சனி, 16 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், பத்மா இளங்கோவின் காதலுக்கு ( பெரியவங்களுக்கு ) மரியாதை.

முகநூலில் சில நட்புக்களில்  கணவன் மனைவி இருவருமே  எனக்கு நல்ல நண்பர்களாக வாய்ப்பதுண்டு.அவர்களில் ஒரு ஜோடிதான் இளங்கோ & பத்மா இவர்கள். இவர்களை இன்னும் சில பத்ரிக்கைகளில் பேட்டி எடுத்தும் போட்டிருக்கேன். என் புத்தக வெளியீட்டுக்கு தம்பதி சமேதரா வந்து வாழ்த்தினாங்க. என் இரண்டாவது புத்தகத்தைப் படிச்சு அதுக்கும் பத்மா அழகா விமர்சனம் செய்ததை இளங்கோ அனுப்பி இருந்தார். எங்கே இருந்தாலும் ஏதோ ஒரு கணம் போன் செய்து இருவரும் நலம் விசாரிப்பாங்க. ஹ்ம்ம் இம்மாதிரி சில நட்புக்கள் கிடைக்க நாமும் தவம் செய்திருக்கிறோம்தான். அவங்ககிட்ட சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி.

 ////உங்க மனைவியை எங்க சந்திச்சீங்க. அந்தத் தருணம் எப்படி இருந்தது. ?/////


 உங்களுக்குத் தெரியுமோ என்னவோ நானும் பத்மாவும் சொந்தக்காரங்கதான். :)  அவங்க அம்மா என் அப்பாவோட ஒரே சகோதரி. 

தமிழ்ப் படங்களில் நீங்க பார்த்திருக்கலாம்.  ”என் பொண்ணை உன் பையனுக்குத்தான் கட்டி வைப்பேன். / உன் பையன் என் பொண்ணைத்தான் கட்டிக்கணும். முறை மாப்பிள்ளை .  நம்ம சொந்தம் விட்டுப் போகாமலிருக்க இதுதான் ஒரே வழி..”

இதன் படியே எங்க திருமணத்தைப் பத்திப் பெரியவங்க பேசி முடிவு செய்தாங்க. எங்க கருத்தையும் முடிவு பண்ணும் முன்னாடி கேட்டாங்க. நான் என் அப்பாவிடம் சம்மதம் சொன்னேன். அவளும் அவங்க அம்மாகிட்ட சம்மதம் சொல்லிட்டா. எங்களுக்கும் ஒருவரை ஒருவர் பிடிச்சிருந்தது. 

இத எல்லாத்தையும் விட முக்கியம் எங்கள் பெற்றோராயிருந்த அவங்களோட விருப்பத்தை நாங்க மதிச்சோம். ஒரு சகோதரன் & சகோதரியின் விருப்பம் நிறைவேறணும்னு நினைச்சோம்.

இது மாதிரி பார்க்கும் சந்தப்பத்திலேல்லாம் எங்க திருமணம் பத்தியே பேசிக்குவாங்க.. இது 1988 லதான் முடிவுக்கு வந்தது. நிச்சயதார்த்தம் 06.06. 1990 ல நடந்தது. திருமணம் 09. 06. 1991 ல் நடந்தது. 

இதுல இருக்க பத்மாவோட ஃபோட்டோவை எடுத்தது நான்தான். ! நிச்சயதார்த்தத்துக்குப் பின்பு எடுத்தது. 

பத்மாவின் அம்மா ( இப்ப அவங்க இல்ல.) என் அப்பாவுடன்.

பரிச அரிசியை மாத்திக்கிறாங்க. என் தாத்தா ( அப்பா, அத்தையின் அப்பா) ,

என் அம்மா, என் அப்பா, பத்மாவின் அம்மா , பத்மாவின் அப்பா என் தாத்தா.


//// As you are aware, myself and padma are relatives. Her mother is the one and only sister for my father... You must have seen in tamil movies...dialogue to brother by sister.. that they wanted to continue their relationship for ever...one and only way for that...yes, it happened to us...our marriage was discussed and finalized by them. But they were asked our opinion before finalizing...I said yes to my daddy and she said yes to her mummy...we liked each other...but more than that, we respected the feelings of that sister and brother... talks were going between sister and brother for years, but finalization took place only in the year 1988...betrothal in 06.06.1990...marriage in 09.06.1991... i am attaching some of the photos... a) Padma's photo taken by me ( !) on the day after Betrothal function... b) Padma's mother and my aunty ( she is no more now...) along with my daddy during the betrothal function... c) Exchanging of பரிச அரிசி...my grand father ( daddy for my aunty and my daddy ) is also there in the photo...from left - my mummy, my daddy, padma'd daddy, padma's mummy and my grand father...////

மிக அருமையான பகிர்வு பத்மா & இளங்கோ. சாட்டர்டே ஜாலி கார்னரை நெகிழ்ச்சி கார்னரா மாத்திட்டீங்க..எனக்கு நீங்க ஏற்கனவே சொந்தக்காரங்கன்னு தெரியாது இளங்கோ & பத்மா. கமல் ஸ்ரீதேவின்னு உங்களப் பத்தி ஒரு முறை கமெண்ட் போட்டிருக்கேன். நல்ல ஜோடிப் பொருத்தம் & மனப் பொருத்தம். வாழ்க வளமுடன். பெரியவங்களுக்கு மரியாதை செய்த உங்க காதலும்  கல்யாண வாழ்க்கையும்.  :) :) :)

6 கருத்துகள் :

K.T.ILANGO சொன்னது…

தங்களை நட்பாக அடைந்தமைக்குப் பெருமைப் படுகிறொம். நன்றி தேனம்மை இலட்சுமணன்....
இளங்கோ & பத்மா

சே. குமார் சொன்னது…

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இளங்கோ

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Vasanthakumar-graphic designer சொன்னது…

ஆஹா அருமை அருமை...இளங்கோ சார் சூப்பர்...நன்றி தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வசந்தகுமார் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...