சகலகலா வல்லவர் கமல்ஹாசன்
ஜெர்மனியின் செந்தேன் மலரே, உன்ன விட, இஞ்சாருங்கோ, சுவாசமே,
என்னோடு காதலென்று, ஒரே நாள் உனை நான், அந்திமழை பொழிகிறது, எங்கேயும் எப்போதும், சுந்தரி
நீயும் சுந்தரன் நானும், இதழில் கதை எழுதும் நேரமிது, சிப்பி இருக்குது, மாயா
மச்சீந்த்ரா, காதலா காதலா இன்னும் பல நூறு பாடல்கள் சகலகலா வல்லவனான கமல்
நடிப்பில் நாங்கள் மயங்கிய பாடல்கள்.
பிறந்தது நவம்பர் 7, 1954. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின்
தலைவர். 4 தேசிய விருது, 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 19 ஃபிலிம்பேர்
விருதுகள், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள், கலைமாமணி, செவாலியே, கௌரவ முனைவர்
பட்டம், மேலும் உலகநாயகன், ஆஸ்கார் நாயகன் எனப் புகழப்படும் இவரைப் போத்தீஸ்
சுவரிலும் பிக் பாஸ் வீட்டிலும் காணப் பிடிப்பதில்லை.