எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 மே, 2013

கோடைகாலமும் நீர்க்கடுப்பும். :-

கோடைகாலமும் நீர்க்கடுப்பும். :-

கோடைகாலம் வந்தாலே நிறைய பிரச்சனைகளும் படையெடுக்க ஆரம்பிச்சுடும். அதில் நீர்க்கடுப்பு முக்கியமானது. இது கோடை காலத்தில் மட்டுமல்ல.. உடம்பில் நீர்ச்சத்து குறையும்போதெல்லாம் ஏற்படும். இதற்கு முதல் படி தண்ணீர் நிறைய குடிக்கணும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலுடன் குறைவாகப் போகும். நினைத்து நினைத்துக் கடுத்து சிறுநீர் வரும்.  இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூசில் ஒரு சிட்டிகை, உப்பு, ஒரு சிட்டிகை ஜீனி கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்தால் குணம் கிடைக்கும். எலுமிச்சை சாறு ஒத்துக்கொள்ளாமல் சளிபிடிக்கும் என்றால் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.


சின்னக் குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது என்பதால் எப்போதும் உபயோகிக்கும் பஞ்சு நாப்கின்களை விட இந்த கோடை சீசனில் காற்றோட்டமுள்ள காட்டன் நாப்கின்களை/துண்டுகளை உபயோகிக்கலாம். அப்படி சிறுநீர் எரிச்சல் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தடவி விடலாம். பொதுவா இந்தக் கோடையில் ஜிகு ஜிகு என்ற உடைகளை அணிவிக்காமல் எளிய காட்டன் உடைகள் நல்லது.

நம்ம ஊர்ப்பக்கம் எல்லாம் சர்பத் கடைகள் இந்த சீசனில் நல்லா கல்லா கட்டும். இளநிர், ஜூஸ், நீர் மோர், சர்பத் ( இது எலுமிச்சையுடன் நன்னாரி, வெட்டிவேர் போட்டு காய்ச்சி செய்த சிரப்பை ஊற்றி ஐஸ்கட்டிகள் போட்டுக் கலக்கிக் கொடுப்பாங்க. சில இடங்களில் இதில் பாதாம் பிசினும் போட்டுக் கொடுப்பாங்க.) இது எல்லாம் சாப்பிட்டா குணம் கிடைக்கும்.

காரம் அதிகம் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. ஃபுட்கலர்ஸ் போட்டு சிவப்பா வறுத்த கோழி, காலிஃப்ளவர், போன்றவை நல்லதல்ல. பச்சைமிளகாயும் மிளகும் கூட நீர்க்கடுப்பை அதிகரிக்கும். சமையலில் போடப்படும் பச்சை மிளகாயை உண்ணாமல் தூரப் போடுவது நலம். வினிகர் கூட குடல் தொண்டை எரிச்சலையும் சிறுநீர்க்கடுப்பையும் உண்டாக்கும்.

இடது கால் கட்டை விரல் நகத்தில் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பைத் தடவினால் குணம் கிடைக்கும். இது பாட்டி வைத்தியம். இதற்காக அலோபதி மாத்திரைகள் இருக்கின்றன. அவற்றை அடிக்கடி உபயோகித்தால் சிறுநீரகப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

பார்லி வேகவைத்த தண்ணீரையும் குடிக்கலாம். கடைகளில் விற்கும் பாக்கெட் மோரில் பச்சை மிளகாய் அரைத்துச் சேர்ப்பதால் அதைக் குடித்தால் இன்னும் கூட எரிச்சல் உண்டாகலாம். மிளகாய் சேர்க்காத மோர், தயிர் என்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

காரமான கெட்டிக் குழம்பு, மிளகுக் குளம்பு, வர மிளகாய் சட்னி, போன்றவற்றைத் தவிர்த்து தயிர்சாதம் போன்றவை சாப்பிட்டாலும் குணம் கிடைக்கும். கீரை, நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரையை சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்து அருந்தினால் குணம் கிடைக்கும்.

சிலருக்கு வெய்யிலில் அதிக நேரம் அலைந்தாலும் சரியாக நீர் அருந்தாததாலும் கூட இது ஏற்படும். அதே போல ஹெவி ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போதெல்லாம் பிப்ளெக்ஸ் ஃபோர்ட்டி அல்லது ரிபோ ஃப்ளேவின் எடுத்துக்கணும். இல்லாட்டி வயிறு புண்ணாகி சிறுநீரிலும் எரிச்சல் பரவும்.

மாதுளை பழச்சாறு அருந்தினாலும் குணம் கிடைக்கும். ரோஸ்மில்க், பழச்சாறு அருந்தலாம். வீட்டிலேயே புதிய பழங்களில் சாலட் செய்து சாப்பிடலாம். வெள்ளரிக்காய் ஜூசும் நல்லது. அதை அப்படியேவும் சாப்பிடலாம்.

முதல் நாள் வடித்த சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் சிறிது உப்பு சீரகம் போட்டு அருந்தலாம். சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தாலும் குணம் கிடைக்கும்.

சிலருக்கு சோப்பு, ஷாம்பூ அதிகம் உபயோகித்தால் கூட இது ஏற்படும். இதற்குப் பதிலாக கடலை மாவு, பயத்தமாவு உபயோகப்படுத்தலாம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதாலும் வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுப்பதாலும் இது சரியாகும்.

வெய்யிலில் எங்கேனும் செல்ல வேண்டி வந்தால் குடை கொண்டு செல்லலாம். உடம்பில் தண்ணீர்ச்சத்து அதிகமிருப்பவர்கள் வெய்யிலில் சென்றால் ( தண்ணீர் உஷ்ணமானால் தகிப்பது போல) உடம்பு தகிக்கும் தலையிலும் தண்ணீர் கோர்த்திருந்தால் தலை வலி உண்டாகும். எனவே சன்க்ளாசஸ்/கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு செல்வது நல்லது. தொப்பியும் உபயோகிக்கலாம்.

மிக முக்கியமாக கம்ப்யூட்டரில் மணிக்கணக்காக இருப்பவர்கள் விரல்கள் அந்த உஷ்ணத்திலேயே இருப்பதால் விரல் மூலம் சூடு பரவி உடலுக்குச் செல்லும். தண்ணீர் அதிகம் அருந்தாமல் மானிட்டரையே பார்த்துக் கொண்டிருப்பதால் சிறுநீர் எரிச்சல் உண்டாகும். எனவே தினம் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். கம்ப்யூட்டரின் உபயோகிப்பதைக் குறைப்பதும் அவசியம்.

மிக முக்கியமா பப்ளிக் டாய்லெட்ஸ் உபயோகிக்கும்போது எச்சரிக்கையா இருக்கணும். அதிக தூரம் இரவு நேரப் பயணம் என்றால் இந்த பப்ளிக் டாய்லெட்டுக்களின் சுகாதாரமின்மையை நினைத்து தண்ணீர் அருந்தாமல் சென்று விடுவோம். எனவே உடல் காலையில் சருகைப் போல உலர்ந்து விடும். அதுவும் சிறுநீர் எரிச்சலுக்கு ஒரு காரணம்.

பெட்ரோல் பங்குகளில் இருக்கும் பப்ளிக் டாய்லெட்டுகளின் நிலைமையே படு மோசம் என்றால் ஹைவேஸ் மோட்டல், பஸ்ஸ்டாண்டுகளில் இருக்கும் டாய்லெட்டுக்களின் நிலைமை மோசமோ மோசம். போய் வந்தாலே வேறு ஏதும் வந்து விடுமோ என்ற ஐயம் வந்து விடும்.

ரயிலில் டாய்லெட் போக வசதி இருந்தாலும் அதிலும் சுகாதாரக் கேடு அதிகம் இருக்கிறது. நிச்சயம் அமர்ந்து செல்லும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைத் தவிர்ப்பது நலம். அப்படிப் போக வேண்டி வந்தால் சிறிது நீரை முதலில் ஊற்றி சுத்தமாக்கி விட்டுப் பின் செல்வது நலம்.

பொதுவாக பெண்களின் ப்ரீ மெனோபாஸ்/மெனோபாஸ்/போஸ்ட் மெனோபாஸ் டைம்களிலும் இந்தப் பிரச்சனை அதிகமாகலாம். அதற்கு ஏற்றாற் போல தண்ணீர்ச் சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம்.

பொதுவாக எல்லாப் பருவத்தினரும் தங்கள் உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்தி வந்தாலே நீர்க்கடுப்பு ஏற்படாது.

டிஸ்கி:- வியர்வையை விரட்டுங்க. கோடையைக் கொண்டாடுங்க. என்ற இந்த இடுகையையும் பாருங்க.. 


8 கருத்துகள்:

  1. எல்லாமே அனுபவங்கள் மூலம் அறிந்தவையே எனினும் தொகுத்திருக்கும் முறை அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சொன்னது அத்தனையும் உண்மை தேனே!

    கடைகளில் விற்கும் சர்பத் கூட குடிக்க பயம்தான் என்ன தண்ணீர் பயன்படுத்தறாங்களோன்னு!

    என்னுடைய சாய்ஸ் இளநீர்! கொஞ்சம் ஸ்ட்ராக்களைக் கைப் பையில் வச்சுக்கிட்டால்; இன்னும் விசேஷம்.

    இந்தியப் பயணங்களில் ரெஸ்ட்ரூம் சரி இல்லாமல் பட்ட அவதிகள் கொஞ்சமா நஞ்சமா?

    போதுண்டா சாமி.............

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீதா சாம்பசிவம். முதல் முறையாக என் வலைத்தளத்தில் கருத்திட்டமைக்கு நன்றி.

    நன்றி மணவாளன்

    நன்றி தனபாலன்

    நன்றி துளசி

    நன்றி ஜெயதேவ் தாஸ்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...