருக்கும்வரை உன்னைப்பற்றி நான் அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால் நீயே என்னோடு இருக்கிறாய். ஆனால் நீ என்னருகில் இல்லாதபோது உன் நினைவாகவே இருக்கிறேன்.

உன்னையே ரதி என்று நினைத்துக் கொண்டேயிருக்கும் என்றென்றும் உனக்காகவே வாழும் உன்னுடைய கண்ணன்.

எனக்கும் உங்களைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் உடனே உங்கள் ஆயா வீட்டிற்குச் சென்று ஆயாவுடன் சிறிது  நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவேன். உங்கள் ஆயா வீட்டிற்குச் சென்றாலே அங்கே உங்களது ப்ரஸன்ஸ் இருப்பது போலும் நீங்கள் என் அருகாமையில் நின்று என்னை சுவாசிப்பது போலவும் அந்த வீடு என்பதே உங்களுடன் நம்முடன் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று, அதுவே நாம் என்பதுபோலவும் தோன்றும். உங்கள் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பார்த்தாலே ஏதோ உங்களையே பார்த்துவிட்ட மாதிரி மனதுள் உற்சாகம் பொங்கும். இப்படிப்பட்ட சமயங்களில்தான் என்னுள் உறைந்திருக்கும் நீங்கள் என்னை ஊடுருவியும், என்னிடமிருந்து வெளிப்பட்டும், என்னுள் மறைந்தும் என் மனசுக்குத் தெரிந்தும் இனம்புரியாத ஒரு வினோத மகிழ்ச்சி பாயும்.

MY FAIR AND FAITHFUL WENCH ON PHONE
THE FACE CAN’T SEEN; YET SO WELL KNOWN
THOU ACHE MY HEART AND MAKE ME GROAN
TO WAIT TILL NOON TO HEAR THY TONE.
A LILTING VOICE AND LINERING LAUGHTER
KISSINTH THE EARS LIKE BREEZE IN SUMMER
POPING A MUSIC SWEET AND SOFTER
CHARMING THE MIND LIKE WARMTH IN WINTER
OH THE TORMENTOR OF THE PEACEFUL FLIGHT
HOW ODD OF GOD TO BIND US TIGHT
NOT BY SIGHT BUT THROUGH AN EIGHT .

3 கருத்துகள்:

  1. அடடே....

    அருமை. நீங்கள் காதல் திருமணமா?

    பதிலளிநீக்கு
  2. நிறையவே காடல் கடிதங்கள் எழுதி ஆயிற்று

    பதிலளிநீக்கு
  3. இல்லை ஸ்ரீராம். இது பிள்ளைப்பேறுக்கு வந்தபோது எழுதிய கடிதம் :)

    அஹா நன்றி பாலா சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...