எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 நவம்பர், 2010

திண்ணைகள் வைத்த வீடு...

வலப்புறமும் இடப்புறமும்
திண்ணைகள் வைத்து
சிமெண்ட்டால் இழைத்த வீடு..

முதுகு சாய மேடும்
விளக்கு வைக்க மாடமும்
வாசலில் த்வாரபாலகராய்..

தி ஜ ர., லா ச ரா கதைகள்.,
மன்னார்குடியின் ஒற்றைத்தெரு.,
முதல் தெரு., இரண்டாம்தெரு.,
மூன்றாம் தெரு எல்லாவற்றிலும்


வெற்றிலைக் காவியும்.,
பன்னீர்ப் புகையிலையும்.,
கும்மோணம் டிகிரி காப்பியும்.,

சீட்டுக் கட்டுக்களும்.,
வார்த்தை வண்டல்களும்.,
உதப்பல்களும் நிறைந்து.,

வயதான பெற்றோராய்
வெளிறிப்போய் சில.,

பால்கிண்ணம் பொலிந்து
கதை கேட்கும் சிறாராய் சில.,

யௌவனக் கவர்ச்சியில்
வண்ணமடித்து சில.,

வெறுமையான மடியாய்
வெள்ளையடித்து சில..

திண்ணைகள் பால்கனிகளாய்.,
ஆளோடிகள் வராண்டாக்களாய்..,
காமிரா உள் கம்ப்யூட்டர் ரூமாய்..
கொல்லைகள் காணாமல் போய்..

காற்றை.,வெய்யிலை, இருளை.,
கவலையில்லாமல் கிடந்து
கதைத்துக் களிக்கும் இடமாய்..
கம்பி போட்ட திண்ணை..

விடியலில் பள்ளியெழுச்சியும்.,
பன்னீராய் தெளித்துக் கோலமும்.,
மாலையில் ருத்ரமும் சமகமும்.,
இரவில் பவளமல்லி வாசமும் கலந்து.,

திண்ணைகள் தேடிச் சென்றேன்...
இளைப்பாற எங்கும் இல்லை..
கிளையில்லா பறவையாய்..
பறந்து பறந்து பற்றினேன் திண்ணையை..

ஒய்வெடுக்க அல்ல.,
ஓய்ந்து அமர அல்ல.,
உழைப்பை .. என் உருவாக்கத்தை
உலகெல்லாம் அறியச் செய்ய...

திண்ணையில் கவிகள்.,
கதைகள்., கட்டுரைகள்.,
இயற்றமிழ் இயற்றும்
அனைவரையும் எடுத்தியம்பும்

வாழ்க திண்ணை.. வளர்க திண்ணை..
அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும்
எங்கள் அன்பு சால் திண்ணைக்கு
தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்..!!!

டிஸ்கி 1 :- இந்த என்னுடைய தீபாவளி வாழ்த்துக் கவிதை 1.11.2010 திண்ணையில் வெளிவந்துள்ளது ..வலைத்தளவாசிகள் அனைவருக்கும் என் அன்பு தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்..!!!

டிஸ்கி 2 :- லேடீஸ் ஸ்பெஷல் நவம்பர் மாத இதழில்., தனி மரங்களின் தீபாவளி என்ற கட்டுரை -- சித்ரா சாலமன்., புறப்படு பெண்ணே புவியசைக்க.. -- இந்த மாத ப்லாகர் அறிமுகம் .. மனோ சாமிநாதன்., மாறிய மனம்., - ருக்மணி அம்மாவின் திருக்குறள் கதை.. சுயம்புவார் உருவான பெண்.. என்ற தலைப்பில் மோகனா சோமசுந்தரம் அவர்கள் பற்றிய என்னுடைய கட்டுரை..( போராடி ஜெயித்த கதைகள்)., சமூக நலத்துறையின் ஜீவன் என்ற தலைப்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பற்றிய என்னுடைய கட்டுரை வெளி வந்திருக்கு..

டிஸ்கி 3 :- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றலின் ( கலாஸ்ரீராம் ., ஐதராபாத்) கதை -- திரும்பி வந்த அம்பு ., திரும்பி நின்ற நாயகன் -- ருக்மணி சேஷசாயி., கார்த்திகை (கவிதை) - கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., கருணையின் வடிவே - மரா., பொட்டலம் (சிறுகதை) -- ராமலெக்ஷ்மி., மாதங்களில் காதலி -- தினேஷ்குமார் மோகன்தாஸ்.,
கோபி ராமமூர்த்தியின் சிறுகதை (லண்டன் ஆர்.கோபி)- வெளிவந்துள்ளது

20 கருத்துகள்:

  1. திண்ணையில் கண்ட திண்ணை கவிதைக்கு இங்கே என் வாழ்த்துக்கள்:)!

    தீபாவளி மலரில் சிறுகதை வெளியான விவரம் தந்தமைக்கு நன்றிகள். படைப்புகள் வெளியான அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. //யௌவனக் கவர்ச்சியில்
    வண்ணமடித்து சில.,//

    வித்யாசமான வார்த்தை கோர்ப்பு
    அருமை தேனம்மா!

    ராமலக்ஷ்மி மேடம் மாதங்களில் காதலி தலைப்பே கவிதையா இருக்கு விரைவில் வலையில் வெளியிடுங்கள்!

    பதிலளிநீக்கு
  3. உன் தேனான கவிதைக்கும் தீபாவளிக்குமாய் என் வாழ்த்துக்கள் தேனம்மை.
    வலை வானில் மட்டுமன்றி அச்சு ஊடகத்திலும் நீ பிரகாசிப்பது கண்டு ஒரு தாயாய்ப் பேருவகை அடைகிறேன்.
    இன்னும் பல வெற்றிச் சாதனைகள் உன்னை நாடி வரட்டும்.வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. என் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. முதன் முறையாகத் “திண்ணையில்” என்னையும் என் கவிதையினை (”குடும்பம்” என்ற தலைப்பில் எழுதி அனுப்பியது)பதிவு செய்து மதிப்பளித்தமை பின்னர் நண்பர்கள் மூலம் அறிந்தேன். தொடர்ந்து அனுப்பி வருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மன்னார்குடி ஒற்றைத்தெரு - பழைய ஞாபகங்கள் :)

    பதிலளிநீக்கு
  7. உதப்பல்கள் அல்லது குதப்பல்கள்

    பதிலளிநீக்கு
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. @ வசந்த்,

    நல்லாப் பாருங்க:))! என் கதையின் தலைப்பு ‘பொட்டலம்’!

    ‘அதானே பார்த்தேன் நீங்க எங்கே இப்படிப் புதுமையா எல்லாம் தலைப்பு வைக்கப் போறீங்க’ன்னு சொல்றது கேட்கிறது எனக்கு:)!

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  11. தீபாவளி வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  12. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஸ்பெஷலில் வந்த அனைவருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்களும், தீபாவளி வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  14. திண்ணை வெகு அருமை!!
    பிரசுரமான அனவருக்கும் பாராட்டுக்கள்.


    ஆர்.ஆர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள தேனம்மை!

    கவிதைக்கும் தீபாவளிக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!
    எனது கருத்துக்கள் நவம்பர் லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்திருப்பதை அறிந்தேன். உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி!!

    பதிலளிநீக்கு
  16. ஒரு திண்ணையைக் கட்டுமானமே செய்துமுடித்திருக்கிறீர்கள்...
    திண்ணைகள் செங்கல் சிமெண்டினால் ஆனவையல்ல... வார்த்தைகளால் ஆனதுதான்..
    "வீட்டில் திண்ணைகள் வைத்துக்கட்டுவோம் அம்மா..
    வழிப்போக்கன் வந்துதான் தங்கிசெல்லுவான் சும்மா.." என்று சமீபத்தில் பாடல்வரியொன்றில் கேட்ட போது திண்ணைகளை இழந்துவிட்டோமே.... என்று சிறிதுநேர‌ம் ல‌யித்து இருந்தேன்... என்னுடைய‌ வீச்சு அவ்வ‌ள‌வுதான்... அந்த‌ ல‌யிப்பில் திளைத்த‌ உண‌ர்வுக‌ளை இங்கு உங்க‌ள் வார்த்தைக‌ளில் காண‌முடிந்த‌து அக்கா.... வாழ்த்துக்க‌ளும் ந‌ன்றிக‌ளும் :)

    பதிலளிநீக்கு
  17. நன்றி ராம லெக்ஷ்மி., வசந்த்., சுசீலாம்மா., சிநேகிதி., கலாம்., புவனா., ராம்ஜி., கலாநேசன்., வெறும்பய., ஜோதிஜி., ஜெய்., முனியப்பன் சார்., கார்த்திக்., அமைதிச்சாரல்., ஆர் ஆர் ஆர் ., மனோ., பிரபு ( பகிர்வு அருமை)

    பதிலளிநீக்கு
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...