எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 நவம்பர், 2010

அன்ன பட்சி..

பேசத்துவங்குமுன்னே
முடிவுக்கு வந்து விடுகின்றன..
நம் உரையாடல்கள்...

கடலுக்குள் மூழ்கிய கப்பல்களாய்
ஒரு கனவுக்குள் ஆழ்கிறது
உன் கண்கள்..

அவ்வப்போது கலங்கரை
விளக்காய் என் கண்
தேடியலைந்து..


புன்னகைக் கையெழுத்தோடு
பூங்கொத்தாய் என்னைத்தர..
பூக்கும் இதழ் கிள்ளும்
பிள்ளை விளையாட்டில் நீ...

மொக்காய் இருந்த
வார்த்தைப் பூக்கள்
நாம் பேசியபின்
போதவிழத் தொடங்கி..
பூக்காட்டுக்குள் நாம்..

இழுத்துச் செருகின
திரைச்சீலையாய்..
இறுகிக் கிடந்த இமைகள்
உன் வருகைக் காற்றில் படபடத்து..

வெட்கத்தில் தாழத் தொங்குகின்றன
திரைகளைப் போல இமைகள்..
திரும்ப அடங்கி..

என்னன்னவோ எழுதினேன்
உன்னைச் சந்திக்குமுன்..
பின் உன்னை மட்டும் எழுதினேன்..
உன் அல்லதையும் நல்லதாக்கி
அருந்தும் அன்னபட்சி நான்..

டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 21., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

டிஸ்கி:- எங்கள் அன்பிற்குரிய சகுந்தலா மாமிக்கு இன்று 60 வது பிறந்தநாள்..
யுனைடட் ஸ்டேட்ஸில் இருக்கும் அவர்களின் ஆசீர்வாதம் வேண்டி வணங்குகிறேன்.. வாழ்க வளமுடன் ., நலமுடன்..:))

21 கருத்துகள்:

  1. அன்ன பட்சி அழகு.

    உங்கள் மாமிக்கு என் வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  2. அன்ன்பட்சியைப்போல் அன்னத்தைப்பற்றிய உங்கள் கவிக்கோர்வையும் அருமை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. என்னன்னவோ எழுதினேன்
    உன்னைச் சந்திக்குமுன்..
    பின் உன்னை மட்டும் எழுதினேன்..

    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை...
    அக்கா திண்ணையை குத்தகை எடுத்தாச்சா...
    மாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. / பேசத்துவங்குமுன்னே
    முடிவுக்கு வந்து விடுகின்றன..
    நம் உரையாடல்கள்... /

    சூப்பர்....

    பதிலளிநீக்கு
  6. //உன் அல்லதையும் நல்லதாக்கி
    அருந்தும் அன்னபட்சி நான்..//

    எவ்ளோ சிம்பிளா சொல்லிட்டீங்க அக்கா!
    ஸோ ஸ்வீட் :)

    பதிலளிநீக்கு
  7. கவிதை நல்லாயிருக்குங்க

    ||யுனைடட் ஸ்டேட்ஸில்||
    இதை விட ’அமெரிக்காவில்’ சின்ன வார்த்தைதானே!!! :)

    பதிலளிநீக்கு
  8. எங்கள் அன்பிற்குரிய சகுந்தலா மாமிக்கு இன்று 60 வது பிறந்தநாள்..


    ..... Do convey our birthday wishes too! :-)

    பதிலளிநீக்கு
  9. அன்னபட்சி ரொம்ப நல்லாருக்கு தேனக்கா..

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. காதல் கவிதை மாதிரியும் நட்பின் கவிதை மாதிரியும் நல்லாயிருக்கு தேனக்கா !

    பதிலளிநீக்கு
  11. இந்தக் கவிதை நவம்பர் 21., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..//

    Super..

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. கவிதையின் தலைப்பை பார்த்தவுடன் நீங்க "பஜ்ஜி"க்கு பதில் "பட்சி" போட்டுட்டிங்கனு நெனச்சேன்

    பதிலளிநீக்கு
  13. /வெட்கத்தில் தாழத் தொங்குகின்றன
    திரைகளைப் போல இமைகள்..
    திரும்ப அடங்கி../

    Comparison of the screen and the eye lashes is nice.

    பதிலளிநீக்கு
  14. //உன் அல்லதையும் நல்லதாக்கி
    அருந்தும் அன்னபட்சி நான்//

    அன்பு....அருமை.

    பதிலளிநீக்கு
  15. நன்றி., கார்த்திக்., ராமலெக்ஷ்மி., ஜெயந்த்., சசி., ஸாதிகா., யாதவன்., குமார்., வினோ., பிரபு., கதிர்., சித்ரா., ஸ்டார்ஜன்., ஹேமா., டி வி ஆர்., வரோ., தொப்பி., வாசன்., சக்தி., ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...