எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், ரோஷிணியின் கோடரிக்காரன் கதை.


டெல்லியில் வசிக்கும் வலைப்பதிவர், நண்பர்,  சகோ வெங்கட் நாகராஜ் வெளிச்சக் கீற்றுகள், வெங்கட் நாகராஜ், நான் ரசித்த பாடல்கள் என்று மூன்று வலைத்தளங்கள் வைத்திருக்கிறார். அவரும் அவரின் மனைவி ஆதி வெங்கட்டும் என்னுடைய வலைத்தளத்தை வாசித்து அடிக்கடி பின்னூட்டமிடுவார்கள்.

இவருடைய இடுகைகளில் வைஷ்ணோ தேவி பற்றிய இடுகை ரொம்பப் பிடித்தது . ஏனெனில் நாங்கள் சென்று வந்தபோது அதிகம் ஃபோட்டோக்கள் எடுக்கவில்லை. மேலும் அருமையான புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்குத் தக்க கமெண்ட்ஸ் போடுவார் ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும்

ஒரு முறை தன்னுடைய பெண்ணின் விநாயகர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தார். பார்த்தால் ரொம்பவே நல்லா இருந்தது.கண்ணால் பார்ப்பதைக் கையால் செய்துவிடுவாள் என்று காரைக்குடிப்பக்கம் சமத்தான பெண் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். ரோஷிணியும் விநாயரைப் பார்த்து தத்ரூபமாக வரைந்திருந்தாள்.  மேலும் இரு படங்களிலேயே நமக்கெல்லாம் தெரிந்த கோடரிக்காரன் கதையைச் சொல்லி இருந்தாள். அது ஆச்சர்யமாக இருந்தது. அதனால் அவரிடம் ரோஷிணியில் ஒவியத் திறமை பற்றிக்கேட்டேன்.

/// வெங்கட் சகோ ரோஷிணியின் ஓவியத் திறமையை எப்போது கண்டுபிடித்தீர்கள். அவளுக்கு எவற்றை வரைவதில் விருப்பம் அதிகம். ? சில ஸ்பெஷல் ஓவியங்களையும் அவள் திறமையையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ///


எனது மகள் ரோஷ்ணிக்கு மூன்று வயதிருக்கலாம் – அப்போது அவள் பென்சில் பிடித்து அவளுக்கு தோன்றிய மாதிரி எதையாவது வரையத் துவங்கினாள். Pre-KG வகுப்புகளில் சேர்ந்த பிறகு வண்ணம் தீட்டுவதில் விருப்பம் – ஆரம்பத்தில் சில மனிதர்களின் தலைமுடிக்கு ஆரஞ்சு, பச்சை என்று வித்தியாசமாக வண்ணம் தீட்டுவாள்!! – ஒரு வேளை தில்லியில் பல இளைஞர்கள்/யுவதிகள் தங்களது தலைமுடிக்கு வித்தியாசமான வண்ணங்களை பூசிக்கொள்வதைப் பார்த்த விளைவாக இருக்கலாம்!

கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கும் படங்களை – சுலபமாக வரைய முடியும் படங்களை வரையத் துவங்கினாள். கூடவே கணினியிலும் Paint மென்பொருள் கொண்டு வரைவதில் ஆர்வம் காட்டினாள்.  மகள் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை எனது வலைப்பூவிலும், மகளுக்கென ஆரம்பித்த வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். பார்க்கும் நண்பர்கள் கொடுத்த ஆதரவினாலும், அவளது சுய விருப்பத்தினாலும் படங்கள் வரைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வீட்டில் இருக்கும் அனைவரது பிறந்த நாட்களில் பிறந்த நாள் பரிசாக எதையாவது வரைந்து தருவது அவளுக்கு பிடித்தமான ஒன்று. பள்ளியில் நடைபெறும் சில ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றதால் கிடைத்த ஊக்கமும் அவள் தொடர்ந்து ஓவியம் வரைய ஏதுவாய் அமைந்து இருக்கிறது.  பள்ளிப் படிப்பிற்கு நடுவே அவ்வப்போது ஓவியம் வரைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.


அவளாகவே வரைந்து கொண்டிருந்தாலும், ஒரு பயிற்சி வகுப்பிக்குச் சென்று கற்றுக்கொள்வது நல்ல முன்னேற்றம் தரும் என்பதனால் தற்போது ஒரு ஓவிய வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறாள். அங்கே அவளது ஓவிய ஆசிரியர் தரும் சில பயிற்சிகளால் அவளது ஓவியங்களில் நல்ல முன்னேற்றம்.

தற்போது நான்காவது படித்துக்கொண்டிருக்கிறாள்.  எதிர்காலத்தில் ஓவியராக வர வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் சொல்கிறாள் – காலம் தான் அதனை முடிவு செய்ய வேண்டும்.

-- மிக அருமையான ஓவியங்கள் வெங்கட். மேலும் டெல்லியில் நீங்கள் சொன்னது போல கலர் கலர் தலைமுடியுடன்தான் மக்கள் தென்படுவார்கள். :) ஆரஞ்சு, மெரூன், க்ரே என்று. :) 

நாமெல்லாம் முன்பு ஒரு கதையைப் புத்தகத்தில் படித்தால் அதன் படத்தை முதலில் பார்ப்போம். அதைப் பற்றிய சித்திரம் மனதில் உருவாகும் . அதுபோல காமிக் புத்தகங்களுக்கும், கார்ட்டூன் கதைகளுக்கும் நாம் அடிமை அல்லவா. :) 

அவள் வரைந்த நர்த்தன கணபதி அற்புதம். பாடம் நடத்தும் விநாயகர் வித்யாசம். :) சிவன், கிருஷ்ணர் கண்களில் குறும்பு கூத்தாடுகிறது.  மேலும் அவளுக்குப் பல கதைகள் சொல்லி அவற்றை இரண்டு அல்லது மூன்று ஓவியங்களாக வரையச் சொல்லி ஊக்கம் கொடுங்கள் . இது புதுமாதிரி முயற்சி. நிச்சயம் வெற்றி பெறுவாள்.  எனது வாழ்த்துக்கள் குட்டி ஓவியருக்கு :)


19 கருத்துகள்:

  1. நண்பர் வெங்கட் ஜியின் மகள் ரோஷினியின் படங்களைப் பார்த்திருக்கின்றோம்! இங்கும் தாங்கள் பகிர்ந்து கொண்டது சந்தோஷமாக இருக்கின்றது! நல்ல திறமை உள்ள ரோஷிணிக்கு அவரது விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்! நாங்களும் விநாயகர் படத்தை மிகவும் ரசித்திருக்கின்றோம். முன்பே. வித்தியாசமான படம்.....

    ரோஷிணி குட்டி! எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! பகிர்ந்த உங்களுக்கும் சேர்த்து!

    பதிலளிநீக்கு
  2. எனது மகளின் ஓவியங்களை இங்கே வெளியிட்டு அவ்ரது முயற்சிகளைப் பாராட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  3. குட்டி ஓவியருக்கு இனிய வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  4. ரோஷினி குட்டிக்கு அன்பு வாழ்த்துக்கள் ..ஒவ்வொரு படமும் அழகோ அழகு !
    எனக்கு பாடம் நடத்தும் பிள்ளையார் ரொம்ப பிடிச்சிருக்கு :)
    வண்ணங்களின் கோலம் அழகா கண்ணுக்கு குளுமையா இருக்கு ....flash ஒழி விழிகளில் தெரிவதை கூட அழகா வரைந்திருக்கா ரோஷினி !!பாராட்டுக்கள்மா .

    பதிலளிநீக்கு
  5. குட்டிக் குழந்தையாம் ரோஷிணி நற்பெயர்
    எட்டும் புகழை எழுந்து!

    குட்டி ஓவியர் குழந்தை ரோஷிணி ஓவியங்கள் அற்புதம்!
    எத்தனை திறமை இந்த வயதிற்குள்ளேயே!..
    பெற்றவர்கள் பெருமை பெறுவார்கள் நிச்சயம்!
    இன்னும் வளர்ந்து அதிசிறந்த ஓவியராகத் திகழ
    ரோஷிணிக்கும் பெற்றோருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    நல்லதொரு பகிர்வு சகோதரி!
    உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஓவியங்களை அழகாக வரைந்திருக்கிறா ரோஷிணி .சிவனும்,பாடம் நடத்தும் பிள்ளையாரும் சூப்பர்.வாழ்த்துக்கள். மேலும் உங்க திறமையை வளர்த்து,ஊக்கம் கொடுக்கும் பெற்றாருக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  7. ரோஷ்ணியின் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்.
    ரோஷ்ணி வரைந்த அத்தனை படங்களும் அழகு.
    ரோஷ்ணியை ஊக்கபடுத்தும் விதமாய் இங்கு ரோஷ்ணியின் படங்களையும் , திறமைகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  8. குழந்தை ஓவியர் ரோஷ்ணி என் இல்லத்துக்கு ஒருமுறை வருகை தந்துள்ளார்கள்.

    அதைப்பற்றிய என் பதிவு: http://gopu1949.blogspot.in/2013/03/4.html

    அதுபோல ஒரேயொருமுறை ஓவியர் ரோஷ்ணியின் ஸ்ரீரங்கம் இல்லத்திற்கு நான் Flying Visit அடிக்க நேர்ந்துள்ளது, வலைச்சர தலைமை ஆசிரியர் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுடன். அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html

    இன்றைய குழந்தை ரோஷ்ணி, நாளைய ’மிகச்சிறந்த ஓவியர் ரோஷ்ணி’யாக மாறி மேலும் புகழ்பெற்று விளங்க என் மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    இங்கு சுட்டிக் காட்டியுள்ள படங்களுக்காக குழந்தை ரோஷ்ணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  9. நல்ல திறமை உள்ள குழந்தை! ஓவியங்களையும் பார்த்துவிட்டு அவள் வயதையும் பார்த்தால் நம்பவே முடியாது. திறமை மேன்மேலும் வளர்ந்து பிரகாசிக்க வாழ்த்துகள். இங்கே இவற்றை வெளியிட்டுப் பரவசமடைந்ததோடு அனைவரையும் பரவசம் அடைய வைத்த தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கீதா மேடம் சொல்வதுபோல ரோஷ்ணியின் வயதைப் பார்த்து விட்டு ஓவியங்களைப் பார்த்தால் நம்பத்தான் முடியாது. அபார திறமை.

    வாழ்த்துகள் ரோஷ்ணி.

    பதிலளிநீக்கு
  11. ரோஷிணிக்குட்டிக்கு இன்றைய சாட்டர்டே ஜாலி கார்னர்...
    அருமையான படங்கள்...
    வாழ்த்துக்கள் குட்டிம்மா...
    வெங்கட் அண்ணா குட்டிக்கு சுற்றிப் போடச் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  12. வயதுக்கு மீறிய திறமை.ஓவியங்களின் கண்களில் ஒளிசிந்துகிறது.வாழ்த்துக்கள்.வளர்க.வெல்க.

    பதிலளிநீக்கு
  13. நன்றி துளசிதரன் சகோ

    நன்றி வெங்கட் நாகராஜ் ஜி எல்லா கமெண்டுகளோடும் முதன் முறையாக என் அம்மா உங்கள் மகளை வாழ்த்தியிருக்காங்க.( சும்மாவின் அம்மா என்ற பெயரில் வலைத்தளம் எழுதிவரும் என் அம்மா முத்து சபாரெத்தினம் முதன் முறையாக கமெண்ட் எப்படிப் போடுவது என்று கற்றுக்கொண்டு உங்கள் மகளை வாழ்த்தி இருக்காங்க. !! ) அவங்க ஆசீர்வாதம் நிறைவேறும். :)

    பதிலளிநீக்கு
  14. நன்றி ராஜி

    நன்றி ஏஞ்சல் உண்மைதான் !

    நன்றி இளமதி கவிதை அருமை

    நன்றி ப்ரியசகி அம்மு

    நன்றி கோமதி மேம்

    கருத்துக்கும் ஆசிக்கும் நன்றி கோபால் சார்

    நன்றி கீதா மேம்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி குமார் சகோ

    முதன் முறையாகக் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் ஆசீர்வாதத்துக்கும் நன்றி ஆத்தா :)

    பதிலளிநீக்கு
  15. எனது மகளின் ஓவியங்களை ரசித்து கருத்துரை அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உங்களுக்குப் பிடித்த கணேஷாவின் மேலும் சில ஓவியங்கள் - என் மகள் வரைந்தவை இன்று எனது பக்கத்தில்! உங்கள் தகவலுக்காக.

    http://venkatnagaraj.blogspot.com/2014/10/saturday-jolly-corner.html

    பதிலளிநீக்கு
  17. ரோஷினியின் ஓவியங்களை அவரின் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது தாங்களும் அவற்றை பகிர்ந்திருப்பது மிகவும் மகீசியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. பலவண்ணத்(!) தலைமுடியுடன் எல்லா படங்களும் அருமையா இருக்கு. ரோஷினியின் விருப்ப‌ம் நிறைவேற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. இதோ பார்க்கிறேன் வெங்கட் சகோ :)

    நன்றி சொக்கன் சுப்ரமணியன்

    நன்றி சித்ரா சுந்தர்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...