முன்பு வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றையே கிச்சன் ஹெல்ப்பர்ஸ் என்று நினைத்திருந்தேன். அடுத்து டிஷ் வாஷர் போன்றவையும் ஜூஸர் மிக்ஸர் போன்றவையும் காய்கறியை சிப்ஸ், துருவுதல் போன்றவற்றுக்கு நறுக்குபவையும் வந்தன. இப்போது எண்ணற்றவை புழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை உபயோகித்துப் பார்த்தேன். ஆனாலும் அருகாமனை, காய் துருவி, தோல் சீவி போல் வரலை. பசங்களுக்கோ இவைதான் ஆபத்பாந்தவை.
வெங்காயத்தைத் தோலுரித்து நான்காக வெட்டிப் போட்டால் வெங்காயம் தக்காளித் திறக்கலையோ, முட்டை ஆம்லெட்டையோ ஒரு நிமிடத்தில் செய்திடலாம்.
ஆனா பாருங்க அதுல மேலே இருக்கும் கைப்பிடிதான் சில சமயம் தகறாறு.
கீழே மோட்டார் மேலேயே இந்த ஜாரை மாட்டி அதில் ஒரு கப் பால், ஒரு வாழைப்பழம், ஒரு துண்டு ஆப்பிள், ஒன்றிரண்டு ஸ்ட்ராபெர்ரி, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் போட்டு இந்த மிக்ஸியை ரன் பண்ணவிட்டு மேலே இருக்கும் ஜாரை அப்படியே கழட்டி எடுத்துட்டுப் போயிடலாம். தேவைப்படும்போது மூடியைக் கழட்டிட்டு ஜில் ஜில்லுன்னு ஃப்ரூட் மில்க்ஷேக் அருந்தலாம்.
இதையெல்லாம் பார்க்க எனக்கும் வாங்க ஆவலாய் இருக்கும். ஆனால் வாங்கி சீக்கிரமே உடைந்து போய் பயனற்றுப் போவதைப் பார்க்கும்போது மெல்ல மெல்ல அந்த ஆசைகள் விலகி விட்டன!
பதிலளிநீக்குஉண்மைதான் ஸ்ரீராம். நிறையப் பொருள் வாங்கி இப்படித்தான் ஆகிறது. தூக்கிக் கடாசாமல் அப்படியே அட்டைப் பெட்டிகளில் பரணில் உறங்குகிறது வேறு :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!