துளசி கோபால் . கிட்டத்தட்ட 2009 இல் இருந்து என் தோழி. வேறென்ன புதுசா சொல்ல. :)
இவள் புதியவள், சூரியக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல் ஆகியவற்றில் எழுதிக்கிட்டு இருந்தோம். துளசிக்கும் கோபாலுக்கும் நடந்த சஷ்டியப்த பூர்த்திக்குத்தான் போக முடியலைன்னா அவங்க பொண்ணு கல்யாணத்துக்கும் போக முடில. ஏன்னா அது கிவில இல்ல நடந்துச்சு :)
சரி அந்த சுவாரசியமான அனுபவங்களை நாம படிச்சாவது அனுபவிப்போம்னு எழுதித்தரச் சொன்னேன். உடனே அவங்க வாஷிங்க்டனில் திருமணம் மாதிரி எழுதி அனுப்பிட்டாங்க. அவ்ளோ பெரிசு மட்டுமில்ல . செம ஹியூமரும் கூட. நான் சிரிச்சு ரசிச்சத. நீங்களும் ரசிங்க :)
/////அன்புள்ள தேனே,

(துளசி பொண்ணு
கல்யாணம்னா நம்ம பொண்ணு கல்யாணம் மாதிரிதானே. அதான் ஒரு நாள் பூரா கொண்டாடலாம்னு
மிட்நைட்ல போஸ்ட் போட்டுருக்கேன். வாங்க அவங்க கூடவே போய் கொண்டாடுவோம். )
சரி அந்த சுவாரசியமான அனுபவங்களை நாம படிச்சாவது அனுபவிப்போம்னு எழுதித்தரச் சொன்னேன். உடனே அவங்க வாஷிங்க்டனில் திருமணம் மாதிரி எழுதி அனுப்பிட்டாங்க. அவ்ளோ பெரிசு மட்டுமில்ல . செம ஹியூமரும் கூட. நான் சிரிச்சு ரசிச்சத. நீங்களும் ரசிங்க :)
/////அன்புள்ள தேனே,
நலமா?
இப்பதான் எழுத உக்கார்ந்தேன். துளசியின் வழக்கபடி மஹாபாரதமாப் போகுது.
இதுவரை எழுதியது இப்போ இங்கே அனுப்பறேன். பார்த்துட்டுச் சொல்லுங்க. ஓக்கேன்னா எழுதி முடிச்சுடறேன்!!!!!!!!
============================== ==================
கல்யாணம்... ஹஹஹ கல்யாணம்
மகளும் நண்பனும் கல்யாணம் கட்டிக்க முடிவு செஞ்சுட்டாங்க. என்ன மகளே.... உன் கல்யாண நிச்சயம் ஆனதைக் கொண்டாட வேணாமா?
அதெல்லாம் எதுக்கு? நாங்க கல்யாணத்துக்குப் பணம் சேர்க்கவேணாமா?
ஓஹ்....
அப்படியா? எங்க இந்திய வழக்கப்படி கல்யாண நிச்சயதார்த்தமே ஒரு சின்னச்
சடங்கா செய்றதுதான் வழக்கம். இங்கெதான் அப்படி ஒன்னுமில்லையே :-) ஒன்னு
வேணாச் செய்யலாம்.... உங்க கல்யாணம் கட்டிக்கப்போகும் முடிவை நம்ம
நண்பர்களுக்கு அறிவிச்சு ஒரு சின்ன பார்ட்டி வச்சுக்கலாமா?
மகளும் வரப்போற மாப்பிள்ளையுமாக் கொஞ்சம் யோசனையில் இருந்தாங்க. அப்பா அம்மா தரும் பார்ட்டின்னு வச்சுக்குங்களேன்!
சரின்னு
முடிவாச்சு. ஏற்பாடுகளையெல்லாம் மகளையே செய்யச் சொல்லியாச்சு. பொண்ணு
வீட்டில் இருந்து அஞ்சு பேர், மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு பத்து பேர்,
பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்குமான நண்பர்கள் கூட்டம் இப்படி விழா நடந்தது
மே மாதம் 2016 ஆம் ஆண்டு.
மகளும் வரப்போகும் மருமகனுமா கேக் வெட்டி ஒரு கொண்டாட்டம். என்ன கேக்காம்? வெல்வெட் கேக்! ஆஹா.... அப்டிப்போடு!