எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அந்தமானில் கம்பராமாயணக் கருத்தரங்கு.

முகநூல் நண்பர் , கம்பன் கழக செயலாளர் , பேராசிரியர் பழனியப்பன் முத்தப்பன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கின்றேன்.

 ////கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின்
சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின்பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு நிகழஉள்ளது.


தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சு வடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.

கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.

மதிப்பிற்குரிய கம்பனடிசூடி அவர்கள் துணைவியாருடன்.

இவ்வழைப்பினை ஏற்றுத் தாங்கள் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். மேலும் இவ்வழைப்பினைத் தாங்கள் பரவலாக்கம் செய்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்.///

டிஸ்கி :- அந்தமானில் நடைபெறும் கம்பராமாயணம் மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கில் தங்களது ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பிக்கும் இணையர் மதிப்பிற்குரிய திரு கம்பனடிசூடி அவர்கட்கும் அவர் தம் துணைவியாருக்கும் , காரைக்குடிக் கம்பன்கழக இளவல்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

6 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்கள். அழைப்பிதழுக்கு நன்றிகள்.

    மேற்படி விழாவில் கலந்துகொள்ள தாங்களும் அந்தமானுக்குச் செல்ல இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி. விழா சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. விழாவின் அழைப்பிதழுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜிகே சார்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி உமையாள்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...