வெளிநாட்டில் வசிக்கும் முகநூல் நண்பர்கள், சகோதரிகள் , சகோதரர்கள் நம் அன்பாலும் பண்பாலும் எழுத்தாலும் கவரப்பட்டு சந்திக்க அனுப்பிய பரிசுகள் மற்றும் விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும்போது அளிக்கப்பட்ட பரிசுகள் வீட்டில் நிரம்பிக் கிடக்கின்றன அவர்களின் அன்பைப்போல.
அவற்றில் சில இங்கே.
அமீரகம் சென்றிருந்தபோது என் அன்பு சகோ எழுத்தாளர் கவிமதி இந்தக் குவளையையும் ஒரு நகைப்பெட்டியையும் பரிசளித்தார்.
என் அன்புத்தங்கை கயல் என்னை முதன் முதலில் சந்திக்க வந்தபோது அவளைப்போன்ற அழகான ஒரு குட்டிப் பெண்ணைப் பரிசளித்தாள்.
அறுபடை முருகன் கோயில்களைத் தரிசிக்கச் சென்றிருந்தபோது திருச்செந்தூரில் சகோதரர் சரண்குமார் இந்த அழகன் முருகனைப் பரிசளித்தார்.
சென்னையில் நவராத்திரி விழாவுக்கு இருமுறை சென்றிக்கிறேன் நண்பர் அருண் வீட்டுக்கு தங்கை கயலுடன். ஒரு முறை இந்தக் கைப்பையை அவரின் மனைவியும் அம்மாவும் பரிசளித்தார்கள்.
அன்பாலே செய்த என் ராஜிக்கா அளித்த பரிசு இது. மலேஷியாவிலிருந்து ஒவ்வொருமுறை வரும்போது அவர் எங்களைப் பார்க்க விரும்புவார். என் முதல் புத்தக வெளியீட்டுக்கு வந்து என்னை சந்தோஷப்படுத்தியவர் எங்கள் அன்பு ராஜிக்கா. அவர் கொடுத்த புடவை இது.
என் அன்பு வசு கொடுத்த கைப்பை இது. அடுத்த பிறந்த நாளுக்குப் புடவை பரிசளித்தார். பொதுவாக பரிசளிக்கப் பிறந்தவர் வசு என்று சொல்லாம். ஒவ்வொருவரிடமும் வசுவின் நினைவாக ஒரு கிஃப்ட் கட்டாயம் இருக்கும். மேலும் கிஃப்டை அழகாக பாக் செய்வதும் இவருக்குப் பிடித்தமானது. பாக்கிங்கின் அழகில் மயங்கி பிரிக்கக் கூடத் தோன்றாது. அவ்வளவு அழகு, நேர்த்தி வசுவைப் போலவே.
கென்யாவிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்த காஞ்சனா மோகன். என் அன்புத்தோழி கொடுத்த பரிசு இது. டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஒரு மழைக்கால மாலையில் அவரது குடும்பத்தோடு நண்பர் பொன். காசிராஜனையும் சந்தித்தேன். இந்தச் சாவிக் கோர்வை பாசி மணியாலும் சிப்பியாலும் செய்யப்பட்டது.
யூ எஸ்ஸிலிருந்து வந்த திருநெல்வேலி சித்ரா சாலமன் கொடுத்தது இந்த புக் மார்க். நான் அன்பாக இவளை சித்து/சிட்டு என்று அழைப்பேன். ஸ்ட்ராபெர்ரி கொண்டையுடன் ஒரு ஹேர்பின் போல அழகாக இருக்கும் இது.
யூ எஸ்ஸிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்த அமெரிக்க விஜி கொடுத்தது இது. இந்த வால் ஹேங்க் கதக்களி உருவம் எனக்குப் பிடித்த ஒன்று. மரக்கட்டையில் செதுக்கி தங்க நிற அலங்காரத் தகடு வேலைப்பாடும் செய்யப்பட்டது.
சௌதியிலிருந்து வந்த சகோ அப்துல் ரஹீம் கொடுத்த அலங்காரக் கோப்பை இது. என் ஷோகேஸில் மின்னும் கோப்பை இது.
ஸ்ரீ கான குஹா - இசைப்பள்ளியின் ஆண்டுவிழாவில் பேசியபோது இசையமப்பாளர் விவேக் நாரயணன் அவர்களின் மனைவி அளித்த கெடிகாரம் இது.
சௌம்யா கொடுத்த தட்டும் விளக்கும் சிமிழ்/சந்தனப் பேலாவும்.
அரும்பாக்கம் அரசுப் பள்ளியில் அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாகப் பேசியபோது தோழி மணிமேகலை கொடுத்த ஜக் இது. உள்ளே ஐந்து கப்கள் இருக்கின்றன.
சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் பேசியபோது கொடுக்கப்பட்ட பர்ஸ் இது.
போர்ட் ட்ரஸ்டில் துறைமுகப் பேரதிபர் அதுல்ய மிஸ்ராவுடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது கிடைத்த பியரி கார்டின் பென்செட்டும் பூங்கொத்தும். .
ஜவஹர் வித்யாலயாவில் நடனப் போட்டியில் நடுவராகப் பங்கேற்றபோது கிடைத்த கெடிகாரம் இது.
குரோம்பேட்டை ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் ஆசிரியர் தின உரையாற்றச் சென்றபோது சகோ சதீஷ் அளித்த ஒடிசிப் (ODYSSEY) பெருமாள் இவர். இவருடன் விவேகானந்தரையும் தலைமை ஆசிரியை கையால் பெற்றேன்.
இத்தனை பரிசுகளையும் செல்லும் ஊரெல்லாம் சுமந்து செல்கிறேன். இன்னும் என்னுடன் முகநூல் தொடர்பில் இருக்கும் இவர்களை நெஞ்சில் சுமப்பது போலவே.
இன்னும் 4 புத்தகங்கள், நிறைய சால்வைகளும், போர்வைகளும்,
புடவைகளும், கிச்சன்வேர் சாமான்களும். டைனிங் டேபிள் செட்டும் பரிசுப் பொருட்களும் உண்டு.
அன்புச்சுமை என்கிறார்களே அது இதுதானோ.:)

ஆஹா.. ஆஹா.. இத்தனை அன்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறீர்கள் நீங்கள். ஆனால் அன்பே உருவெடுத்த உங்களைத்தேடி அன்பு வருவதில் ஆச்சரியமில்லையே :-))
பதிலளிநீக்குநன்றி சாந்தி :)
பதிலளிநீக்குDear akka, You have treasured each and every gift. So sweet of you!
பதிலளிநீக்குOH! THANK YOU SO MUCH MY DEAR THEN! HOW THOUGHTFULLY YOU HAVE MENSIONED THE GIFTS WHICH I GAVE YOU! உங்களுடைய நட்ப்பே எனக்குப் பெரிய பரிசுதான்! :) !

பதிலளிநீக்குநன்றி சித்து:)
பதிலளிநீக்குநன்றி காஞ்சனா :)