எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 நவம்பர், 2013

முத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இதழில் எழுதிய கவிதைகள் தொகுப்புக்கான அணிந்துரை.


ஆதிமனிதனின் விலாவிலிருந்து செதுக்கப்பட்டவள் பெண். ஆப்பிளைக் கொடுத்து மனிதனுக்குள் காதலை இழைத்தவள் பெண். கர்ப்பத்தில் உதித்து கர்ப்பக்கிரகத்தில் அடைத்தாலும் கர்ப்பம் சுமந்து காத்து ரட்சிப்பவள் பெண். அம்மா, சகோதரி தோழி எனப் பல பரிமாணங்களில் இருந்தாலும் காதலியாகவும் மனைவியாகவும் கொஞ்சியும் கடிந்தும் ஊடல் செய்தும் ஆணைப் பைத்தியமாக்குபவள் பெண்.



அத்தகைய பெண்ணையும் அவள் பார்வையையும் அன்பையும் காதலையும் அவளுக்கு முத்தம் கொடுக்க ஏங்கியதையும் அவளிடமிருந்து அங்கீகாரமாய் பதில் முத்தம் பெறக் காத்துக் கிடந்ததையும் சதீஷ் சங்கவி காதல் மொழியில் பகிர்ந்திருக்கிறார் காமம் கடந்த அன்பைக் காதலைப் புதுப்பிப்பவை முத்தங்கள்.அத்தகைய பெண்ணின்/பெண்களின் இதழ்களில் இதழ்கள் எழுதிய கவிதைகள் இவை. இதழ்களின் ஈரங்களில் தொலைந்து இதழ்களுக்கு இடைப்பட்ட ஈரமாய் வாழ விழைகிறது. தனிமைத் துணையாய் இருக்கிறது.
 
ஒரு பெண் என்பவள் ஒரு உணர்வாக ,வாசமாக, நூற்றாண்டுகள் தோறும் தொடரும் ஒரு சம்பவமாக ஒரு ஆணின் வாழ்வில் இருக்கிறாள்.ஆண் பெண் ஈர்ப்பு கடவுளின் வரம்.

உன்னை
மகிழ்ச்சியாக வைத்திருக்க
வாழ்வில்
பாதி தொலைத்த
பைத்தியக்காரன் நான்.!!.
பிறகுதான் தெரியும்
என்னை
சந்தோஷமாக வைத்திருக்க
நீ
பைத்தியக்காரியானாய் என்று.

ஒரு பெண்ணின் வாசனை, நறுமணம், சிரிப்புச் சத்தம், ஒரு ஆணின் மனதில் ஏற்படுத்தும் கிளர்ச்சி,கர்ப்பத்தின் இருட்டிலிருந்து வாலிப வயதில் கோடி சூர்யப் பிரகாசமுள்ள ஒரு காதல் உலகத்துள் அடி எடுத்து வைக்கும் ஒருவனின் அந்தராத்மாவின் ஏக்கம். முத்தக் குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கும் ஏக்கம்.

தொடர்பு எல்லைக்கு
வெளியே
இருந்தாலும்
வந்து சேர்கிறது
உன்
முத்த
குறுஞ்செய்தி
.

ஊடல் தீர்க்க முத்தம்
சந்தோஷம் என்றால் முத்தம்

என்று முத்தத்தில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையும் அத்தனை விதமும் உண்டு இதில்.

முத்தம் மழையாவதும் அலையாவதும் சத்தமில்லாத முத்தமும் சூடான பனித்துளி போன்ற முத்தமும் அற்புதம்.
  கன்னம்
என்ற பூவில்
விழுந்த சூடான
பனித்துளி
என்னவனின் முத்தம்..!!!


முத்தத்துக்குப் பின் முத்தத்துக்கு முன் முத்தத்துக்கு நடுவில் எனப் படித்து முடிக்கும்போது நாமும் முத்தமிடும் இருவர் முன் அகஸ்மாத்தாக கடக்கும் உணர்வில் அகப்படுகிறோம். நடையையும் இடையையும் இமை சோர்தலையும் இதழ்களின் அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் வரையும் கவிதைகள் இவை. கவிஞரின் வார்த்தைகளில் சொல்லப்போனால் குறும்பு கொப்பளிக்கும் இக்கவிதைகளைப் படித்து அனுபவித்து ரசிக்க வேண்டும் . ஆராயக் கூடாது
 
முத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே என இந்த இதழில் எழுதிய கவிதைகளைப் படைத்திருக்கும் கவிஞர் சதீஷ் சங்கவி வாழ்வியல் சார்ந்த இன்னும் பல தலைப்புக்களிலும் கவிதைத் தொகுதிகள் படைக்க வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- சகோதரர் சதீஷ் சங்கவியின் “ இதழில் எழுதிய கவிதைகள் “ தொகுப்புக்காக எழுதிய முன்னுரை இது.





7 கருத்துகள்:

  1. வணக்கம்

    வாழ்த்துக்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரூபன் சகோ

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

    பதிலளிநீக்கு
  4. நன்றி செந்தில்குமார் நல்லப்பன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...