எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன். HOLLYWOOD HEROS NO.1. LIAM NEESON.

ஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன்.


என்னைக் கவர்ந்த ஹாலிவுட் ஹீரோஸ் வரிசையில் நிச்சயம் லியம் நீஸனுக்கு முதலிடம் உண்டு. நான் அவரது பெரும்பாலான படங்களை பார்த்ததில்லை என்றாலும் பார்த்த சில படங்கள் அவரது காரெக்டரை உண்மையான பர்சனாலிட்டி போல மனதில் பதியவைத்தவை.

எல்லாருக்கும் அவரது தந்தைதானே முதல் ஹீரோவாய் இருக்கக்கூடும். லியம் நடித்த டேக்கன் படத்தில் அவர் பதின்பருவப் பெண் ஒருவருக்குத் தந்தையாய் நடித்திருப்பார். அந்த முதல் இம்ப்ரஷனே பிடித்தது. மகாநதி கமல் டைப் கதை அது. தன்  பெண்ணை மீட்கப் போராடும் தகப்பனின் கதை அது. மகாநதியைப் பார்த்துவிட்டுப் புரண்டு புரண்டு அழுத ( பெண்குழந்தைக்குத் தகப்பன்களான ) ரங்க்ஸின் நண்பர்கள் ஏராளம். 

லியம் பிறந்தது பிரிட்டனில் உள்ள  வடக்கு அயர்லாந்தில் 1952 ஜூன் 7 இல். அம்மா பெயர் காதரின் அப்பா பெர்னார்ட் நீஸன்.  லியம் நீஸனோட இயற்பெயர் வில்லியம் ஜான்  நீஸன். ட்ராக் ட்ரைவர், ஆர்க்கிடெக்ட், பாக்ஸர் போன்ற தொழில் புரிந்தவர் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.  

1976 இல் பெல்பாஸ்ட் லிரிக் பிளேயர்ஸ் தியேட்டர் , அதன் பிறகு டப்ளின் அபே தியேட்டர் ஆகியவற்றில் ஆர்டிஸ்டா இருந்திருக்கார். அப்போ டைரக்டர் ஜான் புர்மேன் கண்ணுல பட்டு எக்ஸ்காலிபர் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது.

இன்னும் பல டிவி சீரியல்களிலும் சினிமாக்களிலும் நடித்திருந்தாலும் இவர் நடித்த டேக்கன் தொடர் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. கரகரக்குரல் இவரது ஸ்பெஷல். தொலைபேசிக் குரல்  மூலமே வில்லனைக் கண்டுபிடிப்பதும், பின்னர் வெளுத்து வாங்குவதும் சூப்பர். மிகவும் மென்மையான முகபாவமுள்ள இவர் சிறுவயதில் நார்த் அயர்லாந்தில் வன்முறையைப் பார்த்து வளர்ந்ததால் அது இவரது சினிமா கேரியருக்கு உதவியிருக்கலாம் எனத்தோன்றுகிறது.

சாதாரணத் தகப்பனாகக் காட்சி தரும் இவர் சூப்பர் ஹீரோவாக சண்டைக்காட்சிகளில் பின்னிப் பெடலெடுப்பார். நடிக்க வந்த புதிதில் ஒன்றரை மில்லியன் டாலர் சம்பளம் வாங்கிய இவர் இப்போது 2014 இல் வாங்கிய சம்பளம் 2 கோடி டாலர். ! 

"நான் உன்னைக் கொன்றால் உன் சந்ததியினர் பின்னர் தொடர்ந்து வந்து என்னைப் பழி வாங்குவார்கள், இது தொடரும். அதனால் வேண்டாம்" என்று என்று டேக்கன் - 2 வில்  இவர் பேசும் வசனம் எனக்குப் பிடித்தது. 55 - 65 வயதிலும் கவர்ச்சிகரமான ஆக்ஷன் ஹீரோவாகத் தொடர்வது அதிசயத்துக்குரிய விஷயம்.

ரங்க்ஸுடன் இவரது மற்ற படங்களையும் ஓரளவு பார்த்திருக்கிறேன். (ஸ்டார் வார்ஸ், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், டார்க்மேன், சஸ்பெக்ட், டைடன், ஃபாண்டம் மெனேஸ், பாட்மான் பிகின்ஸ்  ) ஆனால் டேக்கன் தொடர் படங்கள்தான் என்னவோ மனதில் நிலைத்து நின்றதும் பிடித்ததும். நம்ம கமல் போல எங்கள் இருவருக்குமே மிகப் பிடித்த நடிகர் இவர்.

மகளைக் காக்கும் தந்தையாக நடித்த இவருக்கு இரு மகன்கள் மட்டும்தான். மகள் கிடையாது. :) மகளைக் காக்க மூன்று  படங்களிலும் இவர் எடுக்கும் முயற்சிகள் வித்தியாசமானவை. மூன்றாவது படத்தில் நடப்பதுபோலவே இவரது மனைவியும் இவரை விட்டு எதிர்பாராமல் ஒரு விபத்தில் மறைந்தது வருத்தத்துக்குரியது. 

தீர்க்கமான பார்வையும் அசால்டான வேகமும் ஆறடி உயரமுமுள்ள இந்த நடிகரின் உடலின் ஒவ்வொரு செல்லும் இயல்பாக நடிக்கும் என்பதோடு இன்னும் இவரை அத்தகு தந்தையாகவே என்னை நினைக்கச்செய்திருப்பதுதான் இவரது நடிப்பின் ஸ்பெஷல் என்பதால் இவர் என்னைக் கவர்ந்த முதல் ஹாலிவுட் ஹீரோ ஆவார்.

எழுத்தாளர்களை பிடிக்கும் என்று இவர் கூறியிருப்பதே இவரை எனக்குப் பிடிக்கக் காரணமாய் இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. :)



டேக்கன் 4 க்காக காத்திருக்கோம் சீக்கிரம் வெளிவந்து சக்ஸஸ் ஆக வாழ்த்துக்கள்
 

2 கருத்துகள்:

  1. இவருடைய சில படங்களை நான் பார்த்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. nandraga irukkum Jambu sir. karuthukku nandri.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...