செவ்வாய், 18 நவம்பர், 2014

வழித்துணையும் சுமைதாங்கியும்.

தலைக்குமேல் ஒரு கூரை
பக்கவாட்டு வெய்யில்
சல்லடைத்துளி மழை
ஒரு முழம் துணி
எப்போதோ ஒரு தீபமும்
பிள்ளைகள் சூழ்ந்து ஆடும் போதில்
சிதறிய தேங்காத்துண்டுகளும்.
இதற்குமேல் ஆசைப்படுவதில்லை
எங்கள் தெருவோரக் கடவுள்..
போகும் திசைக்கெல்லாம்
கைபிடித்துக் கூடவே வருவதும்
ஓய்ந்தமர்ந்த நேரங்களில்
எங்கள் திட்டைப் பெற்றுக்கொள்வதும்
அவர் பொழுதுபோக்கு.

எந்த சுனாமி வந்தாலும்
விட்டு ஓடுவதில்லை.
எந்த மாற்று வாரியங்களும்
அவருக்கு வீடு வழங்குவதில்லை.
குறையற்ற முதியவன் போலும்
நூற்றாண்டுக்குழந்தைபோலும்
கலந்து கிடக்கிறான் எங்களுள்ளே.,
எங்கள் வழித்துணையாகவும்
சுமைதாங்கியாகவும்.


6 கருத்துகள் :

Ramani S சொன்னது…

குறையற்ற முதியவன் போலும்
நூற்றாண்டுக்குழந்தைபோலும்
கலந்து கிடக்கிறான் எங்களுள்ளே.,
எங்கள் வழித்துணையாகவும்
சுமைதாங்கியாகவும்.//

அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி ரமணி சார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

-'பரிவை' சே.குமார் சொன்னது…

வழித்துணையாகவும்
சுமைதாங்கியாகவும்...
அருமை அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...