எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தீக்குளிப்பும் குண்டு வெடிப்பும்

கிராமம் சார்ந்த
காங்க்ரீட் காடு எனது .
மௌனமாய் நகரும் பல்லி .,
ஓடி ஒளியும் கரப்பான்.,
தத்தித் தாவும் பாச்சை.,
புத்தகங்களுக்குள் சில்வர் ஃபிஷ்.,
ஓரத்து ஒட்டடைக்குடியிருப்பில் சிலந்தி.,
பருப்புகளில் வண்டு .,
காய்களில் பச்சைப்புழு.,

வியாழன், 7 ஜனவரி, 2010

வாடகை புத்தகம்

பழைய நாட்குறிப்புகளைத்
திறக்கும் போதெல்லாம்
ஒரு பறவையின் இறக்கையாயும்
குட்டி போடும் மயில் தோகையாயும்
பாடம் செய்யப்பட்ட அரச இலையாயும்
நழுவி விழுகிறது உன் நினைவு...
நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்
அப்பிக்கிடக்கும் உன் நினைவுகள் ...

புதன், 6 ஜனவரி, 2010

புத்தகங்கள்

புங்கைப் பூக்கள் மிதக்கும்
குளத்தின் கல்லில்
கால் நனைத்து அமர்ந்து...
மீன்களைப்போல் எண்ணங்கள்
என்னைக் கடித்துக்கொண்டு...
தொலைந்து போகிறேன் ...
ஒவ்வொரு சின்ன அலையிலும் ...
அழித்து அழித்து எழுதுகிறது ..
ஒவ்வொரு பெயராய்...

திங்கள், 4 ஜனவரி, 2010

குருக்ஷேத்திரம்

எதிர்பாராது
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...

சனி, 2 ஜனவரி, 2010

இதுவும் கடந்து போகும்

அறியாத அருணாவுக்கு
முப்பத்தாறு ஆண்டுகள்
நினைவற்று..
உலகெங்கும் உழைக்கும்
நண்பருக்கு அயர்ந்து அமர
ஒரு வீடும் குடும்பமும்...
கார்கிலிலும் வாகாவிலும்
கடுங்குளிரில் நமக்காய்
துப்பாக்கிக் கனவான்கள்..
குரலும் பிம்பமும் கொண்டு
சேர்க்கும் வீடு ..
வான்வழிப் பயணமோ ..
வயர் வழிப் பயணமோ..
எத்தனை புத்தாண்டு..
பொங்கல் .,தீபாவளி .,
ரம்ஜான் .,கிறிஸ்துமஸ் .,
யாருமில்லாமல்.. ..
குரல் வழிக்குடித்தனத்தில்
கழிந்து போனது
புத்தாண்டுகளும் புன்னகையும்...
Related Posts Plugin for WordPress, Blogger...