கவிதைப் பட்டறையில்
மூவர் உரை .. சிறு குறிப்புகள்.
தமிழ்நாடு இயல்
இசைச் சங்கத்தின் கவிதைப் பட்டறையில் ஒருநாள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில்
பேசப்பட்ட சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ( கிட்டத்தட்ட 2011 இருக்குமென
நினைக்கிறேன். குறிப்புகளைப் பார்த்தால் நான்தான் எழுதி இருக்கிறேன். ஆனால் பிராமியா, தெலுங்கா, மலையாளமா, கன்னடமா தெரியவில்லை. சிறு குறிப்பெல்லாம் குட்டிக் குறிப்பாக இருக்கிறது.
புரிந்தவரை புரிந்து கொள்ளுங்கள். J
விக்கிரமாதித்தன்
:- உரைநடையை மடக்கிய பாணி கவிதைகள் இப்போ அதிகம்.
க நா சு, புதுமைப்பித்தன்,
குபரா, தேவதச்சன், சுகுமாரன், தேவதேவன் ஆகியோர் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. உயிர்மை, உயிரெழுத்து, காலச்சுவடு ஆகியனவும்.