எனது நூல்கள்.

வியாழன், 17 மார்ச், 2016

புதினம். உலகளாவிய சிறுகதைப் போட்டி.-1,00,000 /- ரூபாய் பரிசு.

இமேஜாக மாற்றி அனுப்பிய சகோ ராம்ப்ரசாத்துக்கு நன்றி. :)
லண்டனில் இருந்து 20 ஆண்டுகளாக வெளிவரும் புதினம் என்ற இலவச மாதாந்திர தமிழ் சஞ்சிகைக்காக உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாய்மையின் சிறப்புப் பற்றி, “ தாயெனும் கோயில் ”என்னும் தலைப்பில் இன்னுமொரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் நெஞ்சைத் தொட்ட தாயின் நினைவையும் எழுதி அனுப்புங்க. ஏ -4 ஷீட்டில் 3 முதல் 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பனும். ( அமரர் சின்னத்தங்கம் ரத்னம் நினைவாக அவரது புத்திரர் ரத்னம் சிவானந்தன் ( KINGSBURY ) இந்தப் போட்டிக்கான ஆதரவை வழங்குகிறார். 

விதிகளைக் கவனமாப்  படிச்சுக்குங்க. ஜூன் 1. 2016 க்குள் அனுப்ப வேண்டும்.பரிசுத் தொகை ஒரு லட்சமாம். அதுனால ப்ரமாதமா எழுதுங்க. முக்கியமா அவங்க கேட்டிருக்கும்படி இலங்கை மக்களின் வாழ்வியல் பற்றி ஏ-4 ஷீட்டில் 10 - 12 பக்கத்துக்கு மிகாம எழுதி, இது உங்க சொந்தப் படைப்புத்தான்னு உறுதிமொழி கொடுத்து 1.6.2016 க்குள்ள கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புங்க.


Editor,
'Puthinam',
38, MOFFAT ROAD,
LONDON SW 17 7EZ,
U.K.

சிறந்த முதல் மூன்று சிறுகதைகளையும் பத்து ஆறுதல் பரிசுகள் வழங்குவதற்காகப் பத்து சிறுகதைகளையும் நடுவர்கள் தேர்வு செய்வார்கள். இப்போட்டி சம்பந்தமான எல்லா விஷயங்களுக்கும் ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. 

20 ஆண்டுகளாக அந்நிய மண்ணிலும் நம் தமிழ் மொழிக்காகச் சேவையாற்றி வருவதற்கும் 20 ஆம் பிறந்தநாளுக்கும் புதினம் சஞ்சிகைக்கு வலைத்தள வாசிகள்  சார்பாக வாழ்த்துகள். இன்னும் தொடர்ந்து நம் மொழிக்கும் மக்களுக்குமான இலக்கிய சேவை ஆற்றிடவும் வாழ்த்துகள்.

டிஸ்கி :- போட்டிக்கான அறிவுப்பு வந்தது பிடிஎஃப் ஃபைலா இருப்பதால் அதை ஜேபிஜி இமேஜா மாத்த ஒரு மணி நேரமா ட்ரை பண்றேன். சரியா தெரில. நாளை தோழி ராமலெக்ஷ்மி அல்லது தனபாலன் சகோவிடம் கேட்டு இமேஜா மாத்தி அந்த அறிவிப்பை இங்கே போடுறேன்.

ஆல் தெ பெஸ்ட் மக்காஸ்ஸ்ஸ் :)10 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பயனுள்ள செய்தி. போட்டியில் கலந்துகொள்ள நினைக்கும் நம் பதிவர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

பரிவை சே.குமார் சொன்னது…

ஆஹா... சொக்கா ஒரு லட்சம்...

Sumitha Ramesh சொன்னது…

அடடா !!பெருந்தொகை பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பங்கேற்பவர்களுக்கு வாழ்த்துகள் !

ஸ்ரீராம். சொன்னது…

ஜெயிக்கப் போறவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். எல்லாப் போட்டிகளுக்கும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சமா?

Shahjahan Rahman சொன்னது…

ஒரு லட்சமா.... எனக்கு இல்லே. எனக்கு இல்லே....
என்னுடைய மெயிலுக்கு பிடிஎப் அனுப்புங்க. 5 நிமிடத்தில் இமேஜா மாத்தி அனுப்பிடறேன்.
shahjahanr@gmail.com

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! வெற்றி பெறப்போகும் அன்பர்களுக்கு வாழ்த்துகள்! தகவலுக்கு மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி சொன்னது…

கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறுகதை எழுதினால்
ஒரு இலட்சமா...
அருமையான போட்டி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஜிகே சார்

ஆமாம் குமார் சகோ

ஆம் சுமி

ஆம் ஸ்ரீராம்

அஹா ஷாஜி உங்களுக்கு இல்லாமலா ! தாங்ஸ் ஷாஜி ராம் அப்பிடின்னு இன்னொரு சகோ மாத்தி அனுப்பிட்டார் :)

நன்றி கீத்ஸ் & துளசி சகோ

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி யாழ்பாவண்ணன் சகோ :)


Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...