எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ருக்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ருக்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஏப்ரல், 2021

எடைக்கு எடை சமன் செய்த அன்பின் இலை..

பொன்னல்ல பெரிது..
எடைக்கு எடை  சமன் செய்த அன்பின் இலை/ தங்க துலாபாரத்தை சமன் செய்த துளசிதளம்

ஒரு பொருளையோ மனிதரையோ அடைய பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுக்கலாம். ஆனால் அப்பொருளையோ மனிதரையோ உண்மையான உள்ளன்பு இருந்தால் மட்டுமே ஆத்மார்த்தமாகப் பெற முடியும். கூடை கூடையாய்ப் பொன்னைக் கொட்டியும் ஒருத்தி பெற முடியாத அன்பை ஒரே ஒரு இலையை உள்ளன்போடு கொடுத்து அடைந்தாள் இன்னொருத்தி. அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பகவான் கிருஷ்ணருக்கு சத்யபாமா, ருக்மணி என்ற இரு மனைவியர் . இருவரும் அவர்மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள்.
சத்யபாமாவின் திருமணத்தின்போது அவளது தாய்வீட்டில் இருந்து பொன்னையும் பொருளையும் மலைபோல் சீராகக் கொட்டி அனுப்பி இருந்தார்கள். அது போக கிருஷ்ணருக்குத் தேரோட்டியாக ஒரு சமயம் அவள் செயல்பட்டாள் என்ற பெருமை வேறு அவள் மனத்தில் மமதையை ஏற்படுத்தி இருந்தது.

புதன், 14 நவம்பர், 2018

நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43.

நண்பனால் நலம்பெற்ற சுதாமா.
அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்ணனும். அந்த குருகுலக் கல்வி முறையில் அரசனும் ஒண்ணுதான் ஆண்டியும் ஒண்ணுதான். அனைவரும் குருவின் கட்டளை ஏற்றி செயலாற்றி வரவேண்டும். அவர் அனைவருக்கும் சமமாகவே கற்பிப்பார். அனைவரையும் சமமாகவே நடத்துவார். அனைவருக்கும் சமமாகவே வேலைகள் கொடுப்பார்.
ஒருமுறை அவரது வயலில் மடையை அடைக்கும் பொறுப்பை கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் குரு. ஆனால் கிருஷ்ணருக்கோ உடல் நலமில்லாமல் இருந்தது. அவருக்குப் பதிலாக சுதாமா தான் அந்த வேலையை நிறைவேற்றுவதாகக் கூறிக் காலையில் சென்றார். மதியம் ஆயிற்று, மாலை ஆயிற்று, இரவும் ஆயிற்று. காற்றும் குளிரும் மழையும் சுற்றி அடிக்க சுதாமாவைக்காணவில்லை. மறுநாள் அதிகாலை கிருஷ்ணர் குருவிடம் இது விபரம் தெரிவித்து வயலில் சென்று பார்த்தால், வெள்ளமாய்ப் பொங்கி வரும் மடையை அடைக்க இயலாமல் அந்த மடை வரப்பில் தன் உடலை வைத்து அடைத்துப் படுத்துக் கிடந்தார் சுதாமா. மடையை அடைக்கா விட்டால் பயிர்கள் அழிந்து மூழ்கிவிடுமே.
இதைப்பார்த்ததும் கிருஷ்ணரின் கண்களில் நீர் துளிர் விட்டது. எப்பேர்ப்பட்ட தியாகம். தனக்காக தன் உடலையே வைத்து அடைத்த அந்த நண்பன் சுதாமா கிருஷ்ணரின் அத்யந்த நண்பனாக ஆகிப்போனான்.