பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக பார்க் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு திருமாறன் ஜெயராமன் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தேன். அந்நிகழ்வு முடிந்த சில நாட்களிலேயே காம்கேர் புவனேஸ்வரி அவர்களையும் அக்கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக மற்றோர் நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் அந்நிகழ்ச்சியும் மிக்க பயனுள்ள்தாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார் முதல்வர் திருமாறன். அதற்கு முன்பே காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எனக்கு முகநூல் தோழி என்றாலும் அதன் பின் தான் அவருடைய பணிகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.
பொதுநலத் தொண்டும் சமூகத் தொண்டும் மற்றைய நேர்மறைக் கருத்துக்கள் கண்டும் வியந்ததுண்டு. தன்னம்பிக்கைப் பேரரசியான அவரிடம் என் ப்லாகுக்காக நேற்று எழுதித்தரச் சொல்லிக் கேட்டிருந்தேன். உடனே அனுப்பி விட்டார். அவர் தன் தாய் தந்தை பெயரில் விருதுகள் வழங்குவது குறித்து அன்பும் பாராட்டும். நீங்களும் படித்துப் பாருங்கள். அவரது சுயவிவரத்தைச் சுருக்கும் எண்ணமில்லாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறேன். அத்தனயும் முத்து.
////காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
Since 1992
ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர்.