எவ்வளவுதான்
கற்றறிந்திருந்தாலும் சமயோஜிதமான நடவடிக்கையால் நாம் நமக்கு வரும் இடர்களைக் களைய முடியும்.
அப்படித்தான் சாவித்ரி என்னும் பெண் தனக்கு வந்த கஷ்டத்தைத் தன் புத்திசாலித்தனத்தால்
ஜெயித்தாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.
மத்ராபுரி என்னும் நாட்டை அஸ்வபதி என்னும் மன்னர் ஆண்டு வந்தார்.
நெடுநாளாகக் குழந்தைப்பேறில்லாமல் இருந்த அவர் பல யாகங்கள் பூஜைகள் செய்ததன் பலனாக
ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குச் சாவித்ரி என்று பெயரிட்டு சீரோடும் சிறப்போடும்
வளர்த்து வந்தார்.
பெண்குழந்தை என்று எண்ணாமல் நாட்டின் இளவரசியாக அவளுக்கு சகல
உரிமைகளையும் கொடுத்திருந்தார். எனவே அவள் தோழிகளுடன் நகர் உலா வருவாள். ஒருமுறை அவர்கள்
தங்கள் நகர் உலாவிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள். கானகம் ஆரம்பமாகிவிட்டது.
அக்கானகத்தில் ஒரு அழகான இளைஞன் தன் கண்ணிழந்த பெற்றோருக்குச்
சேவை செய்வதைப் பார்த்தாள். அவனுடைய பணிவும் அன்பும் தொண்டுள்ளமும் சாவித்ரியைக் கவர்ந்தது.
அவன் சாளுக்கிய தேசத்து அரசன் சத்யவான் எனவும்
பகைவர்களுடன் நடந்த போரில் நாட்டைவிட்டு வந்துவிட்டார்கள் எனவும் அறிந்தாள்.
