நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்
செட்டி நாட்டு உணவின் சிறப்புகள்
இங்கிருக்கும் வீடுகளைப் போல செட்டிநாட்டு உணவுகளும் கட்டுக்கோப்பானவை. உடலுக்கு ஒரு தீங்கும் செய்யாதவை. மசாலா எண்ணெய் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தியும் செய்யலாம். முன் காலத்தில் அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்து மஞ்சட்டியில் சமைப்பதால் மிக ருசியாக இருக்கும். இங்கே இன்றும் திருமணப் பலகாரங்கள், எடைவேளைப் பலகாரங்கள் என்பவை பிரசித்தம். தீபாவளி, பிள்ளையார் நோன்பு, திருமணம், விளையாட்டுப் பொட்டி வேவு, சூப்புடி, கார்த்திகைப் புதுமை, திருவாதிரைப் புதுமை போன்றவற்றில் இவ்வுணவு வகைகளைச் செய்து பரிமாறுவார்கள். செட்டிநாட்டார் உணவை செய்வதில் மட்டுமல்ல விருந்தினரை உபசரித்து மகிழ்வதிலும் பெருவிருப்பம் கொண்டவர்கள்.
தேனம்மைலெக்ஷ்மணன்.