எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

சென்னை எக்ஸ்ப்ரஸ்ஸா.. தென்னக எக்ஸ்ப்ரஸ்ஸா.. (CHENNAI EXPRESS - REVIEW )

BISCUIT ஐ நாம் பிஸ்கட் என்போம். டெல்லிக்காரர்கள் பிஸ்குட் என்பார்கள். FRIDGE ஐ நாம் ஃப்ரிட்ஜ் என்போம். அவர்கள் ஃப்ரீஈட்ஸ் என்பார்கள்.  என் சொத்தைப் பல்லை டெல்லியில் டாக்டர் பாலியிடம் எடுக்கச் சென்ற போது அவரும் அவர் மனைவியும்  தமிழர்களின் ஹிந்தி உச்சரிப்பைக் கிண்டலடிக்கும் விதமாக ஹிந்தி பேச இந்த டிஸ்கஷனில் நான் அவரிடம் என் கருத்தை வலிய சொன்னேன். ( தேவையா பல்லைப் பிடுங்கினோமா வந்தோமா என்றில்லாமல் என்கிறீர்களா.. :) அவர்களோ அசால்டான புன்னகையுடன் என் பதில் கேலியை எதிர் கொண்டார்கள்.


இந்தப் படத்திலும் லுங்கி டான்ஸ் என்ற பெயரில் ரஜனி போஸ்டரின் முன் ஷாருக் & தீபிகா ஜோடி ஒரு டான்ஸைப் போடுகிறார்கள். போகட்டும் விடுங்க. நாம அடுத்து ஒரு படத்துல பாங்ரா , டாண்டியா டான்ஸை அமிதாப் போஸ்டர் அல்லது ஷாருக் போஸ்டர் முன் கன்னா பின்னாவென்று போட்டா போச்சு.

தலைவா படத்துல மும்பை தாராவி , பாந்த்ரா பகுதி காமிக்கப்பட்டிருந்தாலும் அநாவசியமா ஹிந்திவாலாக்களைக் கேலி செய்யாமல் தமிழ் பேசும் பகுதி மக்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படம் ஏதோ தமிழ் , ஹிந்தி மக்களின் கூட்டு கலாச்சாரத்தை பகிரும் நிகழ்ச்சி போல ஒரே ஜூகல்பந்தி.

தீபிகா ஹிந்தியைத் தமிழர்கள் போல கடித்துத் துப்புகிறார். பதிலுக்கு ஷாருக் தமிழை மென்று துப்புகிறார். படம் பேர் போடும்போதே தீபிகாவின் பேர்தான் முன்னே.. அதன் பின் தான் ஷாருக்கின் பேரே.. ஷாருக் பேர் போடும்போது ஒரே கைதட்டல். சர்க்கஸ், பாஸிகரில் ( BAAZIGAR)  இல் பார்த்த அதே ஷாருக். இளமையும் துள்ளலும் குறையாமல் இருக்கிறார்.

தீபிகா “ ஐம்பது வயதாகியும் இன்னும் கல்யாணமாகலையா” என கிண்டலாக ஒரு வசனத்தைக் கேட்பார்.  அட ஐம்பது வயதாகிருச்சா ஷாருக்குக்கு. இமேஜ் அது இது என்று அலட்டிக் கொள்ளாமல் அடியாட்களைப் பார்க்கும்போதெல்லாம் மாஸ்க் ஹீரோ போல சுருண்டு குனிந்து நெளிந்து உட்காருகிறார். 

படத்தின் கதையை ஒரு பாராவில் எழுதி விடலாம். தாய் தந்தையை 8 வயதில் இழந்த ராகுல் ( ஷாருக் ) , 99 வயதில் இறந்து விட்ட தன்னை வளர்த்த தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க மும்பை டு சென்னை எக்ஸ்ப்ரஸ்ஸில் பயணிக்கிறார். அப்போது மீனம்மா ( தீபிகா) வை சந்திக்க அதன் பின் வரும் கலாட்டாதான் சினிமா. கடைசியில் அஸ்தியை தீபிகாவுடன் சேர்ந்து சென்று கரைத்து தீபிகாவையும் கைப்பிடிக்கிறார்.

ஷாருக்குக்கு எவ்ளோ நல்ல மனசு என்றால் மீனம்மாவை ஓடும் ட்ரெயினில் இருந்து கை தூக்கி விடுவதுபோல அவரைத் தொடரும் அடியாட்களையும் யாரென்றே தெரியாமல் கைகொடுத்துத் தூக்கி விடுவது.

லாஜிக் , மியூசிக் எல்லாம் பார்க்கக் கூடாது. இது பக்கா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி கூட்டு சேர்ந்த கமர்சியல் பட மசாலா. திரைக்கதைக்கான மெனக்கெடாமல் கொஞ்சம் கில்லி, கொஞ்சம் காதலுக்கு மரியாதை, கொஞ்சம் நாயகன், கொஞ்சம் காதலன் , கொஞ்சம் சந்திரமுகி என்ற கலப்பட மிக்ஸிங்கில்  எல்லா மொழிப் படங்களிலும் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு காக்டெயில்.

இதில் சினிமாட்டோகிராஃபியும் எடிட்டிங்கும்தான் சூப்பர்.  கேரளாவின் மூணாறு, பஞ்சாக்கினி, தேவிகுளம், ஹைதராபாத், ஜகர்த்தா ஆகிய இடங்களில் காமிரா நம்மை அழகிய வண்ணங்களில் மகிழ்விக்கிறது. பிரம்மாண்டமான காட்சிகள். ட்ரெயின் ஓட ஓட அதன் உள்ளிலும் வெளியிலும் நாம் பயணிப்பது போல இருக்கிறது. ட்ரெயின் நம்மை மோதுவது போல ஓடுகிறது. காமிராவை தண்டவாளத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார்களோ என்பது போல காமிராவின் மேல்  ட்ரெயின் ஓடுகிறது.

அழகிய மலைகள், வனங்கள், அருவிகள், ( தத்சாகர் ப்ரம்மாதம் ), மரங்கள், கிராமங்கள் , ஏரி, கோயில் என ஒளித் தூரிகையால் வரைந்த கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள்.  சினிமாட்டோகிராஃபிக்காகவே பார்க்கலாம். அதிலும் ஸ்லிம் & அழகிய தீபிகா காஞ்சிப் பட்டுடுத்தி வருகிறார்.  செம செம அழகி.. இந்தப் பொண்ணுங்களை எல்லாம் ப்ரம்மன் ஸ்பெஷலா மெஷின்ல போட்டு அச்சு வார்ப்பாரோ.

என்ன நல்ல விஷயம்னா அடியாட்கள் எல்லாம் மீனம்மா என்று மரியாதையா அழைப்பதோடு சரி. கன்னா பின்னாவென்று அடிக்கவோ, ரேப் செய்யவோ துரத்தவில்லை. தாயை இழந்த பொண்ணு மனசைப் புரிஞ்சுக்காம தங்கபலி ( நிகிதின் தீர் ) க்கு கட்டி வைக்க முயலும் சத்யராஜுக்கு ஷாருக் முடிவில் அட்வைஸ் செய்கிறார். அட பெரிய தலைக்கே அட்வைஸா..

சத்யராஜ் தலைவன் விஜய் மாதிரி புஜம் காட்டியபடி கைகளை மடித்து விட்ட சட்டையுடன் இயல்பாக வருகிறார். கண்ணு என்று தமிழிலேயே பேசுகிறார். நல்ல வேளை எல்லாரையும் ஹிந்தி பேசவைத்துப் படுத்தவில்லை. அபூர்வமாக சில சீன்களின் டெல்லி கணேஷ்  சாரும், மோகன் குமாரும் வருகிறார்கள்.

சீனா பாப்புலேஷன் போல இருக்கு மீனம்மாவின் குடும்பம் என்கிறார். , கொம்பன் என்பது தமிழ் நாட்டுல இருக்கு என்கிறார்கள். எங்க இருக்கு அது.. அங்கே எங்க இந்த அருவி , இயற்கைக் காட்சி எல்லாம், .

சாப்பாட்டை அடியாட்கள் கொசாமுசாவென்று சாப்பிடுவதும் விழிப்பதும். அடியாட்கள் எல்லாரும் கருப்பாக குண்டாக இருப்பதும் ( நிகிதின் எக்ஸப்ஷனல் ) ஹீரோ மட்டும் வெள்ளையாக இருப்பதும் கமர்ஷியல் படத்தில் வழக்கம் என்றாலும் அது ஏன் தமிழனை மட்டும் கருப்பா குண்டா முழிக்கிற மாதிரி காமிக்கிறீங்க..

ஒரு ஃபைட் சீனில் இரண்டு வண்டிகள் காரைத் துரத்த அதில் ஒரு வண்டிக்காரர் பைக்கில் இருந்து சுருண்டு மடங்கி விழுந்ததை பக்கத்தில் வண்டிஓட்டியவர் அதிர்ச்சியோடு பார்த்தார். அந்த ஸ்டண்ட் செய்தவருக்கு என்ன ஆச்சோ என்று பதட்டமாக இருந்தது.

“ பெண்களின் மனதைப் புரிஞ்சு கல்யாணம் பண்ணி வைங்க “ என்று ஷாருக் அட்வைஸ் செய்வது இந்தப் படத்தில் பிடித்திருந்தது. தவக்களையை அணைத்துக் கொள்ளும் ஷாருக்கின் அன்பும் அழகு. மனிதர் கண்களாலேயே பேசுகிறார். தீபிகா நடிப்பிலும் துடிப்பிலும் பேச்சிலும் ஒரு ப்ளசண்ட் ஆச்சர்யம். படம் முழுவது ரியல் கணவன் மனைவி போல ஒருவரை ஒருவர் தொலைக்க நினைத்தாலும் ( ! ). படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தீபிகாவின்  விரல் நுனியை ஷாருக் முத்தமிடுவதும் தீபிகா கன்னம் குழியச் சிரித்து ஓடுவதும் அழகு.

ஆனால் இந்தப் படத்துக்கும் சென்னைக்கும் அதன் எல்லைக்குள் வாழும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ட்ரெயின் சென்னையின் எந்த ஏரியாவையும் டச் பண்ணவேயில்லை. தூர்கேசுவர அழகுசுந்தரம் என்ற மிக்ஸிங் பேரு கர்நாடகா மாதிரி இருக்கு., கேரள காடுகள்ல எடுக்கப்பட்டிருக்கு.  வில்லன்கள்  எல்லாம் தெலுங்கிலேருந்து வந்தா மாதிரி இருக்காங்க. லுங்கி டான்ஸ் ஏதோ ககனம் டான்ஸ் மாதிரி இருக்கு. அதுனால இதை  சென்னை எக்ஸ்ப்ரஸ்ஸுன்னு சொல்றத விட  தென்னக எக்ஸ்ப்ரஸ்ஸுன்னு சொல்லலாம்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 



5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...