எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மாற்றமில்லாத நான்..

மாற்றமில்லாத நான்.
************************
யூக்கலிப்டஸ் சுமந்தகாற்று
சுவாசம் ஸ்தம்பித்தது..
யூடி கோலான் முடியசைய
வருகிறாய் நீ..

வெள்ளிமீனாய்த் துள்ளியநிலவு
கலங்கி ஒளிந்தது.
தங்கமீனாய்ப் பாய்ந்து
நீரில் தவழ்கிறாய் நீ.


வேர்ரேகைகள் ஓடியமரங்கள்
மண் விரலெடுத்து மூடின
கை ரேகைகள் சிவக்க
கிளைகள் பற்றுகிறாய் நீ.

தேனிலவில் தேனொழுக
நீஉரைத்தது இதெல்லாம்
மோகமும் ஆசையும்
மூழ்கிப்போய் விட்டது.

சோற்றில் முடி கிடக்கு
தண்ணிப்பானை மீன் வாடை
நகங்களை வெட்டித் தொலை
என்கிறாய் இப்போதெல்லாம் நீ..

விட்டத்தைப் பார்த்தபடி
விட்டதை எல்லாம் எப்படிப் பிடிப்பது
என்று வெட்டியாய்க் கவலைப்படாமல்
எப்போதும் போலவே மாற்றமில்லாமல் நான்..

டிஸ்கி:-   ////தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் ஏப்ரல் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை 02

தடாகம் குடும்பத்தினரின் நல் வாழ்த்துக்கள் ..///


நன்றி தடாகம் கலை இலக்கிய வட்டம். 

4 கருத்துகள்:

  1. தடாகம் தேர்வுக்கு வாழ்த்துக்கள்...
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  2. கழிவிரக்கத்தால் காலமெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிராமல் எப்போதும் போலவே வாழ்க்கையை எதிர்கொள்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. கவிதைநாயகிக்கு சாத்தியமானது குறித்து சந்தோஷம் மலர்கிறது. பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார்

    நன்றி கீதமஞ்சரி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...