எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 4 டிசம்பர், 2018
அழகப்பா பல்கலையில் எனது கவிதை சூலும் சூலமும்.
மகிழ்வுடன் பகிர்கிறேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் எனது கவிதை ஒன்றும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. :)
சூலும் சூலமும் என்ற தலைப்பில் அன்னபட்சி கவிதைத் தொகுதியில் வெளியான அக்கவிதை அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியின் முதலாமாண்டு முதல்பருவப் பாடத்திட்டத்தில் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் ( 2018 - 2019 ) இடம் பெற்றுள்ளது.
சூலும் சூலமும் என்ற தலைப்பில் அன்னபட்சி கவிதைத் தொகுதியில் வெளியான அக்கவிதை அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியின் முதலாமாண்டு முதல்பருவப் பாடத்திட்டத்தில் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் ( 2018 - 2019 ) இடம் பெற்றுள்ளது.
திங்கள், 3 டிசம்பர், 2018
சாம்பவி க்ரியா- இனிக்கும் சுவாசம்.
சாம்பவி க்ரியா- இனிக்கும் சுவாசம்
ஆசைப்படு அடைந்துவிடு படித்தேன். உறவினர் ஒருவர் சொன்னதால் ஈஷா யோகா வகுப்பு ஒன்று அட்டெண்ட் செய்தேன். மிக எளிய இனிய மாற்றம்தான் ஆனால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. ஆசைப்பட்டதை அடையமுடியாமல் தடுத்த சோம்பல் காரணம்.
இந்த நூலில் இருப்பவை அனைத்தும் சுய அறிவுறுத்தல்கள். எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளப் படிக்க எட்டும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். :)
சனி, 1 டிசம்பர், 2018
புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள். தினமலர். சிறுவர்மலர் - 46.
புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள்.
தேசம் தேசமாகச் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது ஒரு புரவி. அதை ஒருவரும் கட்டி வைக்க முயலவில்லை. ஆனால் இரட்டையராய்ப் பிறந்த சின்னஞ்சிறுவர்கள் அதைக் கட்டி வைத்துவிட்டார்கள். அயோத்தி மாநகரமே போருக்கு வந்தும் அதை மீட்க முடியவில்லை. கடைசியாக ராமன் வந்துதான் மீட்டார். அப்படிப்பட்ட வீரச் சிறுவர்கள் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
வால்மீகி முனிவரின் ஆசிரமம். காலைச் சந்தி. அங்கே முனிவர்கள் தினசரி பூஜை புனஸ்காரங்கள் செய்து வேதபாராயணம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். வால்மீகி முனிவரின் அருகே இரட்டை நிலவு போல் காட்சி தரும் இரு சிறுவர்கள் அவருடைய பூஜைக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் லவன் மற்றும் குசன். சீதைக்கும் ராமருக்கும் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
இவர்கள் தாய் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தபின் இவர்களைப் பெற்றாள். அதனால் அவர்களுக்கு ராமர் தம் தந்தை என்பது தெரியாது.
”சாமி ..ஒரு குதிரை சர்வ அலங்காரத்தோட நம்ம ஆசிரமம் பக்கமா வருது. அது யாரோடதுன்னு தெரியல “ என்று சொன்னார் ஒருவர்.
“அலங்காரத்தோட வருதுன்னா அது அஸ்வமேத யாகக் குதிரையா இருக்கலாம் “ என்று சொன்னார் வால்மீகி முனிவர்.
“அது ஏன் இங்கே வருது. அதப் போய் நாங்க பிடிச்சுக் கட்டி வைக்கிறோம். அனுமதி கொடுங்க” என்று கேட்டார்கள் சிறுவர்களான லவனும் குசனும்.
வியாழன், 29 நவம்பர், 2018
தாசன் தலைவனைப் போற்றும் திறம் :-
தாசன் தலைவனைப்
போற்றும் திறம் :-
உலகம் புகழும்
( பார் அதி ) பாரதியை, பாரதத்தின் ‘பா’ ரதத்தை ஓட்டிச் சென்ற வழிகாட்டியை ( ‘பா’ ரதியை
) அவனின் தாசன் புகழ்கின்றான். தாசனுக்குள் இனிமைச் சரிவுகளாய்ப் புரண்ட தலைவனின் நினைவுகள்
பிரவாகமாய் வருகின்றன.
அவன் தன் தலைவனைப்
“பைந்தமிழ்த்
தேர்ப்பாகன் : அவன்
செந்தமிழ்த்
தேனி : சிந்துக்குத் தந்தை
குவிக்கும்
கவிக்குயில் : நாட்டினைப்
பகைக்கும் பகையைக்
கவிழ்க்கும் பகைமுரசு :
நீடுதுயில்
நீக்கப் பாடிவந்த நிலா
காடு மணக்கும்
கற்பூரச் சொற்கோ “ எனப் புகழ்கின்றான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



