எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சுடச் சுட சுடோகு & எண் விளையாட்டு .( SUDOKU CRAZY & KAKURO & HITORI) .. ROMANCING THE NUMBERS.

பெங்களூரு செயிண்ட் ஜான் பள்ளியில் சென்ற வாரம் ஜூலை 30 சுடோகு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை பெற்றுள்ளன. தினம் பேப்பர் படிக்கும் நான் அதன் அறிவிப்பைத் தவற விட்டு விட்டேன். ( ஒரு வேர்ல்ட் சாம்பியனை இந்த ப்லாகர் உலகம் இழந்து விட்டது.. :)


 ஒரு இல்லத்தரசியும், ஒரு கல்லூரி மாணவரும், இரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஹர்மீத் சிங் முதலிடம், வருண் எம் ஷெட்டி இரண்டாமிடம், தீபிகா மூன்றாமிடம், ராஜேஷ் குமார் நான்காமிடம்.சே ஜஸ்ட் மிஸ்ட்..  :)

 தனியே அமர்ந்து விளையாடுவது பிடித்தமான ஒன்று. தோற்றால் நம்மிடம் மட்டுமே நாம் தோற்போம்.. தோற்பது குறித்தான பயம் அல்லது தோற்றபின் மற்றவர்களின் கேலியை ஏற்க மனமின்மையே தனியான விளையாட்டுக்களை விளையாடச் சொல்கிறது. வெற்றியை எதிர்கொள்வது எவ்வளவு கடினமோ  அதே போன்றதுதான் தோல்வியை எதிர்கொள்வதும்.

அடுத்தும் இதே போல நல்லா விளையாடுவார்களா என்ற சுமையை வெற்றி ஏற்றி வைப்பது போல அடுத்தாவது ஜெயிப்பார்களா.. (அல்லது ஜெயிக்கத்தான் விடுவோமா என் மற்றவர்கள் நினைப்பார்களோ )  என்ற எண்ணத்தைத் தோல்வி ஏற்படுத்துகிறது.

கணக்கு என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சுடோகு என்பது ( ROMANCING THE NUMBERS ) எண்களைக் காதலித்தல் எனச் சொல்லலாம். எண்களின் சிக்கல்களை விடுவிக்கும்போது மூளையின் ஞாபகம் சேகரிக்கும் மடிப்புக்கள் அதிகமாவதை உணரலாம்.

கூட்டல் கழித்தல் பெருக்குதல் வகுத்தல் மட்டுமே கணக்கு என்றிருந்த எனக்கு சுடோகு ஒரு வரப்பிரசாதம். பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் அலுவலகத்துக்கும் சென்றபின் அமர்ந்து செய்தித்த்தாள்களில் ( ஹிந்து, டைம்ஸ், தினமலர் ) போன்றவற்றில் வரும் சுடோகு, எண் விளையாட்டு ( காகுரே), போடப் பிடிக்கும். லூப்ஸ் & ஹிட்டோரி  ஏனோ அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

முதலில் அரை நாள் ஏன் ஒரு நாள் கூட எடுக்கும் சுடோகுவை பூர்த்தி செய்ய. ஒரு முறை சுஜாதா எழுதியிருந்ததைப் பார்த்துத்தான் ஆசுவாசமடைந்தேன். ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களை 9 இண்டு 9 = 81 கட்டங்களில் பூர்த்தி செய்ய வேண்டும். வந்த நம்பர் ரிப்பீட் ஆகக் கூடாது.

சுடோகுவில் கிரிட் எனப்படும் கட்டங்களில் 24 முதல் 32 வரை எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக 4  நம்பர் கொண்ட  16 கட்டங்கள் கொண்ட  சுடோகு ,  6 எண்கள் கொண்ட 24 கட்டங்கள் கொண்ட சுடோகு, 9 எண்கள் கொண்ட 81 கட்டங்கள் கொண்ட சுடோகு அதிகம் உள்ளன.  எண்கள் படியும் , சைஸ் படியும் வித்யாசங்கள் கொண்ட சுடோகுகள் உள்ளன.

ஆனால் கில்லர் சுடோகு, சாமுராய் சுடோகு, இரட்டை சுடோகு, ஜிக் ஜாக் சுடோகு, க்யூப்ஸ் சுடோகு, ஏபி சிடி சுடோகு,  ஆட் அண்ட் ஈவன் சுடோகு ( ODD and EVEN ) ஆகியன பொதுவான வகைகள் இன்னும் பல வகைகள் இருக்கின்றன. இவை நான் விளையாடியவை.

என் ஆர்வத்தைப் பார்த்து ரங்கமணி 500 சுடோகு, 300 சுடோகு கொண்ட புத்தகங்களை வாங்கித் தந்தார். சுடோகுவில் எளிமை ( ஒரு ஸ்டார்) , கடினம் ( 3 ஸ்டார் ) மிகக் கடினம் ( 5 ஸ்டார் ) என வகைகள் இருக்கின்றன.

எளிமையை 5 நிமிடத்தில் போட்டு விடலாம் , கடினத்தைக் கூட 10 நிமிடத்தில் போட்டு விடலாம். ஆனால் மிகக் கடினத்தை சில சமயங்களில் 5 நிமிடங்களிலும் சில சமயங்களில் 1 மணி நேரத்திலும் போடலாம். பேப்பரில் அழித்துத் திருத்தாமல் போட்டால் அது வெற்றிதான்.

தினப்படி ந்யூஸ் பார்க்கும்போது வாசிப்பவரின் புடவையை ரசிப்பது போல. பேப்பர் வாங்கியதும் சுடோகு பேப்பரை படிப்பவரிமிருந்து உருவிப் போடுவது சுவாரசியம். பொதுவாக 10 நிமிடங்களில் போடுவேன். ஆனால் இந்தப் போட்டிகளில் 40 நிமிடங்களில் கடினமான 8 சுடோகுகளைப் போட்டிருக்கிறார்கள்.

நான் பொதுவாக ( யாகூ ) ஆன்லைனில் போடுவதில்லை. ஏனெனில் போடும்போதே நம் தவறுகளை அது காண்பிப்பதால் நாம் சட்டென்று திருத்திக் கொண்டு விடுவோம்.  பேப்பரில் போட்டால் கடைசியில்தான் நம் தவறு தெரியும். எனவே இன்னும் ஜாக்கிரதையாகப் போடலாம்.

பல வருடங்களாக இந்த சுடோகு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்து ஆகஸ்ட் 1 அன்று நடந்த போட்டியில்  மும்பையைச் சேர்ந்த இருவரும், ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவரும் வென்றிருக்கின்றார்கள்.  முதல் இடம் ரிஷி பூரி ( ஹைதராபாத் ), மூன்று ரன்னர் அப்ஸ் ப்ரசன்னா சேஷாத்திரி ( மும்பை), ரோகன் ராவ் ( மும்பை) ஜெய்பால் ரெட்டி ( ஹைதராபாத்).

இந்திய சாம்பியன்களான இவர்கள் பெய்ஜிங்கில் நடைபெறும் உலக சுடோகு சாம்பியன் போட்டியில் பங்கு பெறுவார்கள். இதில் ரிஷி பூரி சுடோகு புதிர்களை விடுவிப்பது மட்டுமல்லாமல் புதிர்களை உருவாக்கும் திறமை பெற்றவர். இன்னும் குழந்தைகளை எல்லாம் விளையாட ஊக்குவிப்பவர். செஸ், க்யூப்ஸ் போல சுடோகுவும்  குழந்தைகளுக்கான ஒரு (இண்டோர் ) மூளை விளையாட்டு.

கடைசி முறை உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா 7 வது ஓவரால் ஆக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு சூப்பர் டீமாக இந்த வருடம் கட்டாயம் 5 ஆம் இடத்துக்குள் வர முயற்சிப்போம் எனக் கூறி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சுடோகு காதலர்களுக்கு.! வெல்லுங்கள்.! ராமானுஜனையும், சகுந்தலா தேவியையும் கொடுத்த இந்தியாவை உலக அரங்கில் வெற்றியாளராக முன்னிறுத்துங்கள். !


7 கருத்துகள்:

  1. மேடம், உங்களுடைய சுடோகு பதிவை மிகவும் ரசித்தேன். தனியே அமர்ந்து விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றின உங்கள் விளக்கம் அருமை. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நானும் இப்போது ஈடுபாட்டுடன் சுடோகு விளையாட ஆரம்பித்துள்ளேன். கத்துகுட்டி தான். 60 நிமிடங்களில்தான் 3 ஸ்டார் நிலை சுடோகு போட முடிந்தது. சுஜாதாவிற்கே அரை நாள் எடுத்ததென்றால், நாம் எம்மாத்திரம். ஆரம்ப நாளில், முழுக்க பூர்த்தி செய்தவுடன், முக நூலில் பதிப்பித்து மகிழ்ந்ததுண்டு. முக நூல் இங்கே.
    https://www.facebook.com/rmvenkat

    அன்புடன் வெங்கட்

    பதிலளிநீக்கு
  2. சுடோகு சுடோகுதான் சூப்பர் சுடோகுதான்...
    போற் போக்கைப் பார்த்தால் எண்கள் 1 டு 9 தான் என்று சொன்னாலும் சொல்வோம்

    பதிலளிநீக்கு
  3. சுடோகோ பற்றி சுவையான பதிவு. சுவாரசியமான விளையாட்டுதான் சுடோகோ.கணக்கீடுகள் ஏதுமின்றி எண்களைக் கொண்ட இந்த விளையாட்டு சிக்கல் தீர்க்கும் திறனை வளர்க்கும்,

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட்ராகவன்

    நன்றி கோமா மேடம்

    நன்றி முரளீதரன்

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. மன்னிக்கவும் 1 சுடோகு விளையாடுவது எப்படி என்று தேடி கொண்டு இருந்தேன் .

    அப்போது தான் இந்த பதிவு கிடைத்தது !
    மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவை படித்ததில் !


    நீங்கள் தவறாக எண்ணவில்லை என்றால் எப்படி விளையாடுவது என்று எனக்கு வழி காட்ட முடியுமா?

    அல்லது ஏதேனும் இணைய முகவரியை எனக்கு அனுப்பமுடியுமா?

    என் E MAIL ADDRESS--> OMSEKAR1@GMAIL.COM --- 9688888776

    THANKS

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...