எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நித்யகல்யாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்யகல்யாணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜனவரி, 2023

நித்யகல்யாணி – 2.

 நித்யகல்யாணி – 2. 

“கல்யாணி கல்யாணி. வெய்யில் வந்திருச்சு பாரு “ என்று எழுப்பினார் பாட்டி பகவதி. “என்ன பாட்டி இப்பவே எழுப்புறீங்க.. இன்னும் கொஞ்சம் தூங்குறேன். அதான் ஸ்கூல் இல்லீல்ல. தாத்தா எங்கே ? “ என்றபடி புரண்டு படுத்தாள் கல்யாணி.

”தாத்தா மாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கப் போயிருக்காரு. நீ எந்திருச்சுப் பல் தேய்ச்சுட்டு வா. “ என்றபடி பாட்டி உள் சென்றார். கல்யாணி எழுந்து பல் தேய்த்துவிட்டு பாட்டி கொடுத்த நாட்டுச் சர்க்கரை போட்ட பாலை அருந்திக் கொண்டிருக்கும்போது தாத்தா நித்யதேவன் வீட்டிற்குள் நுழைந்தார்.

“தாத்தா எங்கே போனீங்க. தர்ப்பணம்னா என்ன ? “ என்றாள் கல்யாணி. தாத்தா பேத்தியின் கைபிடித்துப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார். “ இறந்துபோன நம்ம முன்னோர்களுக்குக் கொடுப்பதுதான் தர்ப்பணம்.”

“அப்பிடின்னா என்ன செய்வாங்க தாத்தா “.

”இறந்து போன நம்ம முன்னோர்களுக்கு மாதம் ஒரு முறை அவங்க இறந்த திதியில் கொடுப்பது திவசம். வருடமொருமுறை கொடுப்பது தர்ப்பணம். எள்ளும் அரிசிமாவும் கலந்து தர்ப்பைப் புல்லின் மேல் வைத்து நம்முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் கரைத்து விடுவதுதான் தர்ப்பணம்.”

“நாம அதை ஏன் செய்யிறோம் தாத்தா”.

சனி, 31 டிசம்பர், 2022

நித்யகல்யாணி

நித்யகல்யாணி

“தாத்தா..தாத்தா எங்கே இருக்கீங்க “என்றபடி வீட்டுக்குள் ஓடி வந்தாள் கல்யாணி. ஸ்ரீவாரி அபார்ட்மெண்டில் இருக்கும் குட்டி சுட்டிகள் எல்லாம் இன்னும் வெளியில் ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்தன.

“ என்னடா கல்யாணி.. இங்கே பால்கனியில் இருக்கேன். இங்கவாடா குட்டி “ என்றார் நித்யானந்தன். ஓடிப்போய் ஈஸிசேரில் சாய்ந்திருந்த தாத்தாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கல்யாணி. வங்கி ஒன்றில் தணிக்கையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த நித்யானந்தனுக்கு வயது எழுபது.

”டிவியில் சுதந்திர தின அணிவகுப்பு வருது தாத்தா பார்க்கலாம் வாங்க.”. டிவியில் அணிவகுப்பு சோஷியல் டிஸ்டன்ஸிங் படி நடந்து கொண்டிருந்தது. ”லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் என மார்ச் ஃபாஸ்ட் பழகியபடி தாத்தாவின் கைபிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

மாஸ்க் அணிந்த வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்த தாத்தா “வருஷாவருஷம் உங்க ஸ்கூல் மார்ச் ஃபாஸ்ட்ல, கலை நிகழ்ச்சிகள்ல எல்லாம் கலந்துப்பே. இந்த வருஷம் கொரோனா வந்து கெடுத்துருச்சு “ என்றார் பேத்தியின் தலையை வாஞ்சையாகத் தடவியபடி.

Related Posts Plugin for WordPress, Blogger...