எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 மார்ச், 2011

மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ஸாதிகா., சாருமதி., தமிழரசி.,வெங்கடேசன்., திருஷ்காமினி மற்றும் நான்..:)

மகளிர் சுய தொழில் கருத்தரங்கம்., கடன் உதவி விண்ணப்பம்னு கை கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு மகளிருக்கு நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. இந்த மார்ச் மாதத்தில் மகளிர் சுய தொழில் பக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கு.. மகளிர் தின ஸ்பெஷலாச்சே..


எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தன்னடக்கமாக சொல்லும் நம்ம ஸாதிகாதான் இந்த மாத ப்லாகர்.. அவங்க இடுகைகளில் ஒரு நேர்த்தி., அழகு ., இனிய எள்ளல் இருக்கும். அதன் ரசிகை நான்.. மகளிர் தின வாழ்த்துக்கள் ஸாதிகா ..:)

இதுல ஸாதிகா பத்து மேனேஜ்மெண்ட் பத்தி சொல்றாங்க.. அதுல நமக்கு பரிஞ்சுபேசுற ப்லாக் மேனேஜ்மெண்டும் உண்டு.. :) படிச்சா சொல்வீங்க ஸாதிகா நீங்க சொன்னது எல்லாம் வழிமொழிகிறோம்னு..:)

ரயில்வேயில் பணி புரியும் சாருமதி., தமிழரசி இவங்க ரெண்டு பேரும் மற்றும் செகரட்டேரியேட்டில் பணி புரியும் வெங்கடேசனும் ( இவர் பற்றி நம்ம பாலா சார் -- வாசுபாலாஜி ஒரு இடுகை போட்டு இருக்கார். படிங்க.. ) சேவைக்குன்னே பிறந்தவங்க.. ரோட்டிலேயும் ரயில் நிலையங்களிலும் மற்ற பொதுஇடங்களிலும் அநாதையாகவும் .,மன நிலை சரியில்லாமலும் இருந்த 600 நபர்களை காப்பாத்தி உரிய பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து இருக்காங்க.. இந்த மகளிர் தின ஸ்பெஷலுக்கு மணி மகுடம் இவங்கதான்..இவங்க செய்த மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.. இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இவங்க மூவரும் இன்னும் பலருக்கு சேவை செய்ய வாழ்த்துவோம்.

கிரிக்கெட்ன்னு சொன்னவுடனே உங்களுக்கு எல்லாம் கிரிக்கெட் ஃபீவர் வந்துருக்கணுமே.. MD திருஷ்காமினி.. இவங்க பெண் கிரிக்கெட்டர். நம்ம நாட்டோட நம்பிக்கை நட்சத்திரம். இவங்க சகோதரி MD சுகராகமினியும் ஒரு வளர்ந்துவரும் கிரிக்கெட்டர். திருஷ்காமினியோட அப்பா திக்கேஷ் வா ஷங்கர் போல ஒரு அப்பா அமைஞ்சால் எல்லா பெண்களும் சாதிக்க முடியும்.. MD மினி சகோதரிகளுக்கும் அவங்களை ஊக்குவிக்கும் அவங்க அப்பாவுக்கும் சிறப்பு மகளிர் தின வந்தனங்கள்.. உலக அரங்கில் நம் நாட்டின் பெயரை ஒலிக்கச் செய்ய வாழ்த்துக்கள் MD SISTERS..:))
இவங்களை அறிமுகம் செய்து வைத்த சாஸ்திரிபவன் யூனியன் லீடர் மற்றும் எனது தோழி மணிமேகலைக்கும் ., என் அன்புத் தங்கை கீதா இளங்கோவனுக்கும் சிறப்பு நன்றிகள்..

14 கருத்துகள்:

  1. லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அறிமுகம் கிடைத்த அனைவருக்கும்,
    அவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு அமைத்துக் கொடுத்த
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் தேனம்மை அக்கா.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரம், முதன் முதலாய் இன்று தான் அறிந்து கொண்டேன். லேடிஸ் ஸ்பெஷல் என ஒரு நூல் உங்கள் நாட்டில் இருப்பதாக. அதனை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு முதற் கண் நன்றிகள். அடுத்து பெண்கள் எல்லாவற்றிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதனை கிறிக்கற் வீராங்கனை M.D திருஷ்காமினி மூலம் அறியத் தந்துள்ளீர்கள். இதனை விட வ்லைப் பதிவர்களில் மகளிரைப் பற்றிய அலசல். இவை எல்லாவற்றிற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தேனக்கா.
    இன்னும் பலபல பெண்கள் முன்னேற்றவும் முன்னேற்றவும் வழிவகும் பாதையாக ஆகட்டும் லேடீஸ் ஸ்பெசல்..

    பதிலளிநீக்கு
  4. "லேடீஸ் ஸ்பெஷல்" அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்,ஸாதிக்கா சொன்னதால் முன்பே வாசித்தாயிற்று.அருமை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ப்ரகாஷ்

    நன்றி புவனா

    நன்றி நிரூபன்

    நன்றி மலீக்கா

    நன்றி குமார்

    நன்றி சசி

    நன்றி மாதவி

    நன்றி மாதேவி

    நன்றி ஸாதிகா

    நன்றி ஆசியா..

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. I read the article about tamil bloggers. But the URL of blogs is not mentioned in that. It will be nice if u can give URL of bloggers mentioned there.

    A.Hari

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...