எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 நவம்பர், 2014

ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

நகரத்தார் சொல் வழக்கு:- 1.
****************************
45. உறவு முறைச் சொற்கள்.

நிறைய வழக்குச் சொற்கள் வழக்கொழிந்து போய் விட்டன.. மிச்சமிருக்கும் இவற்றை பதிவு செய்யவே இது..

உறவுமுறைச் சொற்கள் முதலில்  கொடுத்துள்ளேன்.


1. அப்பச்சி - தந்தையை அழைக்கும் சொல்

2. ஆத்தா -  தாயை அழைக்கும் சொல்.

3, ஐயா  - அப்பாவை பெற்ற தாத்தா அல்லது அம்மாவைப் பெற்ற தாத்தா.

4. அப்பத்தா - அப்பாவை பெற்ற அம்மா..(பாட்டி)

5. ஆயா-   அம்மாவைப் பெற்ற அம்மா..( பாட்டி)


6. அயித்தை - அத்தை ( அப்பாவின் சகோதரி)

7. அம்மான் - மாமா ( அம்மாவின் சகோதரன்)

8 . செட்டியார் -  ஆண்களை குறிக்கும் சொல்( கணவரைக் குறிப்பிடவும் பெண்கள் பயன்படுத்துவார்கள் )  ( ஆண் மகனையும் வயதில் பெரியவர்களையும் குறிக்கும் வார்த்தை.

9. ஆச்சி - பெண்களைக் குறிக்கும் சொல்., சொந்த அக்காவையும் ஆச்சி எனச் சொல்வார்கள்.
(பொதுவாக  வயதில் பெரிய பெண்ணைக் குறிக்கும், விளிக்கும் வார்த்தை)
 
10. தம்பி - சின்ன சகோதரனை குறிப்பது.. ஆனால் சமயத்தில் பெற்றோர் மகனை தம்பி என விளிப்பார்கள்.

11. அண்ணமிண்டி - அண்ணன் மனைவியை கூப்பிடுவது ( அண்ணன் பெண்டிர்)

12. தம்பி வண்டி - தம்பியின் மனைவியை சொல்வது ( தம்பி பெண்டிர்)

13.அம்மாமிண்டி - மாமாவின் மனைவியை அழைப்பது (அம்மான் பெண்டிர். )

14. அயித்தான் - அத்தை அல்லது மாமா மகன் (ஆச்சியின் கணவர். ( அக்காவின் கணவர் )

15 . அயித்தியாண்டி - அத்தை அல்லது மாமா மகள்

16. மகமிண்டி - மகன் பெண்டிர் ( மகனின் மனைவி )

17. மாமனாவண்டி - சின்னமாமனார்/பெரிய மாமனாரின் மனைவி. 

18. ஆம்பிடையான்/ஆம்பிளையான்  - கணவர். ( உறவில் உள்ள பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் கணவரை இப்படி அடையாளப்படுத்துவார்கள்.)

19. பெரியப்பச்சி - பெரியப்பா

20. பெரியத்தா - பெரியம்மா

21. சின்னத்தா - சித்தி

22. பாட்டையா - ஐயாவின் தந்தை

23. பாட்டியாயா - ஐயா/ அப்பத்தாவின் தாய்

24. கொள்ளுப் பாட்டையா, கொள்ளுப் பாட்டியாயா  - பாட்டையா/ பாட்டியாயாக்களின் தந்தை, தாய்.

25. பெரியய்யா - பெரிய தாத்தா

26. பெரியாயா - பெரிய ஆயா ( அம்மா வழிப் பாட்டி )

27. பெரியப்பத்தா - பெரிய அப்பத்தா ( அப்பா வழிப் பாட்டி )

28, சின்னய்யா - சின்னத் தாத்தா

29. சின்னாயா - சின்ன ஆயா ( அம்மா வழிப் பாட்டி )

30. சின்னப்பத்தா - சின்ன அப்பத்தா ( அப்பா வழிப் பாட்டி )

31. அரசு - ஆண் குழந்தைகளைக் குறிப்பது..

32. ஐயாக்காளை - ஆண் குழந்தையைப் பிரியத்துடன் விளிப்பது.

33. ஆத்தாப் பொண்ணு - பெண் குழந்தையைப் பிரியத்துடன்  விளிப்பது.

அண்ணன், சித்தப்பா, மகள், மகன் , மாப்பிள்ளை, தம்பி, தங்கச்சி, மாமனார், மாமியார்  ஆகியோரை அப்படியேதான் விளிப்பார்கள்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


10 கருத்துகள்:

  1. செட்டிநாட்டுச் சொல்வழக்கு அருமை.

    பதிலளிநீக்கு
  2. இதில் சில வார்த்தைகள் செட்டியார் சமூகம் தவிர மற்ற சமூகத்திலும் நம் பக்கம் பேசுவார்கள் அக்கா...

    அம்மான், அண்ணபொண்டி, அயித்தை, அயித்தான் இப்படி எல்லாம்....

    பதிலளிநீக்கு
  3. சொர்க்கமே என்றாலும் நம்ம காரைக்குடியைப் போல வருமா சகோதரி.அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  4. ஊர் வழக்க உறவு முறைச் சொல்கள்
    நானறிந்து கற்க உதவிய பதிவிது
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி கோமதி மேம்

    உண்மை குமார் சகோ

    ஆமாம் அனிதா :)

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. பல வார்த்தைகளை புதிதாய் தெரிந்து கொண்டேன்... நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...