தாயைக் காத்த தனயன்.( வினதையைக் காத்த கருடன்.)
தாய் சொல்லைத்
தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால் அதில் முதலிடம்
வகிப்பது கருடன் மட்டுமே. அவர் தாயான வினதைக்கு நேர்ந்த இக்கட்டு என்ன அதை அவர் எப்படிக்
களைந்து தன் தாயைக் காப்பாற்றினார் என்று பார்ப்போம் குழந்தைகளே.
கஸ்யபர் என்ற முனிவருக்கு
கத்ரு, வினதை என்று இரு மனைவிகள் இருந்தார்கள். வினதைக்குக் கருடன், அருணன் என்று இரு
மகன்களும், கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் மகன்களாகவும் பிறந்தார்கள். கத்ருவின் புதல்வர்களும்
வினதையின் புதல்வர்களும் தாய்ப்பாசம் மிக்கவர்கள். தங்கள் தாய் சொல்லைத் தட்டாதவர்கள்.