எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஜூலை, 2017

சீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )

சீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) 

ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தைப் படிக்க நேர்ந்தது. விருத்தப்பாக்களால் ஆன அந்நூலை அதன் சுவை கெடாமல் வசனநடையில் தந்திருப்பவர் பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியர் . மு. பரமசிவானந்தம் அவர்கள்.

சுதேசமித்திரனும் ஹிந்துவும் இதற்கு நூல்முகம் கொடுத்திருக்கின்றன. சமண முனிவரான திருத்தகு முனிவர் எனப்படும் திருத்தக்க தேவர் இதன் ஆசிரியர். மொத்தம் 3145 பாடல்களும் 13 இலம்பகங்களும் கொண்ட நூல் சீவகசிந்தாமணி ( ஸ்யமந்தக மணி என்பது போல் ஒலிக்கிறதல்லவா

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு பார்வை.



இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு பார்வை. 

முதுகலை அரசியல் அறிவியலில் சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவக் கொள்கைகளைப் படித்ததுண்டு. அது எல்லாம் இப்ப ஞாபகம் இருக்கான்னு கேக்கக்கூடாது. ஏனெனில் அது தொலைதூரக் கல்வி இயக்ககம் தயாரித்த நோட்ஸின் அடிப்படையில் பரிட்சைக்காகப் படித்தது

வெஸ்டர்ன் பொலிட்டிக்கல் தாட்ஸ் என்னும் சப்ஜெக்டில் கார்ல் மார்க்ஸ் பற்றிப் படித்ததுண்டு. வரக்கபேதம் அற்ற சமுதாயம் அவரது கனவு. தாஸ் கேப்பிடல் என்னும் நூலைப் படைத்தவர்

கொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை



கொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை


கவிப்பேரரசு ஆவதற்குமுன் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைத் தொகுப்பு. இதன் பல்வேறு கவிதைகள் என் கல்லூரிக் காலகட்டத்தில் எங்களால் எழுதப்பட்ட கவிதைகளை இனம் காட்டுகின்றன. எனினும் அவர் கவிப்பேரரசர் என்பதாகப் பல கவிதைகள் அடையாளம் காட்டுகின்றன என்பதையும் மறுக்க இயலாது.

விளக்குக்கு ஏன் வெளிச்சம் என்று கேட்கிறீர்களா. இந்த நூல் எனது திருமணப் பரிசாக அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் திருமணங்களில் புத்தகம் வழங்குவது அறிவுஜீவிகளுக்கான செயல். மெய்யாகவே படிப்பவர் அதிகம்

புதன், 26 ஜூலை, 2017

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.



ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.

செல்வராஜ் ஜெகதீசனின் இக்கவிதைகள் ஒரு சின்ன உரையாடலையோ சம்பவத்தையோ நம்முன்னே மானசீகமாக நிகழ்த்திவிடும் திறமை வாய்ந்தவை. ஞாபகப் பூட்டினைத் திறந்து நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும் கவிதைச்சாவிகள் அவை.

என் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.

என் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.

கவிமதியின் கவிதைகள் எளிமையாய் இருப்பதுபோல் தோன்றினாலும் கேள்விக்கணைகள் தாங்கிய ஆயுதம் போன்றவை. அவற்றிடமிருந்து தப்பவே முடியாது.

பொதுவுடைமைவாதிகள் கூறும் அனைத்தையும் அநாயாசமாகக் கவிதைகளில் கூறிச் செல்வார். விளிம்புநிலை மக்களின் மனதில் ஊடாடும் கேள்விகள்தான் அனைத்துக் கவிதைகளுமே.

Related Posts Plugin for WordPress, Blogger...