எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 மார்ச், 2016

நீல ரயிலில் ஒரு நீண்ட பயணம்.


1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

உண்மைதான். இரயில் ஒரு அழகான ராட்சசன். எப்போதும் அவன் ஓடிவரும் அழகைக் காணக் காத்திருப்பேன். என் முதல் இரயில் பயணம் அறந்தாங்கியிலிருந்து பட்டுக்கோட்டை என நினைவு. காரைக்குடியில் இருந்து அறந்தாங்கிக்கு பஸ்ஸிலும், ங்கேயிரந்த பட்டுக்கோட்டைக்கு ட்ரெயினிலும், ன்பின் ஸ்டிலிருந்து ஜட்கா ( குதிரை ) வண்டியில் பஸ்ஸ்டாண்ுக்குப் போய் மன்னார்குடிக்கு ( ராஜமன்னார்குடி) பஸ்ஸிலும் செல்வோம். அப்போதெல்லாம் கரியை எரிபொருளாய்வைத்து ஓடும் ரயில் வண்டியில் ஜன்னலோரம் அமர்ந்தால் கண்களில்  கரித்தூசி  விழுவது  நிச்சயம். கண்கைக் கசக்கிகொண்டே பயணிப்பதும் அதன் தாலாட்டில் உறங்குவதும் உலகமகா இன்பங்கள்.


2. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

என் கணவருடன் செல்லும் எல்லாப் பயணங்களும் மகிழ்ச்சியான பயணங்கள்தான். ஆனால் முதன் முதலில் 2009 செப்டம்பரில் துபாய்க்கு ஃப்ளைட்டில் சென்றது மிக மிக மறக்க முடியாத அனுபவம். ஏர்போர்ட்டில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது. ஒரே பிரமிப்பு. பறக்கும்போது தலை சுத்துமோ என்றெல்லாம் கவலை. முதல் ஃப்ளைட் பயணம். என் மூத்த மகன் வந்ததால் நானும் என் பெற்றோரும் கவலையில்லாமல் பயணம் செய்தோம். அதிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் துபாயில் இருக்கும் என் தம்பி மெய்யப்பன் நாங்கள் அனைவரும் அவன் அங்கே இருக்கும்போது ஒரு முறையாவது அவன் வீட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக இங்கேயிருந்து ஃப்ளைட்டில் கால் எடுத்து வைப்பதில் இருந்து திரும்ப வீட்டில் இறங்கி வந்து அமரும் வரை உள்ள ஒவ்வொரு திர்ஹாமையும் செலவு செய்தான். மேப் போல போட்டே அனுப்பி விட்டான். பாஸ்போர்ட் எடுத்ம். விசா இன்சூரன்ஸ் எல்லாம் அவன்தான். 

பணத்தைப் பற்றிய கவலை இல்லை. ஏன் எதைப் பற்றிய கவலையுமே இல்லை. அவன் பாதுகாப்பில் பராமரிப்பில் ஒரு மாதமும் குழந்தைகளைப் போலக் குதூகலமாய்த் திரிந்தோம். அவன் மனைவியும் மிக அருமையான பெண். பெட்டர் ஹாஃப் என்பார்களே அதைப் போல. அவன் கொடுத்தது போக தினம் தினம் நூறு திர்ஹாம் செலவுக்கும் J அதன் பின் திரும்பி வரும்போது ஆளுக்கு ஆயிரம் திர்ஹாமும் அவர் பங்கிப்பாகக் கொடுத்தார். அதை அங்கேயே தங்கமாக வாங்கி வந்துவிட்டோம். 

அதன் பின் 4 வருடங்கள் கழித்து இன்னொரு பயணமும் போய் வந்து விட்டோம். அதேபோல் இந்தத் ும் எல்லா செலவும் தம்பியுடையதே.  அங்கார்ஜான்யுமெண்ட், மியூசியம், எமிரேட் மால், லூலூ மால்,இபுன் பா மால், அட்லாண்டிஸ், டால்ஃபின் ோ, வொண்டர் பஸ், க்ரீக்ார்க், ஆப்ராவில் பம், ுர்ஜ் அல் அராப், புர்ஜ் கீஃபா, (உலத்ிலேயே உயானர்.) ஆகியார்த்ோம்.க்க இயை. 

ே சன் குடும்பத்ாரோடு அறை முருகன்கத் ிசித்ும், சென்றுடம் ஹையிலிரந்து ஃப்ளைட்டில் மும்பை சென்று அங்கேயும் ஜிர்லிங்கங்கத் ிசித்ும் மக்க இயு. (கணவருடன் சிங்கப்பூர், மலேஷியா சென்று வந்ததும் இனிய அனுபவம் )


3. எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?

ட்ராவல் & லிவிங்க்தான் எனக்குப் பிடித்த சானல். அதில் பயணங்களை ரசிப்பேன். உணவுப் பயணமாக இருந்தாலும் சரி. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருந்தாலும் சரி. மேலும் பொதுவாக முன்பதிவு செய்த ரயில் பயணங்கள்தான் பிடிக்கும். செகண்ட் க்ளாஸ் பிடிக்கும் என்றாலும் பாதுகாப்புக் கருதி செகண்ட் ஏசியில் புக் செய்துவிடுவார்கள். கம்பளி விரித்து அதன்மேல் வெள்ளை ப்ளாங்கெட்டை விரித்துப் படுத்தால் அதன் கதகதப்பிலும் லேசான குளிரிலும் உறங்கியபடி சுகமாக ஊர் செல்வது பிடிக்கும்.


4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை :-

பயணங்களில் பராக்குப் பார்ப்பது பிடிக்கும். ஜன்னல் வழியாக. அது போக காதில் ஹெட்ஃபோன் மாட்டி இசையெல்லாம் கேட்பதில்லை. இரயிலின் இசையே பேரின்பம். அதை உற்றுக்கேட்டபடி சில சமயம் இரவுகளில் யோசித்தபடி படுத்திருப்பேன். அவ்வப்போது ஆற்றைக் கடக்கும்போது வித்யாசமான ஒலி கேட்கும். அதன் தாள லயமே நான் ரசிக்கும் இசை.வல்கள், அுவிகள், ஆறுகள், கல்வாய்கள், ம்கள், ்கை எல்லாம் ஒரு கள்ில் ள்ளியி குபுகுபுவெனுளிர் காற்றை அள்ளி இறத்ி செல்லும் ரிலில் அமர்ந்து செல்வே மிகக் கியானிம். 

5. விருப்பமான பயண நேரம்:-

இரவுப் பயணங்கள்தான். வெய்யில் நேரப் பயணமும் பேருந்துப் பயணமும் கொஞ்சம் அலர்ஜி. தவிர்க்க முடியாமல் வட இந்திய நகரங்களில் வசித்த போது பகல் நேரங்களில் பயணம் செய்ய நேர்ந்திருக்கின்றது. வெய்யில் நேரத்தில் ஆந்தீ படுத்தும். குளிர் நேரத்தில் ரஜாய் கொண்டு செல்ல வேண்டும்.

6. விருப்பமான பயணத் துணை:-

வேறு யார்.? என் கணவர்தான். இருவரும் அடிக்கடி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அநேகம் பேசிக்கொள்வதே இப்போதெல்லாம் பயண நேரங்களில்தான். J வீட்டில் ஆர அமர இருந்து பேச நேரம் இல்லை. {குவாலியர், குல்பர்க்கா, டெல்லி, ஆக்ரா, மதுரா, ரிஷிகேஷ், ஹரித்துவார், வைஷ்ணோ தேவி, ஹைதராபாத், பெங்களூரு, மைசூர், சென்னை, மும்பை, கேரளா, ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறோம். இன்னும் கொல்லூர் மூகாம்பிகை உடுப்பி தர்மஸ்தலா, அஜந்தா எல்லோரா, அஸ்ஸாமில் காமாக்யா, ஒரிஸ்ஸாவில் புவனேஷ்வர், கல்கட்டா ஆகியன பார்க்க விழையும் இடங்கள். )  


7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம் :-

புத்தகமெல்லாம் அதிகம் படிப்பதில்லை. அது வேறு சுமையாகி விடுகிறது. ஏதேனும் வாங்கி படிக்காமல் கிடந்தால் அல்லது புத்தகத் திருவிழா, புத்தக வெளியீடு சென்று வந்தபின் பயணித்தால் அந்தப் புத்தகங்களைப் படிப்பேன். ஆனாலும் மனிதர்களைப் படிப்பதும் அவர்களுடன் சிநேகமாய் சில புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வதும் கடந்து செல்லும் இயற்கையை இரசிப்பதுமே பிடிக்கும். புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். விமானம் டேக் ஆஃப், லாண்டிங் எல்லாம் போஸ்டாகவும் போட்டிருக்கிறேன்.


விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி

 

தரையில் இறங்கும் உலோகப் பறவை.. 

 

 இதேபோல் ட்ரெயின் பயணத்தையும் எடுத்துப் போட்டிருக்கின்றேன்.
ஆயிரம் குறை இருந்தும் ரயில்தான் என் முதல் காதல். :) 

 

 

தென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.

 

 

என்னது..ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா

 

 

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்

 


பயணங்களில் தொலைதல்..

 

 

ரயில் நிலைய அவதிகள்:-

 

 

சிங்கப்பூர், மலேஷியப் பயணங்களையும் கட்டுரைகளாக்கி இருக்கின்றேன். :)  அதேபோல் கோல்கொண்டா, குல்பர்கா, குவாலியர் கோட்டைகள் பற்றியும் மைசூர், பெங்களூரு லால்பாக், ஹைதை, தமிழகம் பற்றியும் பயணக் கட்டுரைகள் எழுதி வலைத்தளத்தில் போட்டிருக்கின்றேன். சில பக் கட்டுரைகள் பிய பயணி போன்ற புத்தகங்களிலும் வெளியாகி உள்ளன. :) 

 

 

 8. விருப்பமான ரைட் அல்லது ட்ரைவ்:-




மகிழுந்து ( கார் ) , ஏசி ட்ரெயின், ஃப்ளைட் எனப் பல பயணங்கள் பிடித்தாலும் எனக்குப் பிடித்தது ஒரு மாலை இள வெய்யில் நேரம் என் கணவருடன் டிவிஎஸ் 50 இல் பயணிப்பதே. ஏனெனில் மற்ற எல்லா வண்டிகளிலும் ( பைக், ஸ்கூட்டி ) செல்வதை விட இட நெருக்கடியுடன் டிவிஎஸ்ஸில் அமர்ந்து காதோரம் பேசியபடி செல்வதே அதிகநெருக்கம் கொடுப்பதாக உணர்ந்திருக்கிறேன். சோ என்னோட ஓட்டு டிவிஎஸ் 50 க்கே. J ( ஊட்டி மலை ரயிலில் பயணிக்க ஆசை. ஆனால் ஒவ்வொரு தரமும் அது ஏனோ நிராசையாகிவிடுகிறது. சீச்சி இந்த ட்ரெயின் வேஸ்ட் என்று மனதைத் தேற்றிக்கொண்டுவிட்டேன் :) 

ிருப்பற்றம் ஒன்று. :( 

 கும்பகோணத்திலிருந்து ஒரு முறை பெங்களூருக்குப் பயணம் செய்தபோது தஞ்சாவூரில் ஒரு கால்வாயின் அருகில் ட்ரெயின் ட்ராக்கைத் தாண்ட முயன்ற இரு சிறுமியரில் ஒருத்தியின் தலையில் நாங்கள் அமர்ந்திருந்த ட்ரெயின் கருங்கல் உடைவது போல ஏறிச் சென்றது இன்னும் எனக்கு நடுக்கமூட்டும் சம்பவம். பல நாட்களாக அந்தச் சம்பவம் என்னைத் துரத்துகிறது. ஒரு உயிரின் மேல் ஒரு நூறுபேர் அமர்ந்து சவாரி செய்து சாகடித்திருக்கிறோமே என்று. 

அதேபோல் பயணங்களில் மூன்றாம் பாலினத்தவர் நடந்துகொள்ளும் முறை. நான் வழக்கம்போல் பத்து ரூபாய் வைத்திருப்பேன். கொடுத்துவிடுவேன். ஆனால் ஆண்களிடம் சில மூன்றாம் பாலினத்தவர் சில சமயங்களில் நடந்துகொள்ளும் முறை வருந்தத்தக்கது. }} 

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்:-

பயணத்தில் பாடலா. மூச். ட்ரெயினின் சத்தம் தவிர வேறொன்றும் கேட்க விழையேன் பராபரமே.( நீங்க கேட்டவுடன் பயணம் பயணம் பத்தரை மாத சித்திரம் ஒன்று ஜனனம். என்ற பாடலும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலேவும், கிழக்கே போகும் ரயிலின் ராதிகாவின் சிக்கு புக்குவும் சிரிப்பும் யாவகம் வருது )

10. கனவுப் பயணம் ஏதாவது?

{{ஒவ்வொரு ஃப்ளைட் பயணத்திலும் கொஞ்சம் பதற்றமா இருக்கும். ( ஃப்ளைட் எல்லாம் காணாம போகுதுங்கோ அத வல்லரசு நாடுகளே கண்டுபிடிக்க முடியாமத் திணறுதுங்கோ ). அது போல ஓரிரு  சமயம் எனக்குப் பிடித்த ட்ரெயினில் செல்லும்போது இறந்து விடுவோமோ எனத் தோன்றும். சினிமாக்களில் பார்த்த ஆக்ஸிடெண்ட் காட்சிகள் அசந்தர்ப்பமாக நினைவுக்கு வரும். எப்ப வரும் என்றால் ஒவ்வொரு ஸ்டெஷனிலும் வீல்ஸ் & தண்டவாளம் செக் செய்ய ஸ்டேஷன் முடிவில் ஸ்பாட்லைட் போட்டு ஒருவர் அமர்ந்து தண்டவாளத்தையும் வீல்ஸையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பார். அப்போதுதான். J

ஆமா எனக்குப் பிடித்த கனவுப் பயணம் கேட்டீங்கள்ல. முடிவு என்பதால் எங்கெங்கேயோ போயிட்டு வர்றேன். எனக்குப் பிடித்த கனவுப் பயணம் தென்னாப்பிரிக்காவில் ஓடும் சகல சௌபாக்கியங்கம் கொண்ட ப்ளூ ட்ரெயினில் பயணிப்பதே. J

டிஸ்கி :- நன்றி என்மேலும் நம்பிக்கை வைத்து எப்படியும் எழுதிவிடுவேன் என்று நினைத்து அழைத்த தில்லையகத்து துளசி சகோவுக்கும் கீத்ஸுக்கும். நன்றி நன்றி நன்றி. :) 


10 கருத்துகள்:

  1. பயணப் பதிவு அருமை. பயணச் சத்தத்தில் பாட்டு கேட்பது கொடுமைதான்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதில்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிவின் சில இடங்களில் (குறிப்பாக 2 + 4 கேள்விக்கான பதில்களில்) எழுத்துக்கள் படிக்க முடியாமல் உள்ளன.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா!!!! செம சகோ! எங்கள் அழைப்பை ஏற்று அழகுடன் சொன்னதற்கு மிக்க மிக்க நன்றி!!! ரொம்ப அழகாகப் பயணித்திருக்கின்றீர்கள். நீங்கள் மிகவும் ரசித்து எழுதியிருப்பது போல் நாங்களும் மிகவும் ரசித்து வாசித்தோம்!!! செம செம...மிக்க மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  4. ரசித்து படித்தேன். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. என்னோட இன்னோரு பிம்பத்தைப் பார்ப்பது போல இருந்தது.
    எனக்கும் மிகப் பிடித்தது ரயில் தான். அதுவும் இரவு பயணத்தில் மிகவும் பிடித்தது வழி நெடுக வரும் கிராமங்கள் வயல்களின் நடுவே சின்ன வெளிச்சம்,ஆறுகளைக் கடக்கும் தடா தடா சத்தம்,தாளத்துக் கேற்ப பாடுவது எல்லாமே தான். நறி தேன் .மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. நன்றிடா சுமி !!!

    ஆம் ஸ்ரீராம் . நன்றி :)

    ஃபாண்ட் மாத்திட்டேன் விஜிகே சார் :) நன்றி கருத்துக்கு :)

    என்னை எழுத வைச்சதுக்கு நன்றி கீத்ஸ், & துளசி சகோ :)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஆரூர் பாஸ்கர் :)

    நன்றி வல்லிம்மா :)

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. நான்காவது பதில்... அருமை.
    அனைத்துக் கேள்விகளுக்கும் ரசித்துப் பதில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தயவில் நானும் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றிப் பார்த்தாயிற்று. :-)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...