எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 மே, 2013

புற்று.

ஓட்டின்மேல் காயவைத்தால்
கருட நிழல்.
ஓரமாய்ப் போடப் போனால்
பாம்பின் தடம்.
முள்செடியில் மாட்டி
கிழிகிறது துணி
சகதியில் அழுத்தும்போது
இரத்தச்சகதியின் அசதி.


ஒற்றையடிப்பாதையில்
ஒற்றர்களின் உபாதை.
ஒரு பெண்ணாய் ஆகுமுன்னே
ஓராயிரம் பின்னங்கள்.
ஒற்றையாளோ
கற்றையாட்களோ
கறைப்படுத்தும்
கரையான்கள்.

மருத்துவமணியோ
மாணவமணியோ
மாறி மாறிச் சோதனைகள்.
மதம்பிடித்த வாதனைகள்.
குறுக்கே குத்திய
குடலுள்தான் குடியிருந்திருப்பாய்.
குடியில் இருந்ததனால்
கொற்றவையை அழித்திட்டாய்.

சீறிச்சினந்து சொல்ல
யார்க்கும் நேரமில்லை.
பெண் கல்வி தடுத்தாய்.
நீ கற்க மறுத்தாய்.
புரையோடும் நோயாய்நீ
புற்றாகி வளர்ந்தாய்.
புற்றுக் கொண்டபாகத்தை
தீய்ப்பதுதான் முறையே.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவரி 4, 2013, அதீதத்தில் வெளிவந்தது. 


4 கருத்துகள்:

  1. வலிக்க செய்யும் வார்த்தைகளோடு ஆழமான கவிதை

    பதிலளிநீக்கு
  2. Thani Thaniyai vazhnthaal puttrunoyai thadukkalamaa ? Janathokai kuraiyumaa ? Anbu irukkumaa ?

    Sattru vittu koduthal irupuramum vendumaa ?

    பதிலளிநீக்கு
  3. /// மருத்துவமணியோ
    மாணவமணியோ
    மாறி மாறிச் சோதனைகள்.
    மதம்பிடித்த வாதனைகள்.
    குறுக்கே குத்திய
    குடலுள்தான் குடியிருந்திருப்பாய்.
    குடியில் இருந்ததனால்
    கொற்றவையை அழித்திட்டாய். ///

    உண்மை வரிகள் வேதனை...

    பதிலளிநீக்கு
  4. நன்றி தமிழ்ச்செல்வி

    நன்றி மணவாளன்..

    நன்றி தனபால்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...