ஆடி பதினெட்டை ஒட்டிக் காவிரியைக் கடக்க நேர்ந்தது.
யாருமில்லாமல் காவிரி ஓடியது அன்றுதான் பார்த்தேன்.
ஆதிமந்தி ஆட்டனத்திதான் என் நினைவுக்கு வருவார்கள் ஆதி பதினெட்டென்றால். கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாதி தூரம் கூடவே ஓடிவருகிறது காவிரி. இராமகிருஷ்ணா மடம், பள்ளிகள் எனத் தொடர்ந்து காவிரியின் அரசாட்சிதான்.
திட்டுத் திட்டாகப் புதர்கள் முளைத்திருக்க அவற்றைச் சுற்றிச் சுழித்துக் கொண்டு ஓடியது காவிரி.